Uncategorized

The BJP controls political movements in Tamil Nadu

The BJP controls political movements in Tamil Nadu

The BJP controls political movements in Tamil Nadu

தமிழக அரசியல் மட்டுமில்லாமல் இந்திய அளவில் பாஜக  செய்யும் சில ராஜா தந்திரங்கள் மூலம் விரைவில் தமிழகத்தில் நடக்கப்போகும் சில மாற்றங்கள் என்ன..!

பாஜக குறிப்பிட்ட மாநிலத்தில் குறிப்பிட்ட தலைவர்களை கருத்தில் கொண்டு சில தந்திரங்கள் வேலையை செய்யும் அதில் முக்கியமாக சிக்கப் போவது தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள்.

கருணாநிதி மற்றும் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இருந்த போது நடைபெற்ற அரசியல் நகர்வுகள் இப்பொழுது இல்லை மாநில வளர்ச்சி, மொழி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்,சி என அனைத்தும் இப்பொழுது இல்லை.

இப்பொழுது அரசியல் நகர்வுகளை பாஜக உன்னிப்பாக நடத்தி வருகிறது அதில் சிக்கியது திமுக.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மக்களிடத்தில் நல்ல பெயர்கள் எடுப்பதற்கு பல்வேறு வகையான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

ஆனால் அந்த அறிவிப்புகள் அனைத்தும் தவிடு பொடியாகி விடுகிறது, சொல்லப்போனால் திமுகவிற்கு எதிராக தமிழக மக்களிடத்தில் இப்பொழுது வெறுப்புணர்ச்சி தொடங்கியது என்று சொல்லலாம்.

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை என்று சொல்லலாம்.

தமிழகத்தில் பாஜக தலைமையில் மாற்றம் நடந்த பிறகு திமுக அரசுக்கு தீராத பெரும் தலைவலியாக மாறிவிட்டது பாஜக தலைவர்

சமீப காலத்தில் நடைபெறும் பல சம்பவங்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும், இதில் லேட்டஸ்டாக செய்திதான் பல்லாக்கு விவகாரம் மற்றும் பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா குறித்த சர்ச்சைகள்.

பாஜக விரித்த வலையில் திமுக தன்னையறியாமல் சிக்கிக் கொண்டுவிட்டது அதையும் புரிந்து கொள்ளாமல் ஓராண்டு கால சாதனை என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

நன்கு கவனித்துப் பாருங்கள் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்ததன் பின்னணியில்.

ஆளுநருக்கு அமைச்சரவையை எதிர்க்கும் அதிகாரம் இல்லை என்ற பேரறிவாளன் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கொடுத்த குட்டு இருந்தது.

என்ற பேச்சு எழுந்தபோது அது பெரும் விவாதப் பொருளாக மாறாமல் தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப் பிரவேச நிகழ்ச்சியும் பல்லாக்கில் சுமப்பது சரியா தவறா என்ற வாதங்களும் வெடித்துக் கிளம்பி விட்டது இதில் கோட்டை விட்டது திமுக அரசு.

ஆளுநர் பேச்சு என்ன காரணம்

இதற்கு காரணம் பாஜக தலைவர்களின் பேட்டிகளில் தான் அவர்கள் பட்டன பிரவேசம் குறித்து கருத்துக் கூற ஆரம்பிக்க திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பதிலளிக்க என விஷயம் வேறு எங்கேயோ நகர்ந்து சென்று விட்டது.

இன்னும் அது சார்ந்த விவாதங்கள் தொடர்கிறது, இனிவரும் காலங்களில் இதேபோன்று தொடரும், இதே மாதிரிதான் ஆளுநர் வெளியிட்ட ஒரு அறிக்கை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதுதான் ப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஆபத்தானது என்று கூற அதற்கு திமுக சார்ந்த அமைப்புகளும் மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தார்கள்.

உச்சகட்டமாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட போவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் அரசியல் நகர்வுகள் பாஜக தலைவர்களின் கையில்

தமிழகம் மட்டுமில்லாமல் தேசிய அளவிலும் அவ்வபோது பாஜக தலைவர்கள் தான் செய்திகளுக்கான ட்ரென்டிங் ஆக மாறிவிடுகிறார்கள்.

ஹிந்தியை உயர்த்திப் பிடித்து ஒரு பாஜக தலைவர் பேசினால் அது தமிழகம் தொடங்கி கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் பேசும் பொருளாக மாறிவிடுகிறது.

ஆக மொத்தம் தமிழக அரசு கொண்டு வரும் நலத்திட்டங்கள் அல்லது தமிழக அரசு எங்கு தவறு செய்கிறது அவையெல்லாம் பேசும் பொருளாக மாறாமல்.

பாஜக தலைவர்கள் எதை பேசுகிறார்களோ அதை சுற்றியே தமிழகத்தில் அரசியல் நகர்வுகள் நகர்கிறது,இது திமுக அரசுக்கு மிகப் பெரிய ஆபத்தான ஒரு விஷயமாக இருக்கிறது.

கருணாநிதி கட்டுப்படுத்திய அரசியல் நகர்வுகள் ஸ்டாலினிடம் இல்லை

தீவிர அரசியலில் கருணாநிதி இருந்த காலகட்டங்களில் அரசியல் நகர்வு என்பது மாநிலத்தின் வளர்ச்சி குறித்து இருந்தது.

கருணாநிதி எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழக அரசியல் போக்கை தீர்மானிக்கக் கூடிய நபராக கருணாநிதி இருந்தார்.

கருணாநிதி என்ன அறிக்கை வெளியிடுகிறாரோ அதை சுற்றியே அரசியல் நகர்வுகள் தினந்தோறும் அமையும், ஜெயலலிதா அதற்கு பதில் அறிக்கை உடனே வெளியிடுவார், அதற்கு பதிலுக்கு பதில் அறிக்கையை கருணாநிதி வெளியிடுவார்.

ஆக்கப்பூர்வமான அரசியலாக இருந்தது

அறிக்கையை பேட்டியோ கருணாநிதி அல்லது ஜெயலலிதா கூறிய விஷயங்களை சுற்றித்தான் அரசியல் நகர்வுகள் தினம்தோறும் இருக்கும்.

ஓகே பாஜக தலைவர்கள் கூறுவதை வைத்து அரசியல் நகர்ந்தால் என்ன கெட்டுப் போக போகிறது என்பதுதான் அடுத்த கேள்வியாக உங்களிடம் தோன்றும்.

ஆனால் விஷயம் அதில்தான் இருக்கிறது, கருணாநிதி அல்லது ஜெயலலிதா அவர்கள் வெளியிடும் அறிக்கைகள் மாநிலம் வளர்ச்சி சார்ந்ததாக இருக்கும்.

மின்வெட்டு பற்றி, நதிநீர் பங்கீடு பற்றி, மாநில கடன் குறித்து, காரசார விவாதங்கள் நடைபெறும்.

அவர்கள் பேட்டிகள் தினந்தோறும் பேசுபொருளாக மாறிவிடும் இது மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஆக்கபூர்வமாக இருந்தது.

ஆனால் திரு ஸ்டாலின் தலைமையிலான அரசு சமீபகாலமாக ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபடவில்லை காரணம் இதற்கு பாஜக பெரும் தலைவலி கொடுத்து வருகிறது.

பெரிய தொந்தரவு கொடுக்கும் பாஜக

திமுகவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துவது திராவிடர் கழகம் இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் இந்துக்கள் சார்ந்ததாகவே செய்கிறார்கள்.

இதனால் பாஜக அதை தேசிய அளவில் பிரபலப்படுத்தி விடுகிறார்கள்.

கூந்தல் வளர்ச்சிக்கு ஆயுர்வேதம் சொல்லும் எண்ணெய் வகைகள் என்ன..!

இது திமுக அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை கொடுக்க தொடங்கியுள்ளது, இப்படியே இன்னும் நான்கு ஆண்டு காலம் தொடர்ந்தால் கண்டிப்பாக.

Ration Card new rules and regulations in tamil

பாஜக தமிழகத்தில் வளர்ச்சி அடைவதற்கு திமுக சிவப்பு கம்பளம் போட்டு வழியை ஏற்படுத்தி விடும் என்பதில் மாற்றமில்லை.

அதற்கு எடுத்துக்காட்டாக சட்டமன்றத்தில் 5 உறுப்பினர்கள் பாஜக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

What is your reaction?

Excited
0
Happy
2
In Love
0
Not Sure
1
Silly
0