Uncategorized

TN big target new 10000 startups to create

TN big target new 10000 startups to create

TN big target new 10000 startups to create

தமிழ்நாட்டில் புதிய தொலைநோக்கு பார்வை 5 வருடத்தில் 10,000 புதிய நிறுவனங்கள்..!

முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மாநிலத்தின் வர்த்தகமும், முதலீடு, வேலைவாய்ப்பு, ஏற்றுமதியை, பல மடங்கு அதிகரிக்க.

பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது, இதற்கு ஏற்றார் போல் பல வெளிநாட்டு முன்னணி நிறுவனங்கள், சென்னையில் புதிதாக தங்களுடைய அலுவலகத்தை திறக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் புதிய பிரிவாக பார்க்கப்படும் ஸ்டார்ட்அப் துறையின் மீது, தமிழக அரசு தனது முழு கவனத்தையும் இப்பொழுது திருப்பி உள்ளது.

தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இந்நோவேஷன் மிஷன் வருகின்ற 2026ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் குறைந்தபட்சம் புதிய 10,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்குவதற்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளது என்று தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

10,000 புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

ஒரு வருடத்திற்கு முன்பு உருவாக்கப்பட்ட டான்சிம்  தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நோடல் ஏஜன்ஸியாகும்.

தற்போது தமிழ்நாட்டில் புதிய முதலீட்டாளர்களுக்கு சூழல் அமைப்பை மேம்படுத்த, புதிய ஸ்டார்ட் கொள்கையை தமிழ்நாடு அரசு வகுத்து வருகிறது, இந்த அமைப்புகளுக்கு ஏதுவாக.

உரிய கவனம் செலுத்துகிறது

டான்சின் அமைப்பு தற்போது தமிழகத்தில் உள்ள சுமார் 80 இன்குபேஷன் மையங்களில் தங்களுடைய கவனத்தை செலுத்தி அவற்றை உரிய சந்தைகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைக்க புதிய நடவடிக்கைகளை வேகமாக எடுத்து வருகிறது.

புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

மேலும் டான்சின் அமைப்பு ஸ்டார்ட்அப் டேட்டாபேஸ் உருவாக்குவதோடு, வழிகாட்டி வலை அமைப்பை உருவாக்க தற்போது முடிவு செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன.

அவற்றின் நிதி விவரங்கள் மற்றும் அவை எந்தெந்த துறைகளில் அங்கம் வகிக்கிறது,என்பதை ஆய்வு செய்யும் பணிகளையும் தற்போது தொடங்கியுள்ளது.

TN big target new 10000 startups to create

கொள்கை அளவில் சில தளர்வுகள்

இந்த தகவல்கள் மூலம் தமிழக அரசு இந்த பிரிவுக்கு கொள்கை அளவில் சில தளர்வுகளை அளிக்க முன்வந்துள்ளது,தங்களது துறைகளுக்கு எப்படி.

முதலீட்டையும் ,முதலீட்டாளர்களையும், அழைத்து வருவது மேலும் ஸ்டாப் துறையை அடிப்படையாக வைத்து, பள்ளி மற்றும் கல்லூரி அளவில் தேவையான புதிய மாற்றங்களை கொண்டு வரவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு என்ன

சென்னை, கோயமுத்தூர், மட்டுமில்லாமல் ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, ஆகிய பகுதிகளில் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்கும் முயற்சியில்.

தமிழக அரசு ஈடுபட்டு உள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொலைநோக்கு பார்வை என்ன

தமிழ்நாட்டில் சென்னை கோயம்புத்தூர் போன்ற இடங்களில் அதிக அளவில் தொழிற்சாலைகள் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டத்தில் இருக்கும் இளைஞர்கள் இந்த மாநிலங்களை மட்டும் வேலை வாய்ப்புகளுக்காக பெரும்பாலும் நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல், மக்களடர்த்தி, இடம் பற்றாக்குறை, போன்ற பல்வேறு வகையான புதிய பிரச்சினைகள் நிலவிவருகிறது.

மல்டி வைட்டமின் மாத்திரை பயன்கள் என்ன..!

இதனை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்று தமிழக அரசு புதிய நிறுவனங்களை தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களுக்கு பரிந்துரைக்கிறது.

மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, போன்ற இடங்களில் சிறிய அளவிலான தொழிற்சாலைகள் ஆங்காங்கே இயங்கி வருகிறது.

அங்கு மேலும் புதிய தொழிற்சாலை கொண்டு வருவதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும்.

Top 10 vastu herbal plants in tamil

அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிற்கு வருமானத்தையும் அதிகரிக்க முடியும், இதன் மூலம் மிகப்பெரிய புதிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களுடைய தொழிற்சாலை தொடங்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0