செய்திகள்

சுமார் 30000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..! Tamil Nadu 30000 new job vacancy announced

Tamil Nadu 30000 new job vacancy announced

Tamil Nadu 30000 new job vacancy announced

சுமார் 30000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் பன்னாட்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதால் தற்போது 30000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா அரசு விழாவாக சிறப்பான முறையில் நடைபெற்றது.

அதில் முதல்வர் ஸ்டாலின் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதியை நிலைநாட்டு விதமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வண்ணம்.

புதிய திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் முதல் 100 பயனாளிகளுக்கு ரூபாய் 57.55/-கோடி மதிப்பீட்டில் தொழில் தொடங்க ரூபாய் 18.94/-கோடி மானியத்திற்கான நல திட்டத்தினை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த திட்ட மூலம் தொழிற்சாலைக்கான நிலம் கட்டடம் இயந்திரத் தளவாடங்கள் மற்றும் ஒரு சுழற்சிக்கான நடைமுறை மூலதனம் ஆகியவற்றிற்கான மதிப்பில் 35 விழுக்காடு முதலீட்டு மானியத்துடன் கடன் பெற்றிட வழிவகை செய்யப்படுகிறது.

மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொழில் நிறுவனங்களில் தேவையானவற்றை கருத்தில் கொண்டு.

செங்கல்பட்டு மாவட்டம் கொடூர் திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் மதுரை மாவட்டம் சத்யமங்கலம் ஆகிய இடங்களில்.

262.03 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 153.22/- கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள மூன்று தொழில்பேட்டைகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து புதிய புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது

பல திட்டங்களை அவர் அறிமுகம் செய்து இருக்கிறார் அதன்படி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த விழாவில் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில்.

ரூபாய் 1723.05/- கோடி மதிப்பில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் தமிழகத்தில் சுமார் 30,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குவியும் முதலீடுகள்

Tata Electronics,Mitsubishi,OLA,Simple Energy, Hyundai Electric car, iPhone Manufacturing

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் இது போன்ற மிக முக்கியமான பன்னாட்டு நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகளை தொடர்ந்து முதலீடு செய்து வருவதால்.

தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது குறிப்பாக கிருஷ்ணகிரி ஓசூர் பகுதிகளில் பன்னாட்டு நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வாகன உற்பத்தி தொடங்க ஒப்பந்தம் புரிந்துள்ளது மற்றும் தொழிற்சாலையும் தொடங்கப்பட்டுள்ளது.

இதனால் தர்மபுரி கிருஷ்ணகிரி போன்ற வறட்சி மாவட்டங்களில் அதிக அளவு புதிய வேலைவாய்ப்புகள் இப்பொழுது உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து புதிய தொழிற்சாலைகளும் தொழில் பூங்காக்களும் இப்பொழுது உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மத்திய தமிழகத்தில் தொழில் பூங்காக்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

திருச்சி, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் புதிய தொழில் பூங்காக்கள் மூலம் பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் அதிக அளவில் புதிய நிறுவனங்களை தொடங்கியுள்ளது.

இதனால் அதிக அளவில் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது, இனிவரும் நாட்களில் அதிக இளைஞர்கள் சென்னை மாநகரத்தை மட்டும் நம்பி இருக்க வேண்டிய சூழல் மாற்றப்படும்.

ஏனெனில் சென்னையில் வாகன நெரிசல் சென்னையில் பல்வேறு சூழ்நிலைகள் பிரச்சனைகள் இருப்பதால் தமிழக அரசு இப்பொழுது அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளது.

என்னவென்றால் மத்திய தமிழகத்தில் அதிக அளவில் தொழிற்சாலை கொண்டு வர வேண்டும் என ஒரு அதிரடி முடிவை எடுத்து அதற்கான புரிந்து ஒப்பந்தமும் நடைபெற்று வருகிறது.

Joining our WhatsApp group

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

TN rs 1000 scheme eligible women list

TN rs 1000 monthly assistance for women benefits

TN rs 1000 scheme ration card list details

TN Women Rs 1000 scheme details new update

What is your reaction?

Excited
1
Happy
2
In Love
0
Not Sure
0
Silly
1