
TN has brought 31 types of services online
ஆர்டிஓ ஆபிசுக்கு இனி நீங்கள் போக வேண்டாம் இணையதளத்தில் இனி இத்தனை சேவைகள் தமிழக அரசு அறிவித்த முக்கிய அறிவிப்பு என்ன..?
நகல் பழகும் உரிமம்,ஓட்டுனர் உரிமத்தில் பெயர் மாற்றம் உள்பட 31 வகையான சேவைகளை இனி நீங்கள் இணையதளத்தில் பெற முடியும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
லைசென்ஸ் எடுப்பதில் தொடங்கி,வாகனத்திற்கு நம்பர் பிளேட் வாங்குவது,பல்வேறு வாகனம் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.
அதற்கு இப்பொழுது முற்றுப்புள்ளி வந்துவிட்டது இனி இந்த வசதிகளை பொதுமக்கள் இணையதளத்தில் பெறலாம்.
தமிழ்நாட்டில் மொத்தம் 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இருக்கிறது மேலும் 54 வகையான போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்கள் செயல்படுகிறது.
இந்த அலுவலகங்கள் அனைத்தும் கணினி மையமாக்கப்பட்டுவிட்டது இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் சேவைகளை எந்த சிரமமும் இன்றி பெற முடியும்.
இதே நேரம் பல சேவைகளுக்கு நேரில் போக வேண்டிய நிலை இருந்தது இந்த நிலை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது.
தற்போதைய நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்ந்த 48 சேவைகளில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம், பழகுனர் உரிமம் பெறுதல், உள்ளிட்ட 6 சேவைகள் முற்றிலும் இணையதளத்தில் கொண்டுவரப்பட்டு விட்டது.
இந்த நிலையில் மீதமுள்ள 42 சேவைகளும் இணையதள வழியில் கொண்டுவரப்படும் என தமிழக சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.
அந்த வகையில் 25 சேவைகள் முழுக்க முழுக்க இணையதளத்தில் கொண்டுவரப்பட்டு விட்டது.
என்னென்ன சேவைகள் இணையதளத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை வட்டாரப் போக்குவது அலுவலகங்களுக்கு சென்றால் நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
இனிவரும் நாட்களில் நகல் பழகுணர் உரிமம், ஓட்டுநர் உரிமத்தில் பெயர் மாற்றம், பன்னாட்டு ஓட்டுநர் உரிமம் வாகனத்திற்கான தற்காலிக பதிவேன்.
அனுமதி சீட்டில் (பர்மிட்) பெயர் மாற்றம் அனுமதி சீட்டை ஒப்படைத்தல் போன்ற 25 சேவைகளை முற்றிலும் இணையதளத்தில் மட்டுமே நீங்கள் பெற முடியும்.
இதனிடையே மீதமுள்ள 17 சேவைகளும் இணையதள வழியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் இப்பொழுது அதிரடியாக எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டையில் உள்ள பெயர்,முகவரி, உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும்.
விவரங்கள் ஏதாவது மாறுபட்டு இருந்தால் இணையதளத்தில் இந்த சேவைகளை உங்களால் பெற முடியாது.
தற்போது அமலுக்கு வந்துள்ள 31 சேவைகளும் https://tnsta.gov.in/என்ற தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்களால் பெற முடியும்.
ஒருவேளை உங்களுடைய ஓட்டுனர் உரிமம் தொலைந்து போனால் எப்படி பெறுவது நீங்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை முற்றிலும் இழந்து விட்டால் அல்லது காணாமல் போனால் அது குறித்து காவல்துறையிடம் நீங்கள் புகார் தெரிவிக்க வேண்டும்.
காவல்துறையில் நீங்கள் இணையதளத்தில் புகார் தெரிவிக்க https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/LostDocumentReport?0 என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.
இதில் புகார் அளித்து காவல்துறை சான்றிதழ் உடன் விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் https://parivahan.gov.in/parivahan/ என்ற இணையதளத்தில் நகல் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to download e PAN card in tamil 2023