
TN announces special incentive for sugarcane farmers
கரும்பு விவசாயிகளுக்கு ரூ 195 சிறப்பு ஊக்கத்தொகை வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு..!
கரும்பு விவசாயிகளுக்கு ரூ 195 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
திரு மு க ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக தமிழகத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று வேளாண் பட்ஜெட் தனிப்பட்ட முறையில் தாக்கல் செய்யப்பட்டது அதில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது அதனை எம் ஆர் கே பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
பண்டைய தமிழர்கள் கரும்பை கசக்கி சாறு பிழிந்து சர்க்கரையாக்கும் தொழில்நுட்பத்தை தெரிந்து வைத்திருந்தனர் என்பதை கற்றுக் கொண்டார் என்று நாலடியார்.
கடித்தாலும் சுவை தருகிறது கரும்பு காய்ச்சினாலும் நல்ல பலன் தருகிறது அதன் சாறு தொழில்துறை வசமிருந்த சர்க்கரைத் துறை வேளாண் துறைக்கு மாற்றப்பட்டது இது ஒரு நற்செய்தி என்று அறிவித்தார்.
கரும்பு உற்பத்தி அதிகரிக்க
கரும்பு உற்பத்தி சர்க்கரை கட்டுமானத்தை அதிகரிப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு வகையான சிறிய நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.
கூட்டுறவு, பொதுத்துறை, தனியார் சர்க்கரை ஆலைகள், அதிக மகசூல் தரக்கூடிய இரகங்களை அதிக சர்க்கரை கட்டுமானம் கொண்ட கரும்பு பயிரிட.
இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது சர்க்கரை ஆலைகளில் செயல்திறனை மேலும் மேம்படுத்தவும்.
கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 2022-2023 ஆம் நிதியாண்டில் பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
விவசாய சங்கங்கள்
கருப்பு விவசாயிகள் விவசாய சங்கங்களின் கரும்பு விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக போராட்டம் மற்றும் கோரிக்கைகளை கனிவுடன் செய்துவருகிறார்கள்.
கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் சென்ற 2021-2022 ஆண்டினை போலவே.
அதில் சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக.
கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் வழங்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
விவசாயிகளின் சாகுபடி
கரும்பு விவசாயிகளின் சாகுபடி செலவை குறைக்கும் வகையில் வல்லுநர் விதை கரும்பு, திசு வளர்ப்பு, நாற்றுகள்,பருசீவல் நாற்றுகள், ஒரு பருவிதை கரும்பு ரகங்கள்.
கரும்பு சோகை உரிக்கும் கருவிகள், நீரில் கரையும் உரங்கள், ஒட்டுண்ணி அட்டைகள், ஆகியவற்றை வழங்குவதற்கும்.
சோகையை தூளாக்குவதற்கும் திட்டம் வரும் நிதியாண்டில் 10 கோடி ரூபாய் மத்திய, மாநில, அரசு சார்பில் நிதியில் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்க்கரை ஆலைகள் மேம்படுத்த
சர்க்கரை ஆலைகளில் உள்ள ஆய்வுக்கூடங்களில் ஆய்வுகளை விரைந்து துல்லியமாகவும் மேற்கொள்ளும் வகையில்.
அமராவதி, அறிஞர் அண்ணா,செய்யார், செங்கல்வராயன், தர்மபுரி, கள்ளக்குறிச்சி1, கள்ளக்குறிச்சி2, எம் ஆர் கே, மதுராந்தகம்,
பெரம்பலூர், சுப்பிரமணியசிவா, சேலம், திருப்பத்தூர், திருத்தணி, வேலூர், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள 15 ஆய்வுக்கூடங்கள் மொத்தம் 3 கோடி ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் நவீனப்படுத்தப்படும்.
புதிய கருவிகள் அமைக்கப்படும்
கூட்டுறவு மற்றும் பொதுசர்க்கரை ஆலைகளில் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் கரும்பினை துல்லியமாக எடையிடும் வகையில்.
அதற்கான விலையை விவசாயிகளுக்கு விரைந்து வழங்கும் நோக்கில் 15 கூட்டுறவு பொதுசர்க்கரை ஆலைகளில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில்.
தற்போது பயன்பாட்டில் உள்ள எடைத்தளங்கள் கணினி மூலம் தானியங்கி முறை மாற்றப்படும்.
ஏசி பொருத்தாமல் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி
இந்த திட்டத்தின் மூலம் அனைத்து விவரங்களும் விவசாயிகளுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும்.
Fatty Foods that cause heart attack in tamil
அவர்களுடைய தொலைபேசிக்கு குறுஞ்செய்தியாக உடனுக்குடன் அனுப்பப்படுவது உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.