
tn government announced 1000 aid new scheme for girls
தமிழகத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்படுகிறது? பட்ஜெட் அறிவிப்பால் பரபரப்பு என்ன..!
தமிழ்நாடு அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மக்களை கவர்ந்துள்ளார் மிக முக்கியமான திட்டம் என்றால் கல்லூரி மாணவிகளுக்கு.
மாதம் ரூபாய் 1000/- வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் ஏற்கனவே தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்கு.
மாற்றாக கொண்டுவரப்பட்டு இருப்பது பட்ஜெட் குறிப்பின் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் முழு நீள பட்ஜெட்டை நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் காகிதம்மின்றி டிஜிட்டல் முறையில் முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கான நிதியை பிடிஆர் அறிவித்தார்.
கல்லூரி மாணவிகளுக்கு புதிய திட்டம்
இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெற்றிருந்தாலும் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு.
மாதம் ரூபாய் 1000/- நிதி உதவி வழங்கும் திட்டம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு படிக்கும் மாணவிகள் இடைநிற்றல் இன்று படித்து முடிக்கும் வரை.
மாதம்தோறும் ரூபாய் 1,000/- ஊக்கத்தொகை அவர்களுடைய வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்
இதனிடையே தமிழகத்தில் ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி விட்டுத்தான்.
அதே பெயரில் மாணவிகளுக்கு புதிய நிதி உதவி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் என்ற பெயரில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில்.
படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருமண உதவி திட்டம்
பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் மூலம் பட்டப்படிப்பு முடித்த பெண்கள் திருமணம் செய்யும்போது ரூ 50,000 நிதி உதவியும்.
ஒரு சவரன் தங்கம் வழங்கப்பட்டு வந்தது, 10ம் வகுப்பு படித்த பெண்களுக்கு திருமணம் செய்யும்போது 25,000ரூபாய் நிதி உதவியும்.
ஒரு சவரன் தங்கம் வழங்கப்பட்டது, இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக, பட்டப்படிப்பு படிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்தது.
தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருப்பது என்ன
மு க ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்ற பின்பு முதல் முறையாக இந்த பட்ஜெட் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை மிக குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உதவித்திட்டம் என மாற்றி அமைக்கப்படுகிறது.
இதன் மூலம் அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும்.
பட்டப்படிப்பு / பட்டயப் படிப்பு மற்றும் தொழில் படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாதம் 1000/-ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
இந்த மாணவிகள் ஏற்கனவே கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் கூடுதலாக உதவி பெற முடியும்.
மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற முடியும், இந்த புதிய முயற்சிக்கு வரவு-செலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் அறிவித்துள்ளார்.
தொடரும் திட்டங்கள் என்ன
ஈவேரா மணியம்மையார் நினைவு வறியநிலையில் உள்ள விதவையாரின் மகள் திருமண நிதி உதவித் திட்டம்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண நிதி உதவித் திட்டம்.
இரத்தப் புற்றுநோய் அறிகுறிகள் என்ன…?
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்.
what are the signs of stroke in tamil
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்.
ஆகிய திட்டங்கள் மாற்றமின்றி தொடர்ந்து தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.