
tn govt plan to increase guideline value of land
நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை 200 சதவீதம் உயர்த்த தமிழக அரசு புதிய திட்டம், இனி யாருமே நிலங்கள் வாங்கவே முடியாத சூழ்நிலை உருவாகிவிடும்.
நில வழிகாட்டி மதிப்பு 200 சதவீதம் வரை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் வீடு கட்ட நினைப்பதும், விவசாயிகள் நிலம் வாங்க வேண்டும் என்பதும் இனி கனவில் கூட நடக்காது சூழ்நிலை உருவாகிவிடும்.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி செயலாளர் யுவராஜ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் என்ன நடந்தது
தமிழகத்தில் கடந்த 2012இல் அப்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு ஒட்டுமொத்தமாக முழுவதும் சீரமைக்கப்பட்டு.
இதில் காணப்பட்ட குறைபாடுகள் முழுவதும் சரி செய்யப்பட்டது 2017 அதிமுக அரசு மக்கள் எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்படக்கூடாது.
என்ற உயர்ந்த நோக்கில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை 33 சதவீதம் அளவு குறைத்தது.
நில வழிகாட்டி மதிப்பு என்ன நடக்கும்
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் வழிகாட்டி மதிப்புகளை ஒட்டுமொத்தமாக சீரமைப்பு அதற்கான பூர்வாங்க பணிகளை பதிவுத்துறை தொடங்கியுள்ளது.
பதிவுத்துறையில் முறையாக மாநில மாவட்ட அளவில் கமிட்டி அமைத்து வருவாய்த்துறை ஆலோசனையுடன் வழிகாட்டி மதிப்பு கொடுப்பது வழக்கம்.
ஆனால் தற்போது வழிகாட்டி மதிப்பு 200 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நில வழிகாட்டி மதிப்பு என்றால் என்ன
தோராயமாக ஒரு சிறிய கிராமத்தில் ஒரு ஏக்கர் 5 லட்ச ரூபாய் என வழிகாட்டி மதிப்பில் உள்ளது.
அந்த பகுதியை சேர்ந்த நில உரிமையாளர் வங்கி கடன் பெறும் நோக்கில் 15 லட்சம் ரூபாய்க்கு ஒரு ஏக்கர் கை மாறுவதாக பத்திரப்பதிவு செய்து இருப்பார்.
இதனை அடிப்படையாக வைத்து புதிய வகைப்பாட்டை உருவாக்கி அந்த பகுதியில் அனைத்து சொத்துக்களும் ஒரு ஏக்கர் 15 லட்சம் ரூபாயாக வழிகாட்டி மதிப்பு மாற்றப்படுகிறது.
200 சதவீதம் உயர்த்த தமிழக அரசு திட்டம்
தேர்தல் வாக்குறுதிகளை எதுவுமே நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களை திமுக அரசு முழுவதும் ஏமாற்றி விட்டது.
சொத்துவரி, மின் கட்டண உயர்வு, என அடுத்தடுத்த மக்களை திமுக அரசு வரி உயர்வுகளால் கொடுமைப்படுத்துகிறது.
ஏற்கனவே பொருளாதார ரீதியாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்.
எதிர்காலத்தில் அதிக லாபத்தைக் கொடுக்க போகும் தொழில்கள்..!
அரசு நில வழிகாட்டி மதிப்பு 200 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது கண்டிக்கதக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி வரும் நாட்களில் என்ன நடக்கும்
இதனால் சொத்துக்களின் விலை என்பது பல மடங்கு உயர்ந்து விடும் சொத்து விற்பனை மற்றும் வாங்குவது என்பது கடுமையாக பாதிக்கப்படும்.
ஏழை எளிய நடுத்தர மக்கள் வீடு கட்டுவதற்கு நிலம் வாங்க முடியாத சூழ்நிலை உருவாகிவிடும்.
A new twist in the Kallakurichi school girl case
விவசாயம் நிலம் வாங்க முடியாத சூழ்நிலை உருவாகிவிடும்.
இதனால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை நிச்சயம் ஏற்படும்.