
TN announced about govt staff salary and release statement
அரசு ஊழியர்களுக்கு இந்த நாட்களில் சம்பளம் கிடையாது கோட்டையிலிருந்து வெளிவந்த புதிய உத்தரவு..!
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் குறித்து தமிழக தலைமை செயலாளர் முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களும் ஓய்வு பெற்ற பிறகு மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது.
அரசு ஊழியர்கள் உயிரிழந்த பிறகும் கூட அவரது துணைவியார்ருக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு வந்தது.
ஓய்வூதியம் வழங்குவதில் அரசின் நிதிநிலை சிக்கல் காரணமாக பழைய ஓய்வூதிய முறையை ரத்து செய்யப்பட்டு அரசு ஊழியர்களுக்கு.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஓய்வூதியம் முறையில் என்ன
புதிய ஓய்வூதியத் திட்டம்மானது மாதம் மாதம் ஓய்வு ஊதியம் வழங்காமல் பணி நிறைவடையும் போது ஒரு குறிப்பிட்ட பெரும் தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்கு அரசு ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மறுபடியும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறார்கள் அரசிடம்.
திமுக அரசின் தேர்தல் அறிக்கை
இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த முறை திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கப்படும் என்று அறிவித்தது.
ஆனால் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியும் பழைய ஓய்வூதிய திட்டம்.
எப்போது செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிடவில்லை,இதைத்தான் தற்போது எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து வருகின்றன.
அரசு ஊழியர்களின் கோரிக்கை
இந்த நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் குறைந்தபட்சம் ஊதியமாக ரூபாய் 18,000/- வழங்க வேண்டும்.
என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழக அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளார்கள்.
இதற்கு நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அரசு ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
இந்த வேலை நிறுத்தத்தில் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 50 லட்சம் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பணிக்கு வராமல் இப்படி வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் ஊழியர்கள் மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை வெளியிடப்பட்டது.
28,29 ஆகிய தேதிகளில் வேலைக்கு வராமல் போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஊழியர்களுக்கு அன்றைய தினம் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்றும் போக்குவரத்து துறை, மின்சாரத் துறை, அறிவித்து விட்டது.
தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை
அந்த வகையில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மார்ச்சு மாதம் 28, 29, ஆகிய தேதியில் எந்த விதமான விடுமுறையும் அளிக்கப்படமாட்டாது.
பன்றி இறைச்சியில் ஆரோக்கிய நன்மைகள் என்ன..!
விடுமுறை எடுத்தால் 10:30க்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் அன்றைய தினம் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
How to apply personal loan in tamil
நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த வாரம் இரண்டு நாட்கள்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள் இதனால் பாதிக்கப்படுவது என்பது பொதுமக்கள் மட்டுமே.