செய்திகள்

1000 ரூபாய் பெண்களுக்கான உரிமை தொகை இப்படித்தான் வழங்கப்படுமா tn 1000 rupees scheme eligibility list

tn 1000 rupees scheme eligibility list

tn 1000 rupees scheme eligibility list

1000 ரூபாய் பெண்களுக்கான உரிமை தொகை இப்படித்தான் வழங்கப்படுமா தமிழ்நாடு அரசு புதிய திட்டம்..!

தமிழ்நாட்டில் பெண்களுக்கான உரிமை தொகை 1000/- ரூபாய் வழங்கும் இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழ்நிலையில் எந்த முறையில் பணம் வழங்கப்படும் என்ற சந்தேகம் இப்பொழுது பொதுமக்கள் இடத்தில் இருக்கிறது.

பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் அறிவிப்பு புரிந்து கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி அமைச்சர் அறிவித்தார்.

மகளிர் உரிமைத்தொகை மாதம் 1000 ரூபாய் அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்றும் தகுதியானவர்கள் குறித்து வரைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தகுதி அடிப்படை என்ன

தமிழகத்தில் 2 கோடிக்கு மேல் குடும்ப அட்டை இருக்கிறது ஆனால் அரசு வெறும் 7000 கோடி மட்டுமே இதற்கு ஒதுக்கீடு செய்திருப்பதால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் கிடைக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது.

இதற்கு தமிழக சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன் அப்போதே ஒரு விளக்கம் கொடுத்தார்.

அதில் ஏற்கனவே மாதம் 1000 உரிமை தொகையை பெற்று வரும் வயதான பெண்கள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், இதில் மறு படியும் பயனடைய மாட்டார்கள்.

வருமான வரி செலுத்தும் பெண்களும் பயனடைய மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து.

ஆனால் கண்டிப்பாக ஏழை எளிய, நடுத்தர குடும்ப பெண்கள், நிச்சயம் ரூபாய் 1000 உரிமை தொகையை பெறுவார்கள் என அவர் தெரிவித்தார்.

இதற்கு நடுவில் இந்த 1000 ரூபாய் யார் யாருக்கு கிடைக்கும் என்ற தகவல் இணையதளத்தில் இப்பொழுது பரவலாக வட்டமடிக்க தொடங்கியுள்ளது..

குறிப்பாக வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த உரிமை தொகை கிடைக்காது என்கிறார்கள்.

ரூபாய் 1000 உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் முதியோர் ஆகியோர் இந்த திட்டத்தின் கீழ் உரிமை தொகை பெற முடியாது என்கிறார்கள்.

பிறகு PHH என்ற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் PHHY 35 கிலோ அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ 1000 உரிமை தொகை கிடைக்கும் என்றார்கள்.

அதே நேரத்தில் வயதுவரம்பு, கணவரின் ஆண்டு வருமானமும், கணக்கிடப்பட்டு இந்த பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும்.

அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு 1000 உரிமைத் தொகை கிடைக்காது என்றார்கள்.

புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி பெண்களின் தாயர்களும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.

இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற ரேஷன் அட்டையில் மாற்றம் எதுவும் செய்யத் தேவையில்லை என்றும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவர்களின் வங்கிக் கணக்கிருக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும் என்றும்.

60 வயதிற்கு மேற்பட்டோர் வாங்கும் முதியோர் உதவித்தொகையிலும் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார்கள்.

இப்படி பல்வேறு தகவல்கள் தொடர்ந்து மக்களை குழப்பிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் இதுவரை அரசிடம் இருந்து திட்டம் தொடர்பான எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதே உண்மை.

யார் யாருக்கு உரிமை தொகை கிடைக்கும் என்பது போலவே எதன் மூலம் இந்த உரிமை தொகை அரசு கொடுக்கப் போகிறது என்ற அடுத்த சந்தேகமும் கிளம்பியுள்ளது.

லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள்

ரயில் விபத்து சிறிய குறைபாடு தான் காரணமா

Top 10 electric scooters sales in india

செட்டிநாடு முட்டை கிரேவி மசாலா செய்வது எப்படி..!

ஜூன் மாத ராசிபலன் எந்த ராசிக்கு பணமழை

தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிக்கும் தொழிலில்

What is your reaction?

Excited
1
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
2