
Tamil Nadu government bans online gambling
ஆன்லைன் சூதாட்டம் தடை அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் விரிவான முழு தகவல்கள்..!
தமிழகத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட திரு என் ஆர் ரவி அவர்கள் முதல் முறையாக தமிழக அரசு நிறைவேற்றிய ஒரு சட்டத்திற்கு.
காலதாமதமின்றி ஒரே நாளில் ஒப்புதல் அளித்துள்ளது இதுவே முதல் முறை.
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் போர்க்கால அடிப்படையில்.
ஆன்லைன் ரம்மி காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள் பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு கூட இளைஞர்கள் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இது தமிழகத்தின் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது காரணம் இளைஞர்கள் இழப்பது அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை.
இருப்பதால் இதனை தாங்க முடியாமல் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதிலும் இருந்து ஒரே குரலில் குரல்கள் எழுப்பப்படுகிறது.
கடந்த ஆட்சியில் இருந்த அதிமுக இதற்கு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது, ஆனால் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றம் சென்று இந்த சட்டத்தை தடை செய்தது.
தடை சட்டம் அமலுக்கு வருகிறது
ஆன்லைன் விளையாட்டுகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து இருந்தது.
மேலும் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் ஆன்லைன் நிறுவனங்களிடமும் கருத்து கேட்கப்பட்டது.
இதனையடுத்து இது தொடர்பான அவசர சட்டத்திற்கு கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
ஆளுநர் மாளிகை அளித்த ஒப்புதல்
இந்த சூழலில் ஆன்லைன் விளையாட்டுக்களை தடைசெய்யும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி இந்த தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அறிவித்த நிலையில் இது தொடர்பாக அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 1ஆம் தேதி இது தொடர்பான கோப்பு ஆளுநர் மாளிகை சென்றதாகவும் இதற்கு ஆளுநர் அன்றைய தினமே ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.
நிரந்தர சட்டம் எப்போது அமலுக்கு வருகிறது
பணத்தை வைத்து சூதாடும் விளையாட்டுகளுக்கு இந்த சட்டம் மூலம் தடை விதிக்கப்படுகிறது.
இதன் மூலம் உடனடியாக ஆன்லைன் விளையாட்டு சட்டங்களுக்கு தமிழகத்தில் தடை அமலுக்கு வரும்.
அதே நேரம் வரும் அக்டோபர் 17ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்.
அன்றைய தினமே இதுதொடர்பான இந்த சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்படும் என்று திமுக சார்பில் ஒரு அறிக்கை இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக கொடுத்துள்ள விளக்கம்
அதிமுக சார்பில் இப்பொழுது ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பான் கார்டு தொலைந்து விட்டால் சில நிமிடங்களில் e-PAN CARD டவுன்லோட் செய்வது எப்படி..!
அதாவது இந்த சட்டம் நிறைவேற்றப்படுவது மகிழ்ச்சியான செய்தி ஆனால் மிகுந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை வருடங்களாக திமுக அரசு என்ன செய்தது இப்பொழுது இந்த சட்டத்தை நிறைவேற்றுவது மகிழ்ச்சியான செய்திதான்.
How to get new 5G sim card and how to change 4 G to 5G
ஆனால் பல உயிர்கள் இதனால் போயுள்ளது இதற்கு யார் என்ன பொறுப்பு என அதிமுக சார்பில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் இந்த சட்டத்திற்கு தடை செய்ய முடியாத அளவிற்கு சட்டம் வலுவானதாக இருக்க வேண்டும் எனவும் அதிமுக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.