Uncategorized

Tamil Nadu receives heavy rainfall in December

Tamil Nadu receives heavy rainfall in December

Tamil Nadu receives heavy rainfall in December

தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஒரு முக்கிய எச்சரிக்கை..!

வடகிழக்கு பருவமழை கடந்த 1901ம் ஆண்டிற்கு பிறகு நவம்பர் மாதத்தில் அதிகமாக கொட்டி தீர்த்து உள்ள நிலையில்.

இப்பொழுது நடைபெறும் டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது 132 சதவீதத்திற்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும் அதேபோல் அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கும்.

இந்த மழைப் பொழிவு இயல்பான அளவாக இருந்தால்தான் விவசாயம் நல்ல முறையில் செழிக்கும், கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை பொழிவு இயல்பான அளவை விட அதிகமாகவே பல பகுதிகளில் பெய்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் நவம்பர் மாதத்தில் மிக கனமழை பெய்து உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த நவம்பர் மாதத்தில் 11 அதிதீவிர கனமழை பொழிவுகளும், 168 மிக கனமழை பொழிவுகளும், 645 கனமழை பொழிவுகளும், பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதிக கனமழையால் பாதிப்பு

இந்த ஆண்டு அதிக கனமழை காரணமாக தென்னிந்திய மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவில் 160 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நவம்பரில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமாக மிக அதிக கனமழைப்பொழிவு இருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதிக கனமழை பொழிவுகள்

1901 ஆம் ஆண்டுக்கு பிறகு நவம்பர் மாதத்தில் மிக அதிக மழை பதிவாகி இருப்பதாக கருதப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இயல்பான மழைப்பொழிவு 8.25 சென்டிமீட்டர் வரை இருக்கலாம் ஆனால் 160 சதவீதம் அதிகமாக உள்ளது.

23.7 சென்டிமீட்டர் மழை இந்த ஆண்டு பதிவாகியுள்ளது தென்னிந்தியாவில் டிசம்பர் மாதம் மழை பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதிகமான மழைப்பொழிவு

டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் ஆந்திரபிரதேசம் கடலோரப் பகுதிகள், தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு, புதுவை மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பொழிவு இருக்கும்.

என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது, ஆந்திரா, ராயலசீமா, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, உள்ளிட்ட இடங்களில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்யக்கூடும்.

அதிக மழை எதிர்பார்க்கலாம்

இப்பொழுது நடக்கும் டிசம்பர் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக 132 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதே நேரத்தில் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் மழை  இயல்பை விட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வரும் கோடைகாலத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் வீட்டில் செய்யக்கூடிய சுயதொழில் வாய்ப்புகள்..!

இப்பொழுது அதிகமாக கொட்டி தீர்த்த கன மழையால் அணைகள் நிரம்பி ஆறுகளில் எல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Murungai keerai powder for hair health in tamil

குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர், இந்த நிலையில் இன்னும் பல பெரும் மழைகளை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்ற புதிய கவலை எழுந்துள்ளது.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
1