Business

நஷ்டம் ஏற்படாத உணவு தொழில் வகைகள்..! Small food business ideas in tamil

Small food business ideas in tamil

Small food business ideas in tamil

நஷ்டம் ஏற்படாத உணவு தொழில் வகைகள்..!

நம் எல்லோருக்கும் பொருளாதார ரீதியாக சற்று பலமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம், ஏனென்றால் பொருளாதாரம் மட்டுமே ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும்.

ஒரு மனிதன் நிம்மதியாக உறங்குவதற்கும், சாப்பிடுவதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும், அவனுடைய பொருளாதாரம் அடிப்படையாக அமைந்துள்ளது.

இந்த அதி நவீன அறிவியல் உலகத்தில் பணம் சம்பாதிப்பது என்பது மிக எளிது ஆனால் அந்த பணத்தை சேமிப்பது அல்லது சரியான இடத்தில் முதலீடு செய்வது என்பது மிக கடினம்.

நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் மாதக் கடைசியில் உங்களிடம் பணம் இல்லை என்று நீங்கள் புலம்புவீர்கள்.

நீங்கள் வேலைக்கு சென்றால் அதை மட்டும் நம்பி இருக்க வேண்டாம், இரண்டு அல்லது மூன்று வழிமுறைகளில் இருந்து உங்களுக்கு பணம் வருவதற்கான வாய்ப்புகளை நீங்கள் எப்பொழுதும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த கட்டுரையில் நஷ்டம் ஏற்படாத சிறிய முதலீட்டில் தொடங்கக்கூடிய உணவுத் தொழில்களை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

Tea and Snacks Business

கிராமம் முதல் பெரிய நகரம் வரை இந்த டீக்கடை வணிகம் கொடிகட்டி பறக்கிறது,ஒரு மனிதன் மனஅழுத்தம் அல்லது மகிழ்ச்சியாக இருக்கும் போது மனிதர்கள் அதிகமாக விரும்புவது டி மற்றும் காபி போன்ற பானங்களை.

டீக்கடை தொழில் எப்பொழுதும் அதிகப்படியான வருமானத்தை கொடுக்கக்கூடிய தொழிலாக இருக்கிறது.

இந்த தொழில் செய்வதற்கு உங்களுக்கு முதலீடு 1 லட்சம் வரை தேவைப்படலாம்,இதை நீங்கள் வீடு அல்லது ஒரு தனி இடம் அமைத்து செய்யலாம்.

லாபம் வருடத்திற்கு குறைந்தது 3 முதல் 5 லட்சம் வரை கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

Snacks Business

எப்பொழுதும் லாபம் கொடுக்கக்கூடிய ஒரு அருமையான சிறு தொழில் என்றால் அது தின்பண்ட தொழில் தான்.

நீங்கள் இயற்கை முறையில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்களை வைத்து முறுக்கு, அதிரசம், லட்டு, மைசூர் பாக், ஜிலேபி, பன், பிரட் மற்றும் சில தின்பண்டங்களை வீட்டில் தயாரித்து.

அதை இணையதளம் அல்லது நேரடியாக விற்பனை செய்யலாம், வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருள் என்றால் மக்கள் அதிகப்படியான முன்னுரிமை கொடுப்பார்கள்.

Chocolate Business

உங்களுக்கு மிட்டாய் தயாரிப்பதில் ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக இந்த தொழில் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

குறைந்த செலவில் இந்த தொழிலை நீங்கள் வீட்டில் இருந்து செய்யலாம்.

இந்த தொழிலை நீங்கள் கடைக்கு விற்பனை செய்து அல்லது இணையதளம் மூலம் விற்பனை செய்யலாம் இதற்கான முதலீடு குறைந்தது 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்.

Cooking Oil Business

இந்த தொழிலில் நீங்கள் லாபத்தை பெற உங்களுக்கு மார்க்கெட்டிங் திறமை சேல்ஸ் திறமை இருக்க வேண்டும்.

உங்களுடைய திறமை பொறுத்து இதில் நீங்கள் அதிகப்படியான லாபத்தை சம்பாதிக்க முடியும்.

இதற்கு முதலீடு 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை தேவைப்படும், லாபம் 6 முதல் 8 லட்சம் வரை கிடைக்கும்.

Catering Service

உங்களிடம் சிறந்த திட்டமும் மற்றவர்களிடம் பேசும் திறனும் இருந்தால் நல்ல லாபத்தை இந்த தொழிலில் மூலம் நீங்கள் அதிகமாக பெற முடியும்.

அலுவலகத்திற்கு, திருமணத்திற்கு, என ஆர்டர் எடுத்து இந்த தொழிலை நீங்கள் வெற்றிகரமாக செய்யலாம்.

நீட் தேர்வில் தமிழக மாணவர் முதலிடம்..!

பான் கார்டில் முகவரியை மாற்றுவது எப்படி

பான் கார்டு பாதுகாப்பாக இருக்கிறதா

வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் செய்வது

தாமதமாக தூங்கும் நபர்களுக்கு விரைவில் மாரடைப்பு

பான் கார்டு புதிய விதிமுறைகள்

அடிவயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைக்க

பன்றி வளர்ப்பு தொழிலில் அதிக வருமானம்

What is your reaction?

Excited
1
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0