
Tamil health tips causes of stomach growling
உங்களுடைய வயிறு அடிக்கடி சத்தம் போடுகிறதா?அது பசி எடுப்பது என்று நினைக்க வேண்டாம்,அதுக்கு பின்னாடி இத்தனை ஆபத்துக்கள் மறைந்து இருக்கிறது..!
வயிற்றிலிருந்து சில நேரங்களில் திடீரென்று கரடு முரடான சத்தம் கேட்கும் நாம் பெரும்பாலும் அதை பசி என்று நினைத்துக் கொள்வோம்.
பசி எடுப்பதால் தான் வயிறு சத்தம் போடுகிறது என்று நண்பர்கள் சொல்லுவார்கள் ஆனால் வயிற்றில் இருந்து அது போல் சத்தம் வருவதற்கு பசி எடுப்பது மட்டும் முக்கிய காரணம் இல்லை.
குடல் மற்றும் வயிற்றில் ஏற்படும் சில பிரச்சனைகளும் இந்த சத்தத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
செரிமான கோளாறு வயிற்றுப்போக்கு வாயு தொல்லை போன்ற பல்வேறு காரணங்களால் வயிற்றில் சத்தம் ஏற்படும் இந்த சத்தத்தை எப்படி போக்கலாம்?
எப்பொழுது மருத்துவர் உதவிய நாட வேண்டும் என்பது குறித்து முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
குடல் சார்ந்த பிரச்சினைகள்
குடல் வழியாக உணவு திரவங்கள், செரிமான சாறுகள் மற்றும் வாயுக்கள் நகரும்போது வயிற்றில் ஏற்படும் இயக்கத்தால் இந்த மாதிரியான சத்தங்கள் ஏற்படும்.
இதன் காரணமாக செரிமான அமைப்பில் தசைகள் சுருங்கி சத்தத்தை ஏற்படுத்துகிறது,இப்படி வயிற்றில் ஏற்படும் சத்தத்திற்கு பல காரணங்கள் இருக்கிறது.
வயிற்றில் சத்தம் ஏற்பட முக்கிய காரணங்கள்
குடல் சுவர்களில் ஏற்படும் தசை சுருக்கத்தால் சத்தம் ஏற்படலாம்.
குடலில் இருக்கும் அதிகப்படியான திரவத்தால் சத்தங்கள் ஏற்படலாம்.
குடலில் உருவாகும் வாயுக்களால் சத்தங்கள் ஏற்படுகிறது.
சில சமயங்களில் குடல் செயல்பாடு மெதுவாக நடக்கும் போது குறைவான சத்தமும், குடல் செயல்பாடு அதிகரிக்கும் போது அதிகமான சத்தமும் ஏற்படும்.
அதிகமான சத்தம் சில சமயங்களில் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகளை ஏற்படுத்தும்.
ஆபத்து காரணிகள் என்னென்ன
வயிற்றில் ஏற்படும் சத்தம் அடிப்படையில் ஒருவித செரிமான பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
குடல் காற்று மற்றும் திரவத்தால் அடைக்கப்பட்டு இருக்கும்போது உங்களுடைய குடல் சுருங்கும், அப்போது உணவு பொருட்களை குடல் வழியாக நகர்த்தும் போது வயிற்றில் சத்தம் ஏற்படலாம்.
பசி மற்றும் பசியின்மை
வயிறு காலியாக இருக்கும் போது சிலருக்கு பசி எடுக்காமல் இருக்கும்போது சத்தம் ஏற்படும்.
வயிறு இரண்டு மணி நேரம் காலியாக இருக்கும் போது அதிக சத்தம் ஏற்படுத்துகிறது, அதேபோல் சிறு குடலில் ஏற்படும் சுருக்கங்கள் அதிகரிக்கும் போது, இதே போல் பிரச்சனை ஏற்படும்.
இரைப்பை குடல் பிரச்சினைகள்
இரைப்பையில் ஏற்பட பிரச்சனைகள் மலக்குடல் அலர்ஜி எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு அதிகப்படியான சத்தம் ஏற்படும்.
தசைப்பிடிப்பு, வயிறு வீக்கம், வயிற்றுப்போக்கு, மற்றும் வாயு பிரச்சனைகள், ஆகியவையும் இதற்கு முக்கிய காரணிகளாக இருக்கிறது.
உணவு அலர்ஜி
உணவுகளால் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் வயிற்றில் சத்தம் ஏற்படும், ஏனெனில் உணவு அலர்ஜி ஏற்படும் போது, அதன் காரணமாக செரிமான செயல்பாடுகள் குறைந்து செரிமான மண்டல பாதிக்கப்படும்.
குறிப்பாக குளூட்டான் உள்ளிட்ட பசையை அலர்ஜி பால் பொருட்களால் உண்டாகும் அலர்ஜி, பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் அதிகமாக எடுக்கும் போது ஏற்படும் ஆகியவற்றால் வயிற்றில் சத்தம் ஏற்படுகிறது.
சுவாசப் பிரச்சினைகள்
ஆஸ்துமா, வீசிங், உள்ளிட்ட சுவாசம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களுக்கு நுரையீரல் தொடர்ந்து பிரச்சினைகள் இருக்கும் போது நுரையீரலில் சளிக்கட்டு ஆகியவை இருக்கும் போது வயிற்றில் இது போன்ற சத்தங்கள் ஏற்படும்.
சுவாசிக்கும் போது மிக குறைந்த அளவு ஆக்சிஜன் ரத்தத்தில் கலந்ததால் செரிமான செயல்பாடுகளில் தடைகள் ஏற்படும், இதனாலும் குடலில் இரைச்சல் போன்ற சத்தம் ஏற்படுகிறது.
குடலில் அடைப்பு ஏற்படுதல்
குடலில் ஏதேனும் அடைப்பு ஏற்படும் போது வயிற்றில் அதிகப்படியான சத்தம் ஏற்படும்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு.
சில சமயங்களில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு அல்லது ஜீரணம் அடைந்த பிறகு வரும் கழிவுகளால் மலக்குடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும்போது இந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும்.
கடுமையான வயிற்று வலி, வாந்தி, பசியின்மை, வயிற்று வீக்கம், வாய்வு மற்றும் மலம் கழிப்பதில் பிரச்சனை போன்ற பல்வேறு குடல் சம்பந்தமான பிரச்சனைகளால் வயிற்றில் சத்தம் ஏற்படும்.
வயிற்றில் சத்தம் வராமல் தடுப்பது எப்படி
அதிகப்படியான மது அருந்துதல்
பீன்ஸ் வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல்
ப்ராக்கோலி,முட்டைக்கோஸ், காலிபிளவர், வெங்காயம், காளான் உள்ளிட்ட வாய்வை ஏற்படுத்தக்கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.
Rahu ketu peyarchi rasi palangal rishaba 2023
மூன்று வேலையாக எடுத்துக் கொள்ளும் உணவை பிரித்து ஆறு வேலையாக எடுத்துக் கொள்ளலாம்.
உணவுகளை மிக மெதுவாக மென்று சுவைத்து சாப்பிட வேண்டும்.
கார்பனேட் பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
செயற்கை இனிப்பு சுவையூட்டிகளை தவிர்த்துவிடுங்கள் சுவாசப் பயிற்சி மேற்கொள்ளலாம்.