Uncategorized

TN food safety department advice for public 2022

TN food safety department advice for public 2022

TN food safety department advice for public 2022

இந்த கோடைக்காலத்தில் குளிர்பானம் வாங்கினால் கண்டிப்பாக இதனை சோதனை செய்து கொள்ளுங்கள்..!

பொதுமக்கள் குளிர்பானங்களை கடைகளில் வாங்கும் பொழுது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா.

என குறிப்பாக காலாவதி தேதியை, சரிபார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தற்போது வெயில் அளவில் காட்டத் தொடங்கியுள்ளது, பகல் நேரங்களில் அதிக வெப்பம் காணப்படும் நிலையில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் குறைந்துள்ளது.

இதன் காரணமாக சாலைகளில் குளிர்பானங்கள், பழச்சாறு வகைகள், விற்பனை செய்யும் கடைகள் அதிக அளவில் முளைத்துள்ளன. வெளிநாட்டு குளிர்பானங்களை நாடி செல்லும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

குளிர்பானங்கள் விற்பனை அதிகரிப்பு

பொதுமக்கள் குளிர்பானங்களை கடைகளில் வாங்கும் பொழுது அதில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக அச்சிடப் பட்டுள்ளதா எனவும்.

குறிப்பாக காலாவதி தேதி சரிபார்த்து வாங்கி பயன்படுத்துங்கள் என தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்தத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்கள் கோடை காலங்களில் அதிக அளவில் பயன்படுத்தும் குளிர்பானங்களில்.

தரம் குறித்து காலாவதியான தேதி, குளிர்பானங்களை அதிக அளவில் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக புகார் மேல் புகார் உணவு பாதுகாப்பு துறைக்கு வருகிறது.

மேலும் தரமற்ற காலாவதியான குளிர்பானங்களை சாப்பிடுவதால் வயிற்று வலி, வயிற்றுப் புண், வாந்தி, வயிற்றுப் போக்கு, குமட்டல், போன்ற பல்வேறு வகையான உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.

TN food safety department advice for public 2022

உணவு பாதுகாப்பு துறை

அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் குளிர்பானங்களின் தரம் மற்றும் காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்வது குறித்து.

கடந்த பிப்ரவரி 2022 ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வின்போது 5,777 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில் 634 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

ஆய்வின் தொடர்ச்சியாக ரூபாய் 9.02 லட்சம் மதிப்புள்ள குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற கடைகளில் எடுக்கப்பட்ட குளிர்பானங்களில் மாதிரிகள் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்

குளிர்பானங்கள் மற்றும் உணவு உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் வழங்கப்படும் உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் நிலையங்களிலும் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006 மற்றும் 2011 ஒழுங்கு முறைகள் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றி தயாரிக்கவேண்டும்.

குளிர்பானங்கள் மற்றும் உணவு உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் உணவு மற்றும் குளிர்பானங்களில் தரம் குறித்து ஆய்வு செய்த பின்னரே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுப்ப வேண்டும்.

கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்

உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006 ஒழுங்குமுறைகள் 2011 படி குளிர்பானம் மற்றும் உணவு பாட்டில்கள் பாக்கெட்டுகளில் மீது உள்ள லேபிளில்.

உணவு பாதுகாப்பு துறை உரிமம், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், மற்றும் முழுமையான முகவரி, நிகர எடை,லாட் /கோடு /பேட்ஜ் /   பயன்படுத்தக்கூடிய கால அளவு.

அனுமதிக்கப்பட்ட இயற்கை நிறங்கள், ஊட்டச்சத்துக்கள், அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறங்கள், குறித்த அனைத்து தகவல்களும் சைவ மற்றும் அசைவ குறியீடு உள்ளிட்ட விவரங்கள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

அதிக லாபம் தரும் பனை மர இலை தட்டு தயாரிப்பு தொழில்..!

பொதுமக்கள் புகார் அளிக்கலாம்

குளிர்பானம் மற்றும் உணவுப் பொருட்களின் காலாவதி நாள் உள்ளிட்ட விவரங்கள் உணவு மற்றும் குளிர்பான நிறத்தில் மாறுபாடு தெரிந்தவுடன்.

Fatty Foods that cause heart attack in tamil

பொதுமக்கள் குளிர்பானங்கள் மற்றும் உணவு வாங்கும் பொழுது மேற்குறிப்பிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா எனவும் குறிப்பிட்டுள்ளதை. சரி பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.

தரமற்ற உணவு மற்றும் குளிர்பானங்கள் குறைபாடுகள் குறித்து 9444042322 என்ற எண்ணிற்கு அல்லது unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம்.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0