
tn 1000 rupees scheme eligible list upload
எல்லாம் முடிந்து விட்டது பதிவேற்றப்படும் புதிய பட்டியல் ரூபாய் 1000/- கலைஞர் உரிமைத்தொகை பெண்களுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி நீங்கள் பட்டியலில் உள்ளீர்களா எப்படி கண்டுபிடிப்பது..!
தமிழ்நாட்டில் இந்த மாதம் 15 ஆம் தேதி வழங்கப்பட உள்ள ரூபாய் 1000/- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000/-உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இதன்பிறகு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக முழுவதும் நடைபெற்றது.
முதற்கட்ட முகாம் ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது,இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்டு 5ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதுவரை 1கோடியே 75 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளது விண்ணப்பங்கள் பதிவு செய்ய வருகை புரிய இயலாத நபர்களுக்கு சிறப்பு முகாம்களும் நடந்தது.
இன்று நடைபெற்ற ஆயுஷ் கூட்டத்தில் விண்ணப்ப பதிவு முன்னேற்றம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வுகள் செய்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் முதல் மாத பணம் எப்போது வங்கி கணக்கில் வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி பெண்களுக்கு மாதம் 1000/- உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு மிகப்பிரமாண்டமாக இந்த மாநாட்டை தொடங்கி வைக்க இருக்கிறார்கள்.
திட்டம் தொடங்கப்பட்டு 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி முதல் மாததொகை வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் இந்த திட்டத்திற்கு தேர்வானவர்கள் பட்டியல் எடுக்கப்பட்ட அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது நீங்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளீர்களா என்பது குறித்து குறுஞ்செய்தி உங்களுக்கு வரும் ஒருவேளை இந்த திட்டத்தில் நீங்கள் நிராகரிக்கப்பட்டாலும் அதற்கும் குறுஞ்செய்தி வரும்.
முகாம்களில் விண்ணப்பங்களை கொடுத்தவர்கள் விண்ணப்பங்கள் சரிபாரக்கப்பட்டு முடிந்து வருகிறது,தேர்வாணவர்கள் பெயர் தற்போது பட்டியலில் கணினி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்பட்சத்தில் அதை மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது நீங்கள் விண்ணப்பம் கொடுக்கிறீர்கள் அது நிராகரிக்கப்படுகிறது என்றால் அதை மறுபரிசீலனை செய்ய மேல்முறையீடு செய்ய முடியும்.
உங்களிடம் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தும் நீங்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்கு நீங்கள் மறுபடியும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
இந்தியாவின் பெயரை மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள்
எல்ஐசி பாலிசி காலாவதியான பின்பு மறுபடியும் புதுப்பிப்பது எப்படி..!