உடல்நலம்

TN Chief Minister comprehensive Health Insurance Scheme

TN Chief Minister comprehensive Health Insurance Scheme

TN Chief Minister comprehensive Health Insurance Scheme

தமிழக அரசின் 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் முழு விவரம்..!

நமது வாழ்க்கையில் இப்போது உள்ள சூழ்நிலையில் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு அதிக அளவு செலவு செய்கிறோம் இருப்பினும் நமக்கு அல்லது நமது குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு.

ஏதாவது மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் அளவிற்கு இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அளிக்கிறது.

காப்பீட்டு திட்டத்தை பற்றி பல நபர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, பலருக்கு இதனுடைய பெயர் மட்டும் தெரியும்.

இந்த தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஏழை எளிய மக்கள் நவீன கருவிகளுடன் மருத்துவ சிகிச்சை பெற.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இலவசமாக பெற்றுக்கொள்ள வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ காப்பீட்டு திட்டம் பெற தகுதி என்ன

இந்த திட்டம் பொருத்தவரை ஆண்டு வருமானம் 72,000/-ரூபாய்க்கு குறைவாக இருக்கும் அனைத்து குடும்பங்களும் இதில் பயன்பெறலாம்.

இவர்கள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் வருமான சான்றிதழ் பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் உள்ள.

அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பெற்றுக் கொள்ள முடியும்.

குடும்பம் மற்றும் குடும்பத்தில் உள்ள நபர்களின் விளக்கம்

தகுதி உடைய நபரின் சட்டபூர்வமான கணவர் அல்லது மனைவி தகுதியுடைய நபரின் குழந்தை, தகுதியுடைய நபர் சார்ந்த பெற்றோர்கள்.

இவர்கள் பெயர்கள் குடும்ப அட்டையில் இடம் பெற்றிருக்க வேண்டும், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து 6 மாதத்திற்கு அதிகமாக இருந்தால்.

அவர்கள் இந்த திட்டத்தில் இணைய தமிழ்நாடு தொழில் துறையில் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்கலாம்.

மேலும் இந்த திட்டத்தில் முகாமில் உள்ள இலங்கை மக்கள் முகாமில் தங்கி இருப்பதற்கான சான்று இணைத்து எந்த ஒரு வருமான சான்றிதழ் இல்லாமல் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம்

தங்களுடைய குடும்ப அட்டையின் நகலை வருமான சான்றிதழ் உடன் இணைத்து உங்கள் ஊரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்.

காப்பீட்டுத் திட்டங்களுக்கு என்று தனியாக ஒரு துறை உள்ளது அங்கு சென்று இந்த சான்றிதழ்களை கொடுத்தால்.

அவர்கள் இந்த சான்றிதழ்களை சரிபார்த்து தங்களுடைய ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு தங்களுக்கு 22 இலக்க எண் ஒற்றை கொடுப்பார்கள்.

அந்த 22 இலக்கு எண் வாங்கிய அடுத்த நாளிலிருந்து உங்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் அந்த எண்ணை பயன்படுத்தி மருத்துவ சிகிச்சை பெறலாம்.

குடும்பத் தலைவர் புகைப்படம் எடுத்துக்கொண்டால் போதும் குடும்ப அட்டையில் உள்ள மற்ற அனைவரும் இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியும்.

உங்களுக்கு இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளதா

உங்களுக்கு காப்பீட்டு அட்டை செயல்பாட்டில் உள்ளதா என்பதை கண்டறிய https://www.cmchistn.com/ என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள் அவற்றில் என்பதில் என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.

இப்பொழுது மேல் காட்டப்பட்டுள்ளது போல் ஒரு புதிய பக்கம் திறக்கப்படும் அவற்றில் உங்கள் காப்பீட்டு அட்டையில் உள்ள 22 இலக்க எண்.

அல்லது உங்களுடைய பழைய ரேஷன் கார்டில் உள்ள எண் ஏதாவது ஒன்றை உள்ளிட்டு பின் அவற்றிலுள்ள கேப்ட்சா கோடியினை உள்ளீடு search பட்டனை கிளிக் செய்யுங்கள்.

பின்பு உங்களுக்கு காப்பீடு செயல்பாட்டில் உள்ளதா என சில விவரங்கள் காட்டப்படும், இதன் மூலம் உங்களுக்கு காப்பீடு செயல்பாட்டில் உள்ளதா என்பதை எளிதாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

புற்றுநோயை வரவழைக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள் என்ன..!

உதவி மையம்

இந்த திட்டம் பற்றி மேலும் முழுமையான விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ள 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும்.

What are the Kidney failure reason in tamil

கட்டணமில்லா அழைப்பு மையத்தின் 18004253993 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்புகொண்டு முழுமையான விவரங்களை முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள்.

What is your reaction?

Excited
0
Happy
3
In Love
0
Not Sure
0
Silly
0