
TN Neet exemption bill sent to president
டெல்லிக்கு அனுப்பப்பட்ட திமுகவின் பந்து அடுத்து நடக்கப்போவது என்ன..!
நீட் விளக்கு சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார் கவர்னர் ஆர் என் ரவி ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கும் இடையே மிகப்பெரிய மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இன்று சட்டசபை கூட்டத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் ஆளுநரின் செயலாளர் முதல்வரின் ஸ்டாலினுக்கு போன் செய்து இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் உடனே அந்த தகவலை சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் மூலம் மசோதா அனுப்பப்பட்டுள்ளது.
நமது தொடர் முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் மகிழ்ச்சியாக விளக்கம் தெரிவித்துள்ளார்.
திமுக மற்றும் ஆளுநர் மோதல்
ஆளுநருக்கு எதிராக ஆளும் திமுக அரசு கடுமையான பல்வேறு முயற்சிகளையும் எதிர்ப்புகளையும் எடுத்ததன் விளைவாக இந்த மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார்.
ஆளுநருக்கும் ஆளும் திமுக அரசுக்கு இடையே கடுமையான மோதல் நிலவி வந்த நிலையில் ஆளுநரின் இந்த முடிவு இரண்டு தரப்பிற்கும் இடையிலான மோதலை சற்று குறைத்துள்ளது.
ஆளுநரின் இந்த முடிவிற்கு பின் எங்களின் தொடர் போராட்டம் தான் என்று திமுக தெரிவித்துள்ளது, ஆளுநருக்கு எதிராக திமுக எடுத்த முயற்சிகள் என்ன என்று முழுமையாக பார்ப்போம்.
திருப்பி அனுப்பினார்கள்
முதல் முறையாக நீட் விவகாரத்தில் திமுக அரசு தீவிரமாக நடந்து கொண்டது இரண்டாவது முறை சட்ட மசோதாவை நிறைவேற்றிய பின்பு.
முதல்முறை மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத அடுத்த நிலையில் இரண்டாவது முறை மசோதாவை மீண்டும் அனுப்பியது.
தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது அரிது என்பதால் இதன் வீரியம் அப்போது பெரிதானது.
இரண்டாவதாக நேரடியாக பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக முறையிட்டார் பிரதமரை நேரில் சந்தித்தபோது நேரடியாகவே முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நீட் விவகாரம் பற்றி பேசினார்.
இது தேசிய அளவில் கவனம் பெறத் தொடங்கியது, உள்துறை அமைச்சரிடம் பல நாள் காத்துக் கிடந்த தமிழ்நாடு எம்பிக்கள் இதுபற்றி முறையிட்டனர்.
தேர்தல் நேரம் என்று கூறிய அமித் ஷா தமிழ்நாடு எம்பிகளை சந்திக்க மறுத்ததாலும் காத்திருந்து சந்தித்துவிட்டு நீட் பற்றி புகார் அளித்தனர்.
மாநிலங்களவையில் பேசிய திமுக எம்பி வில்சன் ஆளுநர்களின் அதிகாரத்திற்கு எதிராக மசோதா தாக்கல் செய்தார்.
அதில் மாநில சட்டமன்றங்களால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது மாநில ஆளுநர்கள் .
முடிவு எடுப்பதற்கு சரியான காலத்தை நிர்ணயிக்க வேண்டும் இதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 200 ஆவது பிரிவை திருத்தம் செய்யவேண்டுமென்று தனிநபர் உறுப்பினர் மசோதாவை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து மசோதாக்கள்
தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை திரும்ப பெறக்கோரி மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டீஸ் அனுப்பியது.
இது அங்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றாலும் மிக முக்கியமான தீர்மானமாக பார்க்கப்பட்டது.
திமுக எம் பி டி ஆர் பாலு மூலம் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தேசிய அளவில் மிகப்பெரிய கவனம் பெற்றது.
ஆளுநரை எதிர்க்கும் வகையில் அவர் கொடுத்த தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் திமுக அமைச்சர்கள் ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் மொத்தமாக புறக்கணித்து விட்டன.
வேறு வழி இல்லை
இதுபோல் பல்வேறு வகையான நெருக்கடிகள் தொடர்ந்து தமிழக ஆளுநருக்கு கொடுக்கப்பட்டு வந்தது, இதனால் வேறு வழியின்றி ஆளுநர் நீட் விளக்கு சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.
தொடர் அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி ஆளுநர் இந்த மசோதாவை டெல்லிக்கு அனுப்பி உள்ளார்.
மூளை காய்ச்சல் அறிகுறிகள் என்ன..!
இதைச் செய்யாத பட்சத்தில் திமுக அரசு சட்ட ரீதியான போராட்டங்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
How to find pure gold in tamil
இனிவரும் காலங்களில் நீட் விளக்கு பற்றி திமுக அரசு நேரடியாகவே குடியரசுத் தலைவரிடம் மட்டுமே முறையிட முடியும்.