செய்திகள்

ரூபாய் 10 கூடுதலாக வசூல் புகார் தெரிவித்த நபரை டாஸ்மாக்கில் சரமாரியாக தாக்கிய காவல்துறை அதிரடி இடமாற்றம் பறந்த நோட்டீஸ்..! The police inspector severely assaulted the man

The police inspector severely assaulted the man

The police inspector severely assaulted the man

ரூபாய் 10 கூடுதலாக வசூல் புகார் தெரிவித்த நபரை டாஸ்மாக்கில் சரமாரியாக தாக்கிய காவல்துறை அதிரடி இடமாற்றம் பறந்த நோட்டீஸ்..!

தமிழகத்தில் அனைத்து மதுபான கடைகளிலும் கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது என கடந்த சில மாதங்களாகவே மிகப்பெரிய புகார் சமூக வலைத்தளங்களில் இருக்கிறது.

இது குறித்து பல்வேறு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது இருந்தாலும் டாஸ்மார்க் நிர்வாகத்தில் அமைச்சர் மாற்றப்பட்டாலும் இப்போது கூடுதலாக சராசரியாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் தினம் தோறும் வருகிறது.

செங்கல்பட்டில் டாஸ்மாக்கில் ரூபாய் 10 கூடுதலாக வசூலிப்பதாக புகார் தெரிவித்த நபரை உதவி காவல் ஆய்வாளர் சரா மாறியாக தாக்கினார்.

இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி கடுமையான ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஏனென்றால் ஒல்லியான தேகம் கொண்ட அந்த வயதான நபர் காவல் உதவி ஆய்வாளரிடம் 10 வசூல் செய்கிறார்கள் என புகாரை தெரிவித்தார்.

இதை கேட்டதும் காவல் உதவி ஆய்வாளர் அவரை கண்ணா பின்னமாக தாக்கினார் இந்த வீடியோ சமூக வலைத்தளங்கள் வெளியாகி கடுமையான ஒரு அதிர்வலை ஏற்படுத்தி.

பல்வேறு கட்சி தலைவர்களும் இதற்கு நேரடியாக கண்டனங்களை தெரிவித்தார்கள்.

செங்கல்பட்டு நகரம் வேதாச்சலம் நகரில் டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது இந்த டாஸ்மார்க் கடையில் மது பாட்டிலுக்கு ரூபாய் 10 கூடுதலாக வசூலிப்பதாக மது பிரியர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் டாஸ்மாக் கடை முன்பு நின்று ரூபாய் 10 கூடுதலாக வசூலிக்கிறார்கள் எனக் கூறி தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

அப்போது செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளராக ராஜா அங்கு வந்தார் அப்போது ரூபாய் 10 கூடுதலாக வசூலிப்பதாக புகார் தெரிவித்த நபரை அவர் சரமாரியாக தாக்கினார்.

மேலும் அங்கு இருந்த மதுப்பிரியர் அவர்களையும் விரட்டினார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியானது இதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர் அந்த காவல் ஆய்வாளர் வயதான நபரை தொடர்ந்து தாக்கி கொண்டே இருக்கிறார்.

இந்த வீடியோ தமிழகம் முழுவதும் மிகப்பெரிய ஒரு அதிர்வலியை ஏற்படுத்தியது அந்த வயதான நபருக்கு கடுமையான உடல் பாதிப்பு ஏற்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அதோடு ரூபாய் 10 கூடுதலாக விற்பனை செய்தால் காவல் தாக்குதல் நடத்துவார்களா ஒருவர் மீது காவல்துறை தாக்குதல் நடத்த காவல்துறைக்கு யார் அதிகாரம் அளித்தது.

என்ற கேள்வி இப்பொழுது சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படுகிறது.

பட்டப் பகலில் ஒரு பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூபாய் 10 கூடுதலாக விற்பனை செய்யும் டாஸ்மார்க் விற்பனையாளரை விட்டுவிட்டு.

இந்த காவல்துறை அந்த வயதான நபரை கடுமையாக தாக்கியுள்ளது என பலரும் கருத்துக்கள் தெரிவித்தார்கள்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் காவல்துறையின் செயலுக்கு கடுமையான எதிர்ப்பு பதிவு செய்தார்கள்.

இதனால் இந்த விவகாரம் மாநில அளவில் மிகப் பெரியதாக பிரச்சனையாக இருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் உதவியாளர் காவல் ஆய்வாளர் ராஜா அதிரடியாக இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி ராஜா காவல் நிலையத்தில் இருந்து ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் இந்த பணி இடமாற்றத்திற்கான உத்தரவை எஸ் பி பிறப்பித்துள்ளார்.

மேலும் சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உதவி தகவல் ஆய்வாளர் ராஜாவுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

How to get token for magalir urimai thogai..!

Health Benefits of triphala Suranam in tamil..!

What is bail How to get full details in tamil..!

What is your reaction?

Excited
0
Happy
3
In Love
0
Not Sure
2
Silly
0