
TATA NANO Electric Car Price In tamil nadu
இரண்டு சக்கர வாகனம் பயன்படுத்தியது போதும் வருகிறது (TATA NANO) எலக்ட்ரிக் கார் அனைவரும் வாங்க முடியும்..!
இந்தியாவில் மிகவும் மலிவான மின்சார கார்களைத் தேடுகிறீர்களா,முழுமையாகத் தயாராக இருங்கள், Tata Nano EV இன் புதிய EV பதிப்பு சந்தையில் வர உள்ளது.
இந்தியாவில் இப்பொழுது சிறிய ரக எலக்ட்ரிக் கார்களுக்கு அதிக வரவேற்பு நடுத்தர மக்களிடம் இருக்கிறது.
கார் வாங்க வேண்டும் என்பது அனைத்து நபர்களின் கனவாக இருக்கிறது, இதனை ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே நினைவாக்குகிறது.
குறிப்பாக டாடா மாருதி (Tata Maruti,)போன்ற நிறுவனங்கள் ஏழை எளிய மக்களும் கார் பயன்படுத்தக்கூடிய வகையில் புதிய புதிய மாடல்களை வெளியிட்டு வருகிறது.
உலகில் மிகக் குறைந்த விலையில் சிறிய ரக காரை அறிமுகம் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது Tata நிறுவனம்.
இப்பொழுது இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம், எலக்ட்ரிக் கார், என்பது அதிகமாக விற்பனையாக கூடியதாக இருக்கிறது.
ஏனென்றால் எரிபொருளின் விலை உச்சகட்டத்தில் இருக்கிறது, வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் கார், பஸ், இரண்டு சக்கர வாகனம், போன்ற வாகனங்கள் அனைத்தும்.
எலக்ட்ரானிக்கல் இயங்க வேண்டும் என ஒரு தொலைநோக்கு பார்வையை அரசு நிர்ணயம் செய்துள்ளது.
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் இப்பொழுது குறைந்த விலையில் (Tata Nano EV) எலக்ட்ரிக் காரை விற்பனை செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறது.
இப்பொழுது (Tata Nano ) காரை கால மாற்றத்திற்கு ஏற்ப எலக்ட்ரிக் வடிவில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர tata மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த சூழலில் (Tata Nano EV) எலக்ட்ரிக் காரின் முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரப்பூர்வமற்ற சில தகவல்கள் இணையதளத்தில் கசிந்துள்ளது.
பேட்டரி செயல்திறன்
இதன்படி ஒருமுறை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் சுமார் 200 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யக்கூடிய வகையில் பேட்டரி டாடா நானோ எலக்ட்ரிக் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினசரி நகர பயன்பாட்டிற்கும், அருகில் உள்ள இடங்களுக்கு சென்று வருவதற்கும், இது போதுமானதாக இருக்கிறது.
ஜிப்ட்ரான் தொழில்நுட்பம் பல விஷயங்களில் பூஜ்ஜியத்தை மகிழ்ச்சியுடன் தருகிறது.
பூஜ்ஜிய சத்தம்,பூஜ்ஜிய அதிர்வுகள்,மற்றும் பூஜ்ஜிய உமிழ்வுஇதன் பொருள் என்னவென்றால், நீங்கள் ஒரு மென்மையான இயக்கத்தைப் பெறுவீர்கள்.
மேலும் அமைதியான மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் காரைப் பெறுவீர்கள்.
60 நிமிடங்களுக்குள் காரை வேகமாக சார்ஜ் செய்ய முடியும்,இது பயன்பாட்டின் மூலம் உங்களை காருடன் தொடர்பில் வைத்திருக்கும்.
அதே நேரத்தில் (டாடா நானோ இவி) எலக்ட்ரிக் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு நூற்றி 110 கிலோமீட்டர் என்று அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பவர் அவுட்புட் 25 HP மற்றும் 85 nm என்ற அளவில் இருக்கலாம் என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த டாடா நானோ ஈவி (Tata Nano EV) எலக்ட்ரிக் காரின் எடை 800 கிலோ என்ற அளவில் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது, இதன் கிரௌண்ட் கிளியரன்ஸ் 180 மில்லி மீட்டராக இருக்கலாம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது.
ஆனால் டாடா நானோ ஈவி எலக்ட்ரிக் காரில் இந்த பிரச்சனை முற்றிலும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா நானோ எலக்ட்ரிக் கார் விலை
இதனுடைய விலை குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் என்ற அளவில் (Tata Nano -e V) எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம்.
கேரளா பெண்கள் எப்பொழுதும் அழகாக இருப்பதற்கு kerala beauty tips for face in tamil
டெல்லியில் இந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போர்ட்டில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்குவது எப்படி..!
எப்பொழுது விற்பனைக்கு வரும் என்ற முழுமையான தகவல் அறிவிக்கப்படவில்லை, ஆனால் இதனுடைய சோதனை ஓட்டம் நடைபெறுகிறது என மறைமுகமான ஒரு தகவல் இணையதளத்தில் கசிந்துள்ளது.