
TN government electricity bill hike
தமிழ்நாட்டில் உயரம் மின் கட்டணம் யாருக்கெல்லாம் அதிகரிக்க வாய்ப்பு 10 முக்கிய காரணங்கள்..!
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்வதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் யாருக்கெல்லாம் மின் கட்டணம் மாற்றம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தி 10 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஒரு வருடத்திற்குள் இரண்டு முறை மின்சார கட்டணம் உயர்த்துவது இதுவே முதல் முறை.
வருகின்ற 2027 ஆம் ஆண்டு வரை ஜூலை 1ம் தேதி மின்சார கட்டணம் தானாக உயர்ந்த இடம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4.70% அளவிற்கு மின் கட்டணம் உயரம் விலைவாசி உயர்வு பணவீக்க காரணமாக இந்த மின் கட்டண உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மின்சார கட்டணம் குறித்து 10 முக்கிய தகவல்கள்
100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் ஏழை மக்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று மின்சாரத் துறை தெரிவித்துள்ளது,தமிழ்நாட்டில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகள் செயல்படுகிறது.
இந்தக் கட்டண மாற்றம் காரணமாக 1 கோடி ஏழை எளிய மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது 42 விழுக்காடு மின் இணைப்புதரவர்களுக்கு எந்த மாற்றமும் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
குடிசை இணைப்புகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும், அதேபோல் குடிசைத் தொழில், கைத்தறி தொழில், வழிபாட்டு தளங்களுக்கான, சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.
தற்போது நிலவரப்படி மக்கள் செலுத்தும் மின்சார கட்டணத்தில் குறைந்தபட்சம் அதாவது 4.70 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்படும் அதாவது 100 ரூபாய் செலுத்திய இடத்தில் இனி 105 ரூபாய் செலுத்த வேண்டியதாக இருக்கும்.
தற்போது தமிழ்நாட்டில் பணவீக்கம் பாதிப்பு 4.70 சதவீதமாக உள்ளது,அதே பணம் வீக்கம் இங்கும் கட்டண உயர்வில் அமல்படுத்தப்படும்.
100 யூனிட்டுக்கு மேல் செல்ல செல்ல மின்சார கட்டணம் அதிகரிக்கும் 700 முதல் 800 யூனிட் அல்லது அதற்கு மேல் கூடுதல் மின்சார கட்டணம் அமலுக்கு வர வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த வருடம் மட்டுமின்றி அடுத்து தொடர்ந்து 2027வரை பணம் வீக்கத்தை வைத்து மின்சார கட்டணம் உயரும்.
ஒரு யூனிட்டிற்கு 21 பைசாவிலிருந்து 51 பைசாவாக கட்டணம் உயரும் இது தனி வீடுகளுக்கு.
பொது அப்பார்ட்மெண்டில் உள்ள பொது கனெக்சன்களுக்கு 8 ரூபாயிலிருந்து 8.47 ரூபாய் அளவிற்கு மின்சார கட்டணம் உயர்வு இருக்கும்.
அதேபோல் கிலோ வாட் மின்சாரம் 200 ரூபாயிலிருந்து 208 ரூபாயாக உயரம்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டு 200 யூனிட்களுக்கு மேல் இரண்டு மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 உயர்த்தப்பட்டது.
300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூபாய் 72.50 உயர்த்தப்பட்டது.
400 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூபாய் 147.50 உயர்த்தப்பட்டது.
500 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 297.50 உயர்த்தப்பட்டது.
600 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 155 உயர்த்தப்பட்டது.
பெண்களுக்கான 1000 ரூபாய் திட்ட தகுதி பட்டியல்
Top 10 electric scooters sales in india