
Tasmac case in Madras High Court 2023
டாஸ்மாக் நிறுவனம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் இனி மறைக்கக் கூடாது ஹைகோர்ட் உத்தரவு பெரிய திருப்பம் மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!
டாஸ்மார்க் நிறுவனம் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது என்ற முழு விவரங்களையும்.
தகவல் உரிமை சட்டத்தின் கீழ் எப்படி விளக்கு கோர முடியும் என்றும் அதற்கு விளக்கம் அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக்கில் மது விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம், ஊழியர்களுக்கு சம்பளம், கடை வாடகை, உள்ளிட்ட செலவுகள் குறித்தும்.
மது உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு மதுபானங்கள் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது,என்பன குறித்து முழு விவரங்களையும் கேட்டு கோவை சேர்ந்த பொதுநல வழக்கறிஞர்.
லோகநாதன் என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார்.
மதுபான விற்பனை மூலம் கிடைக்க வருமானம்,ஊழியர்களின் சம்பளம்,உள்ளிட்ட செலவுகள் குறித்த விவரங்களை வழங்கிய டாஸ்மாக் நிறுவனம்.
மூன்றாம் நபரின் வர்த்தகம் சம்பந்தமான விவரங்களை வெளியிட முடியாத என தெரிவித்தது,எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.
என்ற விவரங்களை டாஸ்மாக் நிறுவனம் வழங்க மறுத்துவிட்டது, இதனை எதிர்த்து தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்.
எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து என்ன விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது என முழு விவரங்களையும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
இதை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மூன்றாவது தரப்பின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் தகவல் உரிமைச் சட்டபிரிவின்படி இந்த தகவல்களை வழங்க முடியாது எனவும்.
இந்த தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கு பெற்றவை எனவும் டாஸ்மாக் தரப்பு தெரிவித்திருந்தது.
அதன்பிறகு தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மட்டுமே மதுபான விற்பனையில் ஈடுபடுகிறது மதுபானம் கொள்முதல் செய்ய எந்த டெண்டரும் விடப்படுவதில்லை.
நேரடியாக உற்பத்தி நிறுவனங்களில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது இந்த சூழலில் எப்படி வர்த்தக பாதிக்கப்படும் என நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை தமிழக அரசை நோக்கி எழுப்பினார்கள்.
எந்த அடிப்படையில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவல்கள் விளக்கு பெற்றவை என விளக்கம் அளிக்க டாஸ்மார்க் நிறுவனத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
இதன்பிறகு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மது பிரியர்களுக்கு நல்லது நடக்குமா
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் நிறுவனத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடப்பதாகவும் அடிப்படை விலையை விட அதிக தொகை கேட்கப்படுவதாகவும்.
தொடர்ந்து புகார்களும் இணையதளத்தில் இது குறித்து வீடியோக்களும் வெளியாகி வருகிறது தினம்தோறும்.
போலியான மதுபானங்களும், காலாவதியான மதுபானங்களும், அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக நேரடியாக மதுபிரியர்கள் புகார் தெரிவித்தார்கள்.
இது எப்பொழுது தீர்க்கப்படும் அடிப்படை விலையை விட அதிகப்படிய விலை கேட்கக்கூடாது என மதுபிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Foods that prevent heart disease in tamil
TN provides loan assistance to start business
How to download e PAN card in tamil 2023