
Simple steps to fix digestive problems in tamil
செரிமான பிரச்சனையை சரி செய்யும் பாட்டி வைத்தியங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நம்மளுடைய மொத்த உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்வது செரிமான பகுதியாகும். அது சரியாக இயங்கினால் மட்டுமே உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இன்றைய உணவு முறை பழக்கத்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறது செரிமான பகுதி.
வயிற்றில் ஏற்படும் செரிமான கோளாறுகளை மருத்துவத்துறையில் டிஸ்பெப்சிய(Dyspepsia) என்றழைக்கப்படுகிறது.
சரியாக சாப்பிடாதவர்களுக்கு செரிமான கோளாறு இருப்பவர்களுக்கு வயிறு உப்புசமாக உணர்ந்தாலோ, வயிற்று வலி, அது செரிமான பிரச்சனையாக இருக்கலாம் ஒரு வேளை.
செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது அதிக காரத்தன்மை உணவு, சாப்பிட்டவுடன் படுப்பது, மன இறுக்கம், மன உளைச்சல், பதட்டம், மது அருந்துதல், புகை பிடித்தல், சரியாக வேக வைக்காத உணவுகள், அதிக சூட்டில் பொறிக்கப்பட்ட இறைச்சி, ஆகியவை செரிமான பிரச்சனைகள் ஏற்பட காரணிகளாக உள்ளது.
இரைப்பை புற்றுநோய்(Gastric cancer), இரைப்பை அலர்ஜி(Gastrointestinal allergies), பித்தப்பை கல்(gallbladder stone) கணைய அலர்ஜி(Pancreatic allergy) குடற்புண்(Ulcer) ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
செரிமான பிரச்சனைகள் இருந்தால் பின்வரும் அறிகுறிகள் இருக்கும்
வயிற்று உப்புசம்
வாய்வுத் தொல்லை
வயிற்றுப் போக்கு
பசியின்மை
நெஞ்சு எரிச்சல்
வாய்ப்புளித்தல்
வயிற்று வலி
வாய் துர்நாற்றம்
வாய் குமட்டல்
சோர்வு
இடுப்பு வலி
செரிமான பிரச்சனை குணமாக வீட்டு வைத்தியம்
எலுமிச்சை பழம்
சாப்பிட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் வயிறு எரிச்சல், மற்றும் வயிற்று வலி குறையும். இதில் இருக்கும் அசிடிக் அமிலம் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்கிறது.
சமையல் சோடா
வயிற்று அமிலத்தை சமன்செய்ய சமையல் சோடா சில நாட்களாகவே பயன்படுத்தப்படுகிறது மக்களால். செரிமானம் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு நிவாரணம் தரும்.
ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு டேபிள்ஸ்பூன் சமையல் சோடாவை தண்ணீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம் அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது நினைவில் வைத்துக் கொள்ளவும்.
இஞ்சி
உணவுடன் எப்பொழுதும் இஞ்சி சேர்க்க வேண்டியது கட்டாயம் அல்லது இஞ்சி தேநீர் தினந்தோறும் எடுத்துக் கொள்ளலாம் இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் செரிமான பிரச்சனைகளை சரிசெய்கிறது.
இஞ்சியில் வலி மற்றும் அலர்ஜி குணப்படுத்தும் தன்மையும் இருக்கிறது, இஞ்சி கிட்டத்தட்ட 5,000 ஆண்டுகள் பழமையான ஒரு மசாலாப் பொருளாக உள்ளது.
புதினா
குடல் தசைகளை மிருதுவாக்க புதினா உதவுகிறது, வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது, வாய் குமட்டலை சரிசெய்கிறது, சாப்பிட்ட பிறகு புதினா இலைகள் அல்லது புதினா தேநீர் குடித்து வரலாம்.
இலவங்கப்பட்டை
ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் செரிமான பிரச்சனையை இலவங்கப்பட்டை சரி செய்கிறது, இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது தேனில் கலந்து ஒரு நாளைக்கு 3 முறை பருகலாம்.
நெல்லிக்காய்
நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அதிலும் செரிமானப் பிரச்சனைகளும் சரியாகும் மற்றும் தலைமுடி பிரச்சினைகளும் அதிகமாக சரியாகும்.
Click here to view our YouTube channel
பெருஞ்சீரகம்
இரைப்பை நீர் சுரக்க பெருஞ்சீரகம் காரணமாக இருக்கிறது, இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது வறுத்து சாப்பிடலாம் அல்லது சுடுதண்ணீரில் கலந்து சாப்பிடலாம்.
How to cure bad breath under your mask in tamil
தேன்
பாக்டீரியாக்கள் உற்பத்தியை தடுப்பதன் மூலம் செரிமான பிரச்சனையை தேன் குணப்படுத்துகிறது.
தேனை அப்படியே சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம் அல்லது உங்களுக்கு பிடித்த எளிமையாக செரிமானம்யாக கூடிய உணவுடன் கலந்து சாப்பிடலாம்.
what are the reason waking up in the Midnight
தேன் ஒரு அற்புதமான மருந்தாக பண்டைய காலம் முதல் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.