
TN announced a new subsidy for shrimp farming
தமிழக அரசு கொடுக்கும் 5.60 லட்சம் ரூபாய் இந்த தொழில் தொடங்க இளைஞர்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள் விண்ணப்பிப்பது எப்படி..!
தமிழகத்தில் தொழில்துறை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு அதிரடி புதிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது,அந்த வகையில் இப்பொழுது புதிய திட்டத்தை ஒன்று அறிவித்துள்ளது.
இறால் வளர்ப்பு ஊக்குவிக்க தமிழக அரசால் உவர் நீர் இறால் உற்பத்தினை அதிகப்படுத்திட பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5.60 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் கடலூர் மாவட்டத்தினருக்கு அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இறால் உற்பத்தினை அதிகரிக்கவும் புதிதாக இறால் பண்ணை தொழிலில் ஈடுபட விரும்புவோர் பயன்பெறும் வகையில் உவர்நீர் இறால் வளர்ப்பிற்கு புதிய குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உவநீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைத்தல் திட்டத்தில் ஒரு ஹெக்டர் பரபரப்பிற்காக மொத்த செலவில் 8 லட்சத்தில் பொது பிரிவினருக்கு 40% மானியமாக ரூபாய் 3.20 லட்சம்.
பெண்களுக்கு 60% மானியமாக ரூபாய் 4.50 இலட்சம் வழங்கப்படும்,இக்குளங்களுக்கு இறால் வளர்க்க உள்ளீடுகள் வழங்கும் திட்டத்தில்.
மொத்த செலவினும் ரூபாய் 6 லட்சம் பொதுப் பிரிவினருக்கு 40% மானியம் 2.4 லட்சமும் பெண்களுக்கு 60% மானியமாக 3.60 லட்சமும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடலூர் மாவட்டத்தில் இறால் வளர்போரை ஊக்குவிக்கும் விதமாக.
தமிழக அரசால் உவர்நீர் இறால் உற்பத்தினை அதிகப்படுத்திட பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ்.
உவர்நீர் இறால் வளர்ப்புக்காக புதிய குளங்கள் கட்டுதல் மற்றும் அக்குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்குதல் திட்டத்தில் பொது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு ஹெக்டர் புதிய குளங்கள் அமைப்பதற்கு ரூபாய் 8 லட்சம் மற்றும் உள்ளீடு வழங்க ரூபாய் 6 லட்சம் ஆக மொத்த செலவினம் மேற்கொண்ட தொகையில் 40 சதவீதம் மானியம் 5.60 லட்சம் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிக்க பயனாளிகள் பரங்கிப்பேட்டை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் ரேவு மெயின் ரோடு.
கடல் உயிரியல் (அண்ணாமலை பல்கலைக்கழகம்) எதிரியில் பரங்கிப்பேட்டை புவனகிரி வட்டம் கடலூர் மாவட்டம் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு.
விண்ணப்பங்கள் பெற்று உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Foods that prevent heart disease in tamil
TN provides loan assistance to start business
How to download e PAN card in tamil 2023