
Thai pathiram tholainthu ponal thirumba peruvathu eppadi
தாய் பத்திரம் தொலைந்து விட்டதா மூலப்பத்திரத்தை மீண்டும் பெற இந்த 6 விஷயத்தை மட்டும் கவனமாக செய்யுங்கள்..!
தாய் பத்திரம் என்றால் என்ன? தாய்பத்திரம் தொலைந்து போனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா இதற்கு வழிமுறைகளை தமிழ்நாடு அரசு முறை வெளியிட்டுள்ளது.
தாய் பத்திரம் அதாவது மூலப்பத்திரம் என்பது மிகவும் முக்கியமான ஒரு ஆவணம் இதனை (Parent Document) என்று அழைப்பார்கள்.
முதல் முதலாக குறிப்பிட்ட சொத்தை வாங்கியவர்,அதை யாரிடம் இருந்து வாங்கினார்,என்பதை தாய் பத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
சுமார் 150 வருடங்களுக்கு முன்பு யார் அந்த சொத்தின் உரிமையாளர் அவருக்கு அந்த சொத்து எப்படி வந்தது?எந்த பத்திரம் அல்லது அரசு ஆவணம் மூலம் அந்த சொத்து அவருக்கு கிடைத்தது.
100 அல்லது 200 வருடங்களுக்கு முந்தைய பத்திரங்கள் என்பதால் அது காணாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
எனினும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணம் கட்டி விண்ணப்பித்தால் மறுபடியும் அதிகாரப்பூர்வமான உண்மையான அசலான இணையான பத்திரம் உங்களால் பெற முடியும்.
அதே சமயத்தில் உங்களிடம் உள்ள சொத்துக்களை அடகு வைக்கவோ அல்லது விற்கவோ நினைத்தால்.
அதற்கான பத்திரம் தான் முக்கியமாக ஆதாரமாக உள்ளது,அசல் ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்,நீங்கள் எப்பொழுதும்.
தாய் பத்திரம் மிக மிக முக்கியம்
ஒருவேளை உங்களுடைய தாய் பத்திரம் தொலைந்து விட்டால் என்ன செய்வது என்று தெரியுமா?
தாய் பத்திரம் எந்த ஊரில் தொலைந்தது அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் நீங்கள் பத்திரம் குறித்த விவரத்தை,குறிப்பிட்டு காணவில்லை என்று புகார் கொடுக்க வேண்டும்.
அப்போது பணியில் இருக்கும் காவல் அதிகாரியின் கையொப்பம் மற்றும் காவல் நிலைய முத்திரையுடன் புகார் பெற்றுக் கொண்ட ரசிதையும் நீங்கள் பெற வேண்டும்.
நீங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு உங்கள் தாய் பத்திரம் குறித்து காவல்துறை தேடிப்பார்ப்பார்கள் அதன்பிறகு கிடைக்கவில்லை என்றால்.
காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் அதாவது (FIR) பதிவு செய்வார்கள்.
காணாமல் போன ஆவணத்தை யாராவது கண்டெடுத்து ஒப்படைத்தால் தக்க சன்மானம் கொடுக்கிறோம் என்றும் நீங்கள் காவல்துறை மூலம் ஒரு அறிக்கை வெளியிடலாம்.
இதன் பிறக்கும் கிடைக்கவில்லை என்றால் (FIR NOT TRACEABLE) என்று காவல்துறை ஒரு சான்றிதழ் கொடுப்பார்கள்,இந்த சான்றிதழ் உடன் ஒரு வழக்கறிஞரை நீங்கள் அணுக வேண்டும்.
உடனே வழக்கறிஞர் பத்திரத்தை காணவில்லை என்றும் கண்டுபிடித்து குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்வார்.
அதாவது ஒன்று தமிழ் இன்னொன்று ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இரண்டு பிரபலமான பத்திரைகளில் விளம்பர செய்யலாம்.
இந்த விளம்பரம் செய்து 15 நாட்களுக்குள் ஆவணம் வழக்கறிஞர்கள் கிடைக்கும்பட்சத்தில் அதை உங்களிடம் ஒப்படைப்பார்.
அப்படியும் ஆவணங்கள் கிடைக்கவில்லை என்றால் ஆவணத்தின் நகலை சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து நீங்கள் பெற்று விளம்பரம் செய்த.
பத்திரிக்கை நகலுடன் இணைத்து ஒரு சான்றிதழை வழக்கறிஞர் கொடுப்பார்,அதை நீங்கள் பெற்று சம்பந்தப்பட்ட சொத்தின் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அனுபவிக்கலாம்.
நிலம் வாங்கும் போது இந்த தகவல்களை சேகரியுங்கள்
அதாவது தாய் பத்திரம் தொலைந்து போன நிலத்தை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் சில அடிப்படை தகவல்களை நீங்கள் சேகரிக்க வேண்டும்.
தொலைந்த இடத்தை வாங்கும் போது மேற்படி (FIR NOT TRACEABLE) சான்றிதழ்.
செய்தித்தாள்களில் பத்திரம் தொலைந்தது தொடர்பான விளம்பரம் செய்த செய்தி.
நோட்டரி அட்வகேட் போன்ற இருந்தாலும் பத்திரம் வேறு ஏதாவது அடமானத்தில் இருக்கிறதா என்பதையும் நீங்கள் முழுமையாக விசாரணை செய்து கொள்ள வேண்டும்.
தாய் பத்திரம் தொலைந்து போன இடத்தை வாங்குவதற்கு இதுபோன்ற ஆவணங்களை பயன்படுத்தலாம் என தமிழக அரசு ஒரு வழிமுறையை வெளியிட்டுள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
ஆசை வார்த்தை தெரிவித்து உடலுறவு கொண்ட பிறகு..!