
The biggest earthquake in Morocco 2023
மொராக்கா நாட்டில் மோசமான பயங்கர நிலநடுக்கத்தில் 800க்கு மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில் இது குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
மொராக்கோவில் பல ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மிக மோசமான படு பயங்கரமான நிலநடுக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 820 க்கு மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளார்கள் என முதல் கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
மீட்பு பணிகள் தற்போது தொடர்ந்து வேகமாக நடைபெற்று வரும் நிலையில்,உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இரவு 11 மணி அளவில் ஏற்பட்ட இந்த திடீர் பயங்கரமான நிலநடுக்கத்தால் அங்குள்ள பல இடங்களில் மோசமான சேதத்தை ஏற்படுத்தியது.
நள்ளிரவில் திடீரென்று கட்டிடங்கள் பயங்கரமாக ஆட்டம் கண்ட நிலையில் அங்கிருந்து மக்கள் அலறி அடித்துக் கொண்டு சாலை நோக்கி ஓடினார்கள்.
பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்ட நேரம்
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி வெள்ளி இரவு 11:11 மணி ஏற்பட்டுள்ளது,அந்த நாட்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் முக்கிய இடமான மலைப்பிரதேசம் மற்றும் தலைநகருக்கு தென்மேற்கு.
72 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,அதேபோல கடலோர நகரங்களான ராபர்ட் மற்றும் பிற நகரங்களில் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதனால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது கடந்த 120 ஆண்டுகளில் அந்த நிலப்பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என்று புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
இதில் இதுவரை 820 பேர் உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் காயமடைந்தோர் 600-க்கும் மேற்பட்ட நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் 205 பேர் மிக ஆபத்தான சூழ்நிலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
எதனால் இங்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கிறது என்றால் இந்த நிலப்பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு.
அதனால் இங்கு உள்ள கட்டிடங்கள் போதுமான அளவு வலுவாகவும் தரமாகவும் கட்டப்படவில்லை.
இதன் காரணமாகவே இந்த வலுவான நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தில் இருந்து தப்பிய சில நபர்கள் நிலநடுக்கம் ஏற்பட்டு சிறிது நேரத்திற்கு பின்னர்.
இது எவ்வளவு பெரிய பேரழிவை ஏற்படுத்தி உள்ளது என்று உணர முடிந்ததாக தெரிவித்துள்ளார்கள் எங்கு பார்த்தாலும் அலறல் சத்தம் மரண ஓலம் தான் இருந்தது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
1000/- ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம்..!
How to get back money UPI Payment Money Failed