
Suriya Peyarchi Palangal in tamil 2023
சூரிய பெயர்ச்சியால் ஜூலை 16 முதல் அடுத்த ஒரு மாதம் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன..!
வேத ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும் அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளில் ஏற்படும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன் இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார் சூரியன் ராசியை மாற்றும்போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கிறது.
இந்த நிலையில் சூரியன் 2023 ஜூலை 16ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார் இதனால் தமிழ் மாதமான ஆடி மாதம் பிறக்கிறது கடக ராசியானது சூரியன் நட்புறவு கொண்டிருக்கும் சந்திரன் ஆளும் ராசியாகும்.
கடக ராசிக்குள் சூரியன் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் அதுவும் அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனையும் சிலர் மோசமான பலனையும் பெறலாம்.
இப்போது கடக ராசிக்கு சூரியன் செல்வதால் 12 ராசிகளுக்கும் எப்படி தாக்கம் இருக்கும் என்பதை முழுமையாக பார்க்கலாம்.
மேஷம் ராசி
மேஷம் ராசியின் 4வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் இதனால் இக்காலமானது மேஷ ராசிக்காரர்களுக்கு சற்று சவாலானதாக இருக்கும்.
தாயாரின் உடல் நிலையில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட அறிவுறுத்தப்படுகிறது.
பணியிடத்தில் உடன் வேலை செய்யும் போதும் சிந்தித்து நிதானமும் வார்த்தையை கையாள வேண்டும்,இது போன்ற காலங்களில் சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
ரிஷப ராசி
ரிஷப ராசியின் 3வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் இதனால் இந்த காலத்தில் துணிச்சல் அதிகரிக்கும் எடுக்க முடிவுகளும் செய்யும் வேலைகளும் பாராட்டை பெறும்.
சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும் கடினமாக உழைத்தால் அதற்கான பலன்களுக்கு கிடைக்கும்,குடும்பத்தின் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு இடம் கொடுக்கக் கூடாது.
மிதுனம் ராசி
மிதுனம் ராசி 2வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் இதனால் இந்த காலத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக நீங்கள் இருக்க வேண்டும்.
இந்த காலத்தில் பிடிவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் நீதிமன்றம் வரை பிரச்சனைகளை கொண்டு செல்லலாம் பேசி தீர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
உங்களுடைய பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் கண்டிப்பாக தீரும்.
கடகம் ராசி
கடக ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார் இதனால் இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும்.
அரசு தொடர்பான வேலைகள் நிலுவையில் இருந்தால் அது இது போன்ற காலங்களில்வெற்றிகரமாக முடிவடையும்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும், சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களுடன் தொடர்பு எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்கும்.
சிம்மம் ராசி
சிம்மம் ராசியின் 12 வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் இதனால் இக்காலத்தில் அதிகப்படியான அலைச்சல்கள் சந்திக்க வேண்டிய நிலைகள் இருக்கும்.
நீதி பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடும் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும் ஆக்கப்பூர்வமான வேலைகளில் வெற்றி தானாக கிடைக்கும்.
கன்னி ராசி
கன்னி ராசியின் 11 வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் இதனால் இக்காலத்தில் சூரியனின் அருளால் நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
எடுக்க முடிவுகளும் செய்யும் வேலைகளும் பாராட்டை பெறும் புதிய வேலை தொடங்க இக்காலம் சாதகமாக இருக்கும்.
துலாம் ராசி
துலாம் ராசியின் 10வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் இதனால் இக்காலத்தில் சூரிய பகவான் பெரிய சாதனைகளை புரிய வைப்பார் இக்காலத்தில் உங்களின் யுத்திகள் அனைத்தும் நல்ல பலன்களை கொடுக்கும்.
பணி புரிபவர்களுக்கு காலம் சாதகமாக இருக்கும் முக்கியமாக காலத்தில் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.
அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவிகளை பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
விருச்சிகம் ராசி
விருச்சிகம் ராசியின் 9வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் இதனால் இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும் ஆன்மீகத்தில் ஆர்வம் பல மடங்கு அதிகரிக்கும்.
வணிகர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பினால் இக்காலம் சாதகமாக இருக்கும்.
துணிச்சல் அதிகமாக இருப்பதால் மோசமான சூழ்நிலைகளிலும் எளிதில் வெற்றி பெறுவீர்கள்,உங்களின் திட்டங்களை இது போன்ற காலங்களில் ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
தனுசு ராசி
தனுசு ராசியின் 8வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் இதனால் இக்காலத்தில் பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்வுக்கு கிடைக்கும்.
சமூகத்தில் மரியாதையும் அந்தஸ்து பல மடங்கு அதிகரிக்கும் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம் எதிராக சிலர் சரி செய்வார்கள் எனவே சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
நீதிமன்ற வழக்குகள் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் விஷயங்களை வெளியில் பேசி தீர்ப்பது நல்லதாக அமையும்.
மகரம் ராசி
மகரம் ராசியின் 7வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் இதனால் இக்காலத்தில் திருமண விவரங்களில் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
வியாபாரிகளுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பான விஷயங்களில் கூட உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
அரசாங்கத்தால் நடக்க வேண்டிய வேலைகள் வெற்றிகரமாக நடக்கும்.
கும்பம் ராசி
கும்பம் ராசியின் 6வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் இதனால் இக்காலமானது ஒரு வரப் பிரசாதமாக இருக்காது சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ஆனால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும் எடுத்த முடிவுகள் மற்றும் செய்த வேலைகளுக்கு பாராட்டப்படும்.
மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும்.
மீனம் ராசி
மீனம் ராசியின் 5வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார் இதனால் இக்காலத்தில் எதிர்பாராத நற்பலன்கள் கிடைக்கும் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும் வருமானத்தில் உயர்வு ஏற்படும் கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.
புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to download e PAN card in tamil 2023