Uncategorized

tn govt has dramatically increases property tax

tn govt has dramatically increases property tax

tn govt has dramatically increases property tax

சொத்து வரியை அதிரடியாக உயர்த்திய தமிழக அரசு உங்கள் வீட்டுக்கு எவ்வளவு தொகை கட்ட வேண்டும் தெரியுமா..!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், சொத்து வரி விகிதங்களை 25% முதல் 150% வரை உயர்த்தி, தமிழக அரசு அதிரடியாக ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25% மட்டுமே சொத்துவரி இப்பொழுது உயர்த்தப்படுகிறது.

601 முதல் 1200 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் மட்டுமே சொத்துவரி இப்போது உயர்த்தப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த ஒரு மாற்றமும் செய்யப்படாமல் இருப்பதால்.

உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில் வரும் பெரும் தொகை பெருமளவு குறைந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செலவினம் பலமடங்கு உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கீழ்கண்டவாறு சொத்து வரி உயர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அந்த அறிக்கையானது தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

tn govt has dramatically increases property tax

சொத்து வரி எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது

600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25% மட்டுமே சொத்துவரி உயர்த்தப்படலாம்.

601 முதல் 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் மட்டுமே சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

1201 முதல் 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம் மட்டுமே சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

1800 சதுர அடிக்கு அதிகமான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் சொத்து வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது.

100 சதவீதம் சொத்து வரி உயர்வு

இப்பொழுது நடைமுறையில் உள்ள சொத்து வரியில் வணிக பயன்பாடு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 75 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

அதேபோன்று பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் 20 மாநகராட்சிகளில் சொத்து மதிப்பு உயர்வு 2022 மற்றும் 2023 ஆம் நிதியாண்டில் உயர்த்தப்பட உள்ளது.

அதிரடியாக உயர்வு

சொத்து மதிப்பு உயர்வு குறித்து குழு அமைத்து அந்த குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி சென்னையின் புறநகர் பகுதியில் 600 சதுர அடிக்கும் குறைவாக உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும்.

சென்னையோடு 2011இல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் 25 சதவீதமும் உயர்த்திடவும்.

மேலும் சென்னையில் பிரதான நகர் பகுதிகளில் உள்ள 600 முதல் 1200 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும்.

1200 முதல் 1800 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் 100% உயர்த்தப்படலாம் என அந்த  குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

150 சதவீதம் உயர்வு

சென்னையில் 1801 சதுர அடிக்கு மேல் பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு சொத்துவரி 150% உயர்த்தவும்.

சென்னையோட 2011ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் 600 முதல் 1200 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்கள் 50 சதவீதமும்.

1201 முதல் 1800 சதுர அடி பரப்பளவில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75%.

1801 சதுர அடிக்கு மேல் பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு சொத்து வரி 100% உயர்த்தவும் குழு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் சொத்து வரி எவ்வளவு உயர்வு

சென்னையில் பிரதான நகர் பகுதிகளில் வணிக பயன்பாடு கட்டிடங்களுக்கு 150%.

தொழிற்சாலை மற்றும் கல்வி நிலையக் கட்டிடங்களுக்கு 100 சதவீதமும்.

கடந்த 2011ஆம் ஆண்டு சென்னையோடு இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் உள்ள வணிகப் பயன்பாடு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும்.

தொழில் மற்றும் கல்வி நிலையங்களுக்கு 75 சதவீதமும் சொத்து வரியை உயர்த்த குழு அதிரடியாக பரிந்துரைத்துள்ளது.

மேற்படி மாநகராட்சிகளின் சொத்து வரி உயர்வு தொடர்பான குழுவின் பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு.

அதனை செயல்படுத்திட சம்பந்தப்பட்ட மாநகராட்சி, மாமன்ற மூலம், நடவடிக்கை எடுக்க அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில்

இதற்கு முந்தைய சொத்துவரி மதிப்பீடுகளின் போது குடியிருப்பு பரப்பளவிற்கு ஏற்றவாறு, தனித் தனியாக பிரித்து சொத்து வரி மதிப்பீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் தற்போதைய மதிப்பீடுகளின்படி பொதுமக்கள் மற்றும் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகைகளில் குடியிருப்பு பகுதிகளில் பரப்பளவை 4 வகையாக பிரித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மதிப்பீடு எப்படி செய்யப்பட்டுள்ளது

1200 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவுள்ள கட்டிடங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி பிரதான பகுதியில் 6240 சதவீதமாகவும்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளின், மாநிலத்தின் பிற 20 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 88 சதவீதமும் தற்போது அமைந்துள்ளது.

பெரும்பாலான ஏழை மக்கள் 1200 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு வீடுகளில் வசிப்பதால் இந்த வரி உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடம்பில் ரத்த அணுக்கள் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்..!

எனவே நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பொருத்தவரை சொத்துவரி மதிப்பீடு மேற்கொள்ள அரசு ஆணை வழங்கியுள்ளது.

what are the side effects of using earphones

மாநகராட்சிகளை பொறுத்தவரை அந்தந்த மாநகராட்சி மன்றங்களின் தீர்மானம் பெற்று சொத்துவரி மதிப்பீடு மேற்கொள்ள  தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
1
Silly
0