
Tamil Nadu omicron affected list
ஓமிக்ரான் பாதிப்பில் தமிழகத்திற்கு 3வது இடம் திடீரென்று உயர்ந்த தமிழகம்..!
இந்திய அளவில் ஓமிக்ரான் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் திடீரென்று 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தமிழகத்தில் ஓமிக்ரான் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து அதிர்ச்சியை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
இதை பற்றி தெளிவான ஒரு அறிக்கையை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
சென்னையில் அதிகபட்சமாக ஓமிக்ரான் 26 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் டெல்டாவின் நோய் பிடியில் இருந்து இந்தியா இப்பொழுது மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாட்டிற்குள் நுழைந்து விட்டது.
இந்தியா முழுவதும் இதுவரைக்கும் 260க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட உள்ளார்கள்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65 நபர்கள் டெல்லியில் 64 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், தமிழகத்தில் ஒரே நாளில் 33 பேருக்கு இந்த நோய் தொற்று உறுதியாகி.
தமிழ்நாடு இந்திய அளவில் 3ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தெலுங்கானாவில் 24 கர்நாடகாவில் 19, ராஜஸ்தானில் 21 கேரளா 15,குஜராத் 14, ஜம்மு-காஷ்மீர் 3 ஒடிசா 3, உத்திரபிரதேசம் 2,ஒடிசா மற்றும் சண்டிகார்1 மேற்குவங்காளத்தில் 1,உத்தரகண்ட்1, இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இந்தியாவில்.
தமிழ்நாட்டில் திடீரென உயர்ந்த எண்ணிக்கை
தமிழ்நாட்டில் மேலும் 33 நபர்களுக்கு ஓமிக்ரான் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது, புதிதாக பாதிக்கப்பட்ட 33 நபர்களின் 3 நபர்கள் தமிழ்நாட்டில் வசிக்கும் நபர்கள்.
ஒருவர் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்,இந்த 4 பேரை தவிர மற்ற நபர்கள் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த நபர்கள் என அறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஓமிக்ரான் அதிகரிப்பதற்கு என்ன காரணம்.
வெளிநாடுகளிலிருந்து வந்த 114 நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தோற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் 33 நபர்களுக்கு ஓமிக்ரான் நோய்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
57 நபர்களுக்கு ஜீன் மாற்றம் ஏற்பட்டது, 57 நபர்களுடன் தொடர்பில் இருந்த 3 பேர் என மொத்தம் 60 நபர்களுக்கு ஓமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவில் 33 நபர்களுக்கு ஓமிக்ரான் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 33 நபர்கள் பாதிக்கப்பட்டது அடுத்து தமிழ்நாட்டில் ஓமிக்ரான் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 திடீரென உயர்ந்தது.
எங்கு, எப்படி, எவ்வளவு,
ஓமிக்ரான் தொற்று ஏற்பட்ட 34 நபர்களும் முதல் நிலை பாதிப்பு மட்டுமே உள்ளது, என்று அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட 34 நபர்களில் 26 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், மதுரையில்4 நபர்களுக்கு, திருவண்ணாமலை 2 நபர்களுக்கு, சேலத்தில் ஒருவருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மிக மிக அவசியம்
விமான நிலையங்களை கண்காணிக்கும் பணி தொடர்ந்து அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஓமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறு அறிகுறிகள் மட்டுமே தென்பட்டுள்ளது பரவல் மிக மிக வேகமாக இருக்கும் ஆனால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று மருத்துவ நிபுணர்கள் கருத்தாக உள்ளது.
முக்கிய திருமண பொருத்தங்களைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
மக்கள் அச்சப்படாமல் தங்களை தாங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் முகக்கவசம் அணிய வேண்டும், தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும்.
Nattu Kozhi Valarpu Scheme Details in tamil
அரசாங்கம் அறிவிக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்றினால் மறுபடியும் ஊரடங்கு உத்தரவை தவிர்த்து விடலாம்.