
TN Cyber Crime Police Warning new types of crime
தொட்டு விடாதீர்கள் தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி எச்சரிக்கும் சைபர் க்ரைம் காவல்துறை என்ன நடக்கிறது..!
தமிழகத்தில் இப்பொழுது குறிப்பாக சைபர் கிரைம் காவல்துறை ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது,அதாவது வேலை தேடும் நபர்களை குறி வைத்து புதுவகை மோசடி தொடர்ந்து வருகிறது.
வெளிநாட்டில் இருந்து வேலை கொடுப்பதாக தெரிவித்து (work from home) என்று தெரிவித்து இணையதளம் மூலம் உங்களுடைய பணத்திற்கு ஆப்பு வைக்கின்ற.
தில்லாலங்கடி மோசடி கும்பல் ஒன்று உலா வருகிறது இது போன்ற மோசடி நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக சைபர் கிரைம் காவல்துறை ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
ஒருத்தரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவருக்கு பலவிதமான ஆசைகளை தூண்ட வேண்டும் என்று சொல்வார்கள்.
இன்றைக்கு பணத்தை திருடும் மோசடி கும்பல் பலரும் இணையதளம் மூலம் ஆசைகளை விதைத்து ஏமாந்த நேரத்தில் பணத்தை அறுவடை செய்து விடுகிறார்கள்.
இணையதளம் மூலம் கடன் கொடுப்பதாக மொபைல் செயலிகள் ஒரு பக்கம் பொதுமக்களை அதிகளவில் ஏமாற்றி வருகிறது என்றால் இப்பொழுது புதுவிதமான வேலை தேடும் நபர்களை குறிவைத்து.
மற்றொரு கும்பல் களம் இறங்கியுள்ளது அதாவது இந்த கும்பல் குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வேலை பெற்று தருவதாக கூறி பல்வேறு விதமான மோசடிகளை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.
இந்த மோசடி கும்பல் பற்றி சென்னை காவல்துறையினர் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
இணையதளத்தில் பண மோசடி செய்து வரும் சைபர் கிரைம் குற்றங்களில் தற்போது புதிய வகை குற்றங்களை கையாண்டு வருகிறார்கள்.
உங்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப்பிற்கு ஒரு லிங்க் உடன் தகவல் அனுப்புகிறார்கள் அதில் நீங்கள் வேலைத்தொட நபர் என்பதை அறிகிறோம்.
எங்கள் நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது அதில் உங்களுக்கு பணியாற்ற விருப்பம் இருந்தால்.
வீட்டில் இருந்தபடியே தினமும் குறைந்தபட்ச 40 ஆயிர ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
ஒருவேளை இந்த லிங்கை நீங்கள் தெரியாமல் தொட்டால் Telegram Group செயலில் உள்ள குழுக்களில் நீங்கள் இணைந்து விடுவீர்கள் அதன்பிறகு எங்கள் நிறுவனத்தில் இணைந்ததற்கு நன்றி.
நாங்கள் பதினைந்து வகையான மிகவும் எளிதான டாஸ்க்களை கொடுக்கிறோம் அதில் வெற்றி பெற்றால் 30 சதவீதம் கமிஷன் தொகை உங்களுக்கு வழங்கப்படும்.
முன்பணமாக 500 ரூபாய் வரை வங்கி கணக்கிற்கு அனுப்புகிறோம் எனவும் உங்கள் வங்கி கணக்கு hdfc உள்ளிட்ட விவரங்களை அனுப்பும்படி கேட்கிறார்கள்.
அதன்பிறகு 1,000/- ரூபாய் செலுத்துங்கள் கமிஷன் தொகையுடன் உங்கள் வங்கி கணக்கில் வர வைக்கப்படும் என்று கூறி முன் பணம் கொடுத்த பிறகு.
உங்களிடம் இருந்து 50,000/- ரூபாய் வரை திருடுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
இந்த மோசடி அதிக அளவு பெண்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து நடத்தப்படுகிறது எனவே மிகவும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எனவும் பல மோசடி தொடர்பான உடனடியாக 1930 என்ற எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்துள்ளார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
indian govt insurance scheme in tamil
Kisan Vikas Patra scheme details 2023
tn rs 1000 rupees scheme need 6 documents