
Stealth Omicron coronavirus symptoms in tamil
சீனாவை அடுத்து அமெரிக்காவில் திடீரென்று தலைதூக்கும் ஸ்டெல்த் ஓமிக்ரோன் அறிகுறிகள் என்ன..!
சீனாவைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வழக்குகள் திடீரென அதிகரித்து வருகிறது, சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,280 கொரோனா வைரஸ் வழக்குகள் புதிதாக பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று உருவான பின்பு சீனாவில் ஒரே நாளில் அதிக அளவிலான வழக்குகள் பதிவாகி இருப்பது இது முதன்முறை.
அங்கு உள்ளூர் 3507 வழக்குகள் பதிவாகியுள்ளன வடகிழக்கு மாகாணமான சாங்சுன் பகுதியில் இந்த வழக்குகள் பதிவானது இதனால் மொத்தமாக சாங்சுன் மாகாணம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அங்கு 5,500 புதிய வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதனால் 4 மாகாணங்களில் அங்கு முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
ஸ்டெல்த் ஓமிக்ரோன் காரணமாக அங்கு இவ்வளவு பெரிய வழக்குகள் பதிவாகி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் ஓமிக்ரோன் BA.2 திரிபுதான் காரணம் ஆகும்.
தற்போது அமெரிக்காவிலும் ஸ்டெல்த் ஓமிக்ரோன் வேகமாக பரவி வருகிறது, அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 25,359 நபர்களுக்கு புதிய பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களில் இது அதிக அளவிலான பாதிப்பாகும், எனவே ஏற்கனவே உக்ரைன் போர் கச்சாஎண்ணெய் தட்டுப்பாடு காரணமாக.
அமெரிக்காவில் இப்போது பொருளாதார பாதிப்பு என்பது கடுமையாக ஏற்பட்டுள்ள நிலையில் இப்பொழுது ஸ்டெல்த் ஓமிக்ரோன் வழக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளது.
எங்கு எப்படி பரவுகிறது
முக்கியமாக நீயார்க், நியூஜெர்ஸி, விர்ஜின் தீவு, ஆகிய இடங்களில் அதிக அளவில் ஸ்டெல்த் ஓமிக்ரோன் பதிவாகி வருகிறது.
அங்க புதிதாக பதிவாகும் வழக்குகளில் 30 சதவீதம் இந்த ஸ்டெல்த் ஓமிக்ரோன் வழக்குகள்.
இதனால் விரைவில் அமெரிக்காவில் ஆதிக்கம் மிக்க வைரஸ்யாக ஸ்டெல்த் ஓமிக்ரோன் உருவெடுக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இது அமெரிக்காவில் 4ம் அலையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன
அமெரிக்காவில் தற்போது 23,796,184,நபர்கள் நோயாளிகளாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
இதுபோக ஜெர்மனியில் தினசரி 225,387வழக்குகள் பதிவாகி வருகிறது.
பிரான்சில் தினசரி வழக்குகள் 1 லட்சத்தை தாண்டியுள்ளது.
ஆர்டிஆர் பரிசோதனையில் உறுதி செய்ய முடியாது என்பதால் இதற்கு ஸ்டெல்த் ஓமிக்ரோன் என்று பெயர் உலக சுகாதார நிறுவனம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது இந்த வகையில் எஸ் ஜின் இருக்கிறது, இதனால் ஆர்டிபிசியல் சோதனையிலிருந்து கண்டுபிடிக்க முடியவில்லை இந்தியாவில் ஸ்டெல்த் ஓமிக்ரோன் வேகமாக பரவி வருகிறது.
உலகம் முழுவதும் அச்சம்
ஒவ்வொரு முறையும் இதற்கு தனியாக ஜின் சோதனை செய்ய வேண்டும்.
ஆனால் இதுவரை சீனாவில் பலி எண்ணிக்கை அதிகரிக்கவில்லை அதேபோல் ஸ்டெல்த் ஓமிக்ரோன் பாதித்தவர்களுக்கு வேகமாக தீவிரமான நோய் தாக்குதலுக்கு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் லேசான அறிகுறிகள் இதில் காணப்படுகிறது பலருக்கு மூச்சிறைப்பு, ஆக்ஸிஜன் அளவு குறைவு போன்ற அறிகுறிகள் பாதிப்பு ஏற்படுவதில்லை.
மற்றபடி தலைவலி, இருமல், மூக்கில் சளி, தொண்டை வறண்டு போதல், உடல் அதிக சோர்வு காணப்படுதல், லேசான காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, ஆகிய அறிகுறிகள் நோயாளிகளுக்கு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் என்ன நிலைமை
முன்னதாக ஜூன் மாதம் 4ம் அலை ஏற்படுமென ஐஐடி கான்பூர் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏசி பொருத்தாமல் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி.
ஆனால் இந்தியாவில் covid-19 பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு அதேபோன்று கடந்த 3ஆம் அலையின் போது 75 சதவீத பாதிப்புகள்.
Insomnia arc affecting your heart in tamil
BA.2 பாதிப்புகள் தான் இதனால் மீண்டும் இந்தியாவில் பரவும் வாய்ப்புகள் குறைவு, சீனாவில் முதியவர்களுக்கு குறைவாகவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது இதனால் அங்கு புதிய அலை ஏற்பட்டு இருக்கும்.