
TN Governor R N Ravi in Ooty speech about India
நாட்டை துண்டாக்கும் சக்திகளுக்கு கருணை கிடையாது ஊட்டியில் நின்றபடி கோபத்துடன் வார்னிங் செய்த ஆளுநர் ரவி..!
நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடுமையான முயற்சி செய்யப்படுகிறது, அத்தகைய நபர்களுக்கு நாட்டில் கருணை இல்லை என தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேசியுள்ளார் கோபத்துடன்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகை ராஜ்பவனில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இரு நாள் மாநாடு இன்று தொடங்கியது.
வளர்ந்து வரும் புதிய உலக அரங்கில் இந்தியாவின் பங்கு என்ன 2047க்குள் இந்திய உலகத் தலைவராக இருக்கும், ஆகிய இரு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற தொடங்கியுள்ளது.
இந்த மாநாட்டை இன்று அதிகாலை துவக்கி வைத்த ஆளுநர் ரவி பேசுகையில் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு சமூகப் பிரச்சினைகள் இருந்து வந்தன.
ஆனால் இப்பொழுது அது போன்ற பிரச்சனைகள் பெருமளவு தீர்க்கப்பட்டு விட்டது, ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத சக்திகளால் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வந்தன.
ஜம்மு காஷ்மீர் பிரச்சனை
ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத சக்திகளால் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து வந்தது, தற்போது அங்கு அமைதி நிலை திரும்பியுள்ளது.
ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு சுதந்திரமாக வந்து செல்ல தொடங்கி உள்ளார்கள்.
அதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடமாநிலங்களில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தது.
மாவோயிஸ்டுகள் பிரச்சனை
மாவோயிஸ்டுகள் பிரச்சனை அதிகமாக இருந்தது, ஆனால் அரசின் துரித மற்றும் துல்லியமான நடவடிக்கைகளால் தற்போது மாவோயிஸ்டுகள் பிரச்சனை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நாட்டை துண்டாக்கும் சக்திகளுக்கு அரசிடம் கருணை இல்லை இது துல்லியமான தாக்குதலின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.
சமூக ஏற்றத்தாழ்வுகள் என்ன
ஒரே நாடு, ஒரே குடும்பம்,என்று எந்தவித சமூக ஏற்றத் தாழ்வுகளும் கிடையாது, இந்தியாவில் வருகின்ற 2047 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் முன்னிலை வகிக்க கல்வி முறைகளில் மிகப்பெரிய புதிய மாற்றங்கள் தேவை.
அதற்கான திட்டமிடுதலில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், திட்டமிடுதலின், பல்கலைகழக துணைவேந்தர்கள் தீவிரமாக புதிய சிந்தனையுடன் ஈடுபடவேண்டும்.
70 சதவீத மாணவர்கள்
இந்தியாவில் 70 சதவீத மாணவர்கள் கலை அறிவியல் பாடங்களில் படித்து வருகிறார்கள், மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் போது திறமையானவர்களாக இருக்கவேண்டும்.
இந்தியாவை முதன்மையான நாடாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த துணைவேந்தர்கள் மாநாடு ஊட்டியில் 2 நாட்கள் நடைபெறும் அரசாங்கம் மற்றும் தனியார் துறை பல்கலைக்கழக துணைவேந்தர்கள், தொழிலதிபர்கள், என பல்வேறு முக்கிய நபர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்றிக் கொள்வதற்கான புதிய சட்டத் திருத்த மசோதாவை இன்று திமுக அரசு சட்டசபையில் கொண்டுவந்தது, அதற்கு பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்கள்.
துணி சோப்பு தயாரிக்கும் முறை..!
இந்த தீர்மானத்தின் மூலம் ஆளுநரின் முக்கியமான பொறுப்பு பறிக்கப்படுகிறது, ஆனால் இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
what are the sugar wound treatment in tamil
தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய 9 தீர்மானங்கள் ஏற்கனவே ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் இருக்கிறது, அதற்கு அடுத்த படியாக இந்த தீர்மானத்திற்கு ஆளுநரின் முடிவு என்பது வருங்காலத்தில் தெரியும்.