Uncategorized

Symptoms and Cure for Chest Cold in tamil

Symptoms and Cure for Chest Cold in tamil

Symptoms and Cure for Chest Cold in tamil

நெஞ்சு சளி அறிகுறிகள் மற்றும் குணப்படுத்தும் இயற்கை வழிமுறைகள்..!

பொதுவாக நமது உடல் சூட்டையும், நச்சுத்தன்மை, உடலில் சமாளிக்கவும் தேவையற்ற கழிவுப் பொருட்களை தடுக்கவும், உடல் தனது தேவைக்காக தானாக உருவாக்கிக் கொள்வதே சளி என்னும் நீர் மூலக திராட்சியாகும்.

இந்த சளி இயல்பாக முறையாக வெளியேறும் போது உடலில் கழிவு பொருட்கள், நச்சுத்தன்மை, உடல் சூடு, போன்ற பிரச்சனைகளும் வெளியேறிவிடும் இதனால் எந்த ஒரு தீங்கும் உடலுக்கு ஏற்படாது.

ஆனால் நமது உடல் அறியாமையால் தேவையற்ற பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும் உடல் இயற்கைக்கு எதிராக போகும்.

இந்த சளி அளவு அதிகமாவதாலும் இயல்பாக வெளியேற்றும் வழிகள் தடுக்கப்படுவதால் கட்டிபட்டு போகிறது.

உடல் அந்த நச்சுத்தன்மையை வெளியேற்ற கடுமையாக போராட வேண்டியதாக இருக்கிறது.

கட்டிபட்டுபோன சளியை வெளியேற்றும் முயற்சியின் விளைவே இருமல், தும்மல், ஈளை, இளைப்பு, என பல்வேறு செயல்கள் நடக்க வேண்டியுள்ளது.

சரி இந்த பதிவில் நெஞ்சு சளி அறிகுறிகள் மற்றும் அதனை குணப்படுத்தும் வழி முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

Symptoms and Cure for Chest Cold in tamil

நெஞ்சு சளி அறிகுறிகள் என்ன

பொதுவாக நெஞ்சு சளி ஒருவேளை அதிகமானால் அதிகமான சளி, வறட்டு இருமல், இருமல், தும்மல், நெஞ்சு எரிச்சல், தொண்டை எரிச்சல்,ஈளை நோய், இளைப்பு.

தொண்டை கரகரப்பு, காய்ச்சல் வருவது போல் ஒரு உணர்வு, தலைவலி, தலைபாரம், மூக்கில் நீர் வடிதல், கடுமையான மூக்கடைப்பு.

உடல் அசதி, மூச்சுவிடுவதில் சிரமம், என பல வகையான அறிகுறிகள் உடலில் ஏற்படும்.

சரி இந்த நெஞ்சு சளி நீங்க இயற்கை வைத்தியம் என்னென்ன உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

நெஞ்சு சளி குணமாக இயற்கை வைத்திய முறைகள்

நெஞ்சு சளியை குணப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை கொஞ்சம் கொஞ்சமாக தான் நெஞ்சு சளியை குணப்படுத்த முடியும்.

இதற்கு சிறந்த இயற்கை வைத்தியம் பல வகை உள்ளது அவற்றில் எப்பொழுதும் முதன்மையாக இருப்பது.

எலுமிச்சை சாறினை இதமான சூட்டில் உள்ள நீரில் கலந்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வர நெஞ்சு சளி கொஞ்சம் கொஞ்சமாக குணமாக ஆரம்பித்துவிடும்.

நெஞ்சு சளி குணமாக

நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சுப் பகுதியில் தடவி வர சளி குணமாகும் குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன்பு இதை செய்ய வேண்டும்.

மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூளை பாலுடன் சேர்ந்து கலந்து சூடுபடுத்தி காய்ச்சி வாருங்கள்.

இந்த பாலை மிதமான சூட்டில் குடிக்க வேண்டும் இவ்வாறு காலை மற்றும் இரவு வேலைகளில் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் இந்த பிரச்சனை முற்றிலும் குணமாகும்.

நெல்லிக்காய் சாறில் மிளகு தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் நெஞ்சு சளி, மூக்கடைப்பு பிரச்சினை, நீர் ஒழுகுதல், போன்ற பிரச்சனையும் குணமாகும்.

இஞ்சி சாறு, துளசிச் சாறு, தேன், மூன்றையும் சம அளவில் கலந்து குடித்தால் சளி இருமல் மற்றும் நெஞ்சில் கபம் சேருதல் போன்றவை குணமாகும், குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன்பு இதை செய்ய வேண்டும்.

புதினா இலை, மிளகு இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி இருமல் நுரையீரல் கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

ஏசி பொருத்தாமல் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது.

மிளகையும், வெல்லத்தையும், வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் நுரையீரலில் நீர் கோர்த்தல் இருந்தால் ஆகியவை குணமாகும்.

Stealth Omicron coronavirus symptoms in tamil

தொண்டை கரகரப்புசுக்கு பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி, ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0