Uncategorized

TN government creating new job portal

TN government creating new job portal

TN government creating new job portal

தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் இனி வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது..!

தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தொடர்ந்து புதிய நிறுவனங்கள்.

தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் துவங்கப்பட்டு வருகிறது, அதிகமான முதலீடுகளும் வருகிறது.

இதற்கு ஏற்ப போக்குவரத்து, வீட்டு வசதி, கட்டுமானம், நகர மேம்பாடுகள், போன்ற பல திட்டங்களையும் தமிழ்நாடு அரசு அதிரடியாக செய்து வருகிறது.

இவை அனைத்தும் முழுமையாக வெற்றி அடைய வேண்டுமென்றால் அதற்கு போதுமான மனிதவளம் ஆற்றல் கட்டாயம் தேவை.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் மட்டுமே தொடர்ந்து தொழிற்சாலைகள் லாபகரமாக இயங்க முடியும்.

இதற்கான பணிகள் வேகம் எடுத்துள்ள நிலையில் இரண்டையும் இணைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சொந்தமாக வேலைவாய்ப்பு தளத்தை புதிதாக உருவாக்க முடிவு செய்துள்ளது.

அரசின் நிலை என்ன

தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு அமைப்புக்கு புதிதாக ஒரு வேலைவாய்ப்பு தளம் அதாவது நிறுவனத்தையும் மக்களையும் இணைக்கும் ஒரு வேலைவாய்ப்பு தளத்தை உருவாக்க.

தமிழ்நாடு அரசு இப்பொழுது திட்டமிட்டுள்ளது விரைவில் இந்த வேலைவாய்ப்பு தளத்தை தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைப்பார் என பெயர் வெளியிட ஒரு அரசு உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பிற்கு புதிய வலைத்தளம்

தமிழ்நாடு அரசுக்கு தற்போது நல்ல வேலை வாய்ப்பு தேடுதல் அம்சத்துடன் கூடிய வேலைவாய்ப்பு தேடல் தளம் தேவை இருக்கும் நிலையில்.

விரைவில் இதை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்கள் அதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ப்ளூ கலர் வேலைவாய்ப்புகள்

தமிழ்நாட்டின் ப்ளூ கலர் வேலைவாய்ப்புகளில் அதாவது (பட்டப்படிப்பு தேவைப்படாத) வேலைவாய்ப்புகள் பங்கு பெறுபவர்களின் எண்ணிக்கை.

மிகவும் குறைவாக இருப்பது தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கு பெரும் தலைவலி மற்றும் கவலையாக உள்ளது.

அடிப்படைக் காரணம் என்ன

இத்தகைய ப்ளூ கலர் வேலைவாய்ப்புகளை விரும்பி எடுக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில்.

இந்த பிரச்சனைக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து மக்களின் வேலைவாய்ப்புகள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்பது தான் இந்த புதிய வேலைவாய்ப்பு தேடல் தளத்தின்  குறிக்கோள்.

திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம்

தமிழக அரசு பல வருடமாக விவசாயத் துறை உட்பட பல துறைகளில் மக்களின் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் படித்த மாணவர்களுக்கு IBM.HCL,TCL இணைந்து பல பிரிவுகளிலும் தொழில்நுட்பத்தில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக வளர்ச்சிக்கு கட்டாயம் தேவை

இதேபோல் பல தனியார் நிறுவனங்களும் அமைப்புகளும் தானாக முன்வந்து இத்தகைய பயிற்சிகளையும் பொது தொண்டுகளையும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வழங்கிவருகிறது படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கும்.

வேலை வாய்ப்பு சந்தைக்கு தேவையான திறன்கள் மக்களுக்கு கிடைத்துவிடும் பட்சத்தில் அதிக அளவிலான பெண்கள் வேலைவாய்ப்பு சந்தை வரும் பட்சத்தில்.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு வரி செலுத்துகிறோம் தெரியுமா?

தமிழ் நாட்டின் வளர்ச்சி என்பது புதிய உச்சத்தைத் தொடும் உலக அளவில் என்று தமிழ்நாடு அரசு மூலம் தெரிவித்துள்ளார்கள்.

Avarampoo health benefits list in tamil

ஏற்கனவே தமிழக அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சியில் தமிழக அரசுக்கு சொந்தமான இணையதளம் ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0