செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த ஷாக் அமலாக்கத்துறைக்கு மிகப்பெரிய வெற்றி..!Supreme Court allowed ED to investigate Senthil Balaji

Supreme Court allowed ED to investigate Senthil Balaji

Supreme Court allowed ED to investigate Senthil Balaji

நேஷனல் லெவல் மாறுகிறது செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த ஷாக் அமலாக்கத்துறைக்கு மிகப்பெரிய வெற்றி அடுத்த 5 நாளில் நடக்க போகும் மாற்றம்..!

செந்தில் பாலாஜியை அடுத்த 5 நாட்கள் கஸ்டடியில் எடுக்க அமலாக்க துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்.

இப்பொழுது செந்தில் பாலாஜி அமலாக்க துறையின் முழு கட்டுப்பாட்டில் வந்துள்ளார்,அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

செந்தில் பாலாஜி கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்றும்,உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு கூறியுள்ளது அவர் கைது செய்யப்பட்டதுடன் நீதிமன்ற காவலில் கொண்டு செல்லப்பட்டு விட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அடுத்த 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக உயர் நீதிமன்றம் இதே போல 8 நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில்எடுக்க அமலாக்க துறைக்கு அனுமதி வழங்கியது.

ஆனால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்ததால் காவலில் அவரை எடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் தான் மருத்துவமனையில் இருந்து நாட்களை விசாரணை நாட்களாக கருதக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வைத்த வாதம்.

உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது,அடுத்த 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

கடுமையான வாதம் முன்வைக்கப்பட்டது

அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில் இந்த வழக்கு பற்றி பேசும் முன் முக்கியமான ஒரு சர்வதேச விதி பற்றி நான் பேச வேண்டும்.

கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்க காலம் வரை உலகம் முழுக்க பல நாடுகள் மணி லாண்டரி குற்றச்சாட்டு காரணமாக சிரமப்பட்டு வந்தன.

இதனை தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து ஐநா மூலம் இதற்கு எதிராக கடுமையான விதிகள் கொண்டுவரப்பட்டது.

அதை மனதில் வைத்து இந்தியாவிலும் (PMLA) சட்டம் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டது,உலக நாடுகள் இதற்கு எதிராக கடுமையான சட்டம் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறது.

அதோடு ஐநா நாடுகள் ஒன்றாக சேர்ந்து இதற்காக Financial Action Task Force என்ற டாஸ்க் போஸ் ஒன்றையும் உருவாக்கியுள்ளது.

அதில் 40 விதிகளை கொண்டு வந்தது ஒவ்வொரு நாட்டின் சட்டமும் இந்த 40 விதிகளுக்கு கீழ் இருக்கிறது என்று பார்த்தது அதை வைத்து உலக நாடுகள் என்று தரம் பிரித்து.

பாகிஸ்தான் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பணியில் சரியாக செயல்படாத காரணத்தால் கிரே லிஸ்டில் உள்ளது.

விரைவில் கருப்பு லிஸ்டிற்கு சென்றுவிடும் ஆனால் நாம் விதிகளை முறையாக கடைப்பிடித்து வருகிறோம் உலக நாடுகளும் நம் விதிகளை கண்காணித்து வருகிறது.

நம்முடைய சட்ட நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது, அதனால் சட்ட ரீதியாக இது போன்ற வழக்குகளில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கடமை மத்திய அரசுக்கு உள்ளது.

நாட்டில் இருக்கக்கூடிய ஏழைகள் முதல் மிகப்பெரிய தொழிலதிபர்கள் வரை சந்தேகத்தின் அடிப்படையில் அல்லது ஆவணங்களின் அடிப்படையில் ஒரு நபரை கைது செய்வதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது.

அதேபோல் அவரிடம் கூடுதல் ஆதாரங்களை வாங்க எங்களுக்கு சட்டப்படி உரிமை இருக்கிறது.

அவரை நாங்கள் விசாரிக்க முடியாது என்றால்,அது எங்களுக்கு விசாரணை ஆணையத்தின் அடிப்படையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஒருவர் தவறு செய்ததாக தோன்றினால் எங்களால் அவரை விசாரிக்க முடியும் என்று இன்று அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வாதம் வைத்துள்ளார்.

அதன்படி வரும் 12ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

1000 fine if you have two PAN cards in tamil

Ather 450S Electric Scooter Specifications Price

How to apply new ration card in tamilnadu

New SP 160 Honda Unicorn Bike Specifications Price

What is your reaction?

Excited
2
Happy
0
In Love
0
Not Sure
1
Silly
0