
Tamil Nadu youths are kidnapped in Myanmar
வெளிநாடு வேலை என்று சொல்லி கடத்தி செல்லப்படும் தமிழக இளைஞர்கள் பகீர் கிளப்பும் அதிர்ச்சி ரிப்போர்ட்..!
தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு கொண்டுசெல்லப்படும் இளைஞர்கள்.
மியான்மாரில் விற்பனை செய்யப்பட்டு அவர்களை கொடுமைப்படுத்துவதாக ஒரு தகவல் வெளியாகி மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மர் நாட்டில் கடத்தி செல்லப்பட்டு துன்புறுத்தப்படும் தமிழக இளைஞர்களை.
மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து உடனடியாக மீட்க வேண்டும் என தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தாய்லாந்து நாட்டில் வேலை ஏற்படுத்தி தருவதாக கூறி தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய இரு இடங்களில்.
தமிழக இளைஞர்களை நூற்றுக்கணக்கான மியான்மர் நாட்டிற்கு மாபியா கும்பல்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட தமிழக இளைஞர்கள் மியன்மார் நாட்டில் உள்ள மியவாடி என்கின்ற எல்லைப்பகுதியில்.
சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றும் ஆயுதம் தாங்கிய கும்பல்கள் மூலம் ஆள்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையின்மை பிரச்சனை தலைவலியை ஏற்படுத்துகிறது
இந்தியாவில் வேலையின்மை பிரச்சனையை பயன்படுத்தி குறிப்பாக கிராமப்புற மற்றும் ஏழ்மையான இளைஞர்களை குறிவைத்து இந்த வேலை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை போன்ற பெருநகரங்களில் சிறிய தொகைக்கு கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் இருக்கும் பொறியியல் பட்டதாரிகள் அதிக அளவில் வேலை செய்து வருகிறார்கள்.
இவர்களை குறிவைத்து ஒரு மாஃபியா கும்பல்கள் கடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏஜென்டுகாளால் ஏமாற்றப்படும் இளைஞர்கள்
இந்த சூழலை பயன்படுத்தி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கவர்ச்சி விளம்பரங்களை செய்யும் ஏஜென்டுகள்.
தமிழ்நாடு, புதுச்சேரி, இளைஞர்களை நல்ல வேலை நல்ல ஊதியம் வாங்கி தருவதாக கூறி தாய்லாந்து நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் அவர்களை மியான்மர் நாட்டில் உள்ள மியாவாடி என்ற பகுதிக்கு கடத்தி செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளதுடன் சட்டவிரோத பணிகளை செய்ய நிர்பந்தம் செய்து அடித்து சித்தரவதை செய்துள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் வாயிலாக.
தமிழர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு இருப்பதை கடுமையாக அடித்து உதைத்து இருப்பதை கண்டறிய முடிகிறது.
உடனடியாக இளைஞர்களை மீட்க வேண்டும்
பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் பெற்றோர்களும் மிக அதிக அளவில் உள்ளனர் இதுபோன்ற பெற்றோர்களை பார்க்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது.
உடனடியாக மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இளைஞர்களை மீட்க வேண்டும் அவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை மத்திய மாநில அரசுகள் கொடுக்க வேண்டும்.
போலியான ஏஜெண்டுகளை கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
வேகமாக பரவும் இன்புளுயன்சா என்ன செய்ய வேண்டும்,
இதுபோல் மேலும் நடக்காமல் இருப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற இளைஞர் குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
A new twist in the Kallakurichi school girl case
என்ற செய்தி அடங்குவதற்குள் தமிழக இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் வெளியாகி மிகப்பெரிய ஒரு அச்சத்தை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.