Uncategorized

Tamil nadu 3 days food festival 2022 in chennai

Tamil nadu 3 days food festival 2022 in chennai

Tamil nadu 3 days food festival 2022 in chennai

ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 3 நாட்கள் உணவு திருவிழா, எங்கு நடைபெறுகிறது, எப்படி நடைபெறுகிறது..!

தமிழகத்தில் ஆகஸ்ட் வருகின்ற 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சென்னை தீவு மைதானத்தில் மூன்று நாட்கள் உணவு திருவிழா நடைபெற உள்ளது.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையும் ஈட் ரைட் இந்தியாவும் இணைந்து நடத்தும், இந்த விழாவில் கடைசி நாளன்று நடை பயணமும் அடங்கும்.

ஈட் ரைட் என்பது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மூலம் இந்தியாவில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும்.

வாழ்க்கைமுறை நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு, எதிர்மறையான ஊட்டச்சத்து போக்குகளை எதிர்த்துப் போராடுவதற்கும், எடுக்கப்படும் முன்முயற்சி செயலாகும்.

ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கையில் சிங்காரச் சென்னை உணவு திருவிழா 2022ல் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவி குழுக்களும் தங்களது சமையல் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை இந்த உணவுத்திருவிழா வழங்கும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

பாரம்பரிய சமையல் உணவுகள்

இந்த திருவிழாவில் ராகி புட்டு முதல் முடக்கத்தான் தோசை வரை பல்வேறு பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெறும்.

உணவு திருவிழா காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும், அதிகாரிகள் கூற்றின்படி 3 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நியமிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் இந்த நிகழ்வு கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது ஆனால் நோய் தொற்று காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது என்று அறிவித்தார்.

2019 ஆம் ஆண்டில் நாங்கள் மதராசபட்டினம் உணவு திருவிழா என்ற பெயரில் ஒரு உணவுத் திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்திருந்தோம்.

இந்த திருவிழாவில் கிட்டத்தட்ட 90% பாரம்பரிய உணவு வகைகளாக இடம்பெறும் என திட்டமிட்டிருந்தோம் இது ஒரு உணவு கண்காட்சி இருக்கும்போல ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் இந்த உணவுத் திருவிழாவை மாவட்டங்கள் வாரியாக நடத்துவது போல் வடிவமைத்து இருந்தோம்.

ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக அந்த நிகழ்ச்சி முற்றிலும் தடைபட்டது இம்முறை தோராயமாக 150 ஸ்டால்கள் அமைக்கப்படும்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் சுமார் 10 ஸ்டால்களை வைக்க உள்ளோம், உணவு திருவிழாவில் பல முக்கிய பிரமுகர்கள் இடம் பெறுவார்கள் என அவர் அறிவித்துள்ளார்.

Tamil nadu 3 days food festival 2022 in chennai

பிரபலமான உணவுகள் என்ன

இந்த உணவுத் திருவிழாவில் குழந்தைகளும் தங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் வழங்கப்படும்.

இதில் பார்வையாளர்களுக்கு முற்றிலும் இலவசம் என்றும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உட்பட.

அனைத்து பிரபலமான தமிழ்நாட்டு உணவுகளும்,உணவு திருவிழாவில் கலந்து கொள்ள அதுமாதிரி அளிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி அறிவித்துள்ளார்.

சர்க்கரை நோய் மற்றும் ஊளை சதைகள் குறைய இதை தொடர்ந்து சாப்பிடுங்கள்..!

உணவு திருவிழா தடை செய்யப்பட்டது

சில மாதங்களுக்கு முன்பு ஆம்பூர் மாவட்டத்தில் நடைபெறவிருந்த உணவுத் திருவிழா பல்வேறு சர்ச்சைகள் கேள்விகள் காரணமாக தடை செய்யப்பட்டது.

காரணம் அதில் சாதி, மத, இன பாகுபாடு, இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினார்கள்.

Heart attack symptoms jaw pain in tamil

இதனால் தமிழக அரசு உடனடியாக உணவு திருவிழாவை ரத்து செய்தது, இந்த முறை அனைத்து பாரம்பரிய உணவுகளும் கலந்து கொள்ளும் என்ற அறிவிப்பின் மூலம் இந்த உணவுத் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது.

What is your reaction?

Excited
1
Happy
1
In Love
1
Not Sure
1
Silly
0