
Tips to get high yields from mushroom cultivation
காளான் வளர்ப்பில் அதிக மகசூல் பெற சில எளிமையான குறிப்புகள்..!
காளான் வளர்ப்பு முறை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் காளானில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
காளானில் வைட்டமின் B அதிகமாக இருப்பதால் இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது, போலிக் ஆசிட் இருப்பதால் ரத்தசோகை நோய்க்கு நல்லது இருக்கிறது.
சிறந்த கண்பார்வைக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும், பற்களின் உறுதிக்கும், தேவையான தாமிர, இரும்பு சத்துகளுடன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், போன்ற பல்வேறு வகையான முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
காளான் வகைகள் மற்றும் மொத்தம் சுமார் 20,000 வகைகள் உள்ளன இந்தியாவில் மட்டும் 2000 வகைகள் இருப்பதாக தெரிகிறது.
இதில் சிப்பி காளான், நாட்டு காளான்,மொட்டுக் காளான்,அரிசிக் காளான் போன்றவை மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது.
இயற்கையில் கிடைக்கும் காளான்கள் வகையில் நல்லவை என்று தெரிந்த பின்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.
காளான் வளர்ப்பு முறையில்
இன்று காளான் வளர்ப்பு முறையில் சுத்தமான வைக்கோல் 2 இன்ச் நீளத்தில் வெட்டி 6 முதல் 8 மணிநேரம் தண்ணீரில் நன்கு ஊற வைக்க வேண்டும்.
பின்பு வைக்கோலை எடுத்து மூடியுள்ள பாத்திரத்தில் ஆவியில் அல்லது சுடு தண்ணீரிலோ குறைந்தது 2 மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.
தண்ணீர் முழுவதையும் வடிகட்டிவிட்டு சுத்தமான தரையில் கைகளால் இறுக்கிப் பிழிந்தால், தண்ணீர் சொட்டாக அளவிற்கு உலர்த்த வேண்டும் அதுவரைக்கும் செய்ய வேண்டும்.
வீரியமான நன்கு வளர்ந்த காளான் வித்து பாக்கெட்டை பத்து சம பாகங்களாக பிடித்தல் வேண்டும்.
P.P. (1 அடிக்கு 2 அடி) கவரில் ஐந்தடுக்கு வருமாறு இரண்டு படுக்கை 23/4-3 வரை இருக்குமாறு தயார் செய்து கொள்ள வேண்டும்.
சுத்தமான (stainless steel) கத்தியில் பக்கத்திற்கு நான்கு துளைகள் இட்டுக் கொள்ள வேண்டும்.
குறைந்தது 20 நாட்களுக்கு இருட்டு அறையில் வைத்து விட வேண்டும், படுக்கை வெள்ளையாக மாறியபின் தினமும் 3 வேளை தண்ணீர் தெளிக்க வேண்டும்.
மொட்டு வைத்து 3வது நாள் அறுவடை செய்து துளையிட்ட பாலித்தீன் கவரில் எடை போட்டுச் சீல் வைத்து விற்பனை செய்துவிடலாம்.
காளான் வளர்ப்பிற்கு தேவைப்படும் ரசாயன முறை
100 லிட்டர் தண்ணீரில்
10 கிலோ வைக்கோல்
16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
125 துயி பார்மலின்
8 கிராம் பவிஸ்டின்
செய்முறை 4 முதல் 7 வரை இயற்கை முறை பின்பற்றவும்.
இதில் கவனிக்க வேண்டியவை
இந்த காளான் வளர்ப்பு முறையில் சுத்தமான தண்ணீர், வீரியமான காளான் வித்து, சுற்றுப்புறச்சூழல் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு சரியாக இருக்க வேண்டும்.
மரநிழலில் 11 X 30 , 11 X 36 என்கின்ற அளவில் கிழக்கு மேற்காகவும் வாசல் வடக்கு அல்லது தெற்கு ஆகவும் குடில் அமைக்க வேண்டும்.
பால் காளான் வளர்ப்பு முறை
பால் காளான் உற்பத்தி செய்வதற்கு நிலத்தில் குழி எடுக்க வேண்டும், அகலம் குறைந்தது 10 அடி, ஆழம் 2 அடி, நீளம் 3 அடி சுமார் 1 அடி ஆழத்திற்கு குழி எடுத்து மண்ணைத் மேல் மட்டத்தில் பயன்படுத்தி, 1 அடி உயரத்தை ஏற்றிக் கொள்ள வேண்டும்.
குப்பை மண் மற்றும் வயல் மண் கொஞ்சம் கிளிஞ்சல் பவுடர் மற்றும் வேகவைக்காத சுண்ணாம்பு இவை அனைத்தையும் தண்ணீர் கலந்து வேகவைக்க வேண்டும்.
உருண்டை பதம் வரை மட்டும் வேகவைத்துகொள்ள வேண்டும் இதனை நீங்கள் குக்கரில் வேக வைக்கலாம்.
சிப்பி காளானை போல் பால் காளான்கள் பெட் ஓரங்களில் வளர்வதில்லை அதுவே நீங்கள் 1 பெட்டை 2 கூறுகளாகப் பிரித்து குழிக்குள் வைத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.
குழிக்குள் காளான்களை உற்பத்தி நடைபெறுவதால் நேரடியாக சூரிய ஒளி படுவதை தவிர்க்க வேண்டும் பந்தல் ஒன்று அமைக்க வேண்டும்.
தண்ணீர் தெளிப்பதற்கு ஸ்பிங்குளர் பயன்படுத்தலாம், பால் காளான்சுமார் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பால் காளான் வகைகள் கேரளா சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது.
சிப்பி காளான் வளர்ப்பு முறைகள்
இந்த வகை காளான் வளர்ப்பு முறையில் குடிசை அமைக்கும் பொழுது 10 X 30 அடி என்கின்ற அளவில் அமைக்கும்போது ரூபாய் 16000/- வரை செலவு செய்ய வேண்டும்.
அதுவே 10 X 16 அடி என்கின்ற அளவிற்கு குடிசை அமைக்கும் பொழுது ரூபாய் 12000/-வரை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
காளான் குடிசை மரநிழலில் அமைப்பது,சிறப்பாக அமைந்துவிடும்.
நீங்கள் தண்ணீர் பயன்படுத்தும்போது PH அளவு காணவேண்டும் PH 7க்கு குறைவாக இருந்தால் நன்மை அதுவே PH 8 அளவு 9 ஆக இருந்தால் பிளீச்சிங் பவுடர் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
இந்த வகை காளான்களை பெட் மூலம் குடியில்களுக்குள் கட்டி தொங்கவிடுவது சிறந்ததாக அமைந்துவிடும்.
ஈரப்பதம் எப்பொழுதும் வைத்துக்கொள்வதற்கு 1 HP மோட்டார் ஸ்பிரிங்க்லர் ( SPRINKLER) பயன்படுத்தலாம், தண்ணீர் பயன்படுத்துவது குளிர்ச்சியான நிலையை உருவாக்குவதற்கு.
சிப்பி காளான்களின் அறுவடை சுமார் 50 முதல் 60 நாட்கள் வரை இருக்கும்.
பட்டா, சிட்டா, அடங்கல், என்றால் என்ன
சுழற்சி முறையில் அனைத்து பெட்டியிலும் அறுவடை முடிவதற்கு 60 நாட்கள் தேவைப்படும்.
காளான் அறுவடை முடிந்தபின் தண்ணீர் தெளிக்க வேண்டும், மழைக்காலங்களில் அறுவடை முன்கூட்டியே முடித்து விடுவது சிறந்ததாக அமையும்.
Organic farming Green Chilli Cultivation Method
செட் சுத்தம் செய்யும் முறை
தண்ணீர் 1 லிட்டர், காதி சோப், வேப்பெண்ணை 1 லிட்டர், கலக்கவேண்டும், மேற்கூறிய அனைத்தும் ஒன்றாக கலந்து ஸ்பிரே செய்தால் காளான் அறுவடை முடிந்த பிறகு செட் சுத்தமாகிவிடும்.