
TN power cut unannounced power continue
தமிழகம் முழுவதும் மின்வெட்டு என்னதான் காரணம் சொல்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!
தமிழ்நாடு முழுவதும் நேற்று மாலையில் இருந்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின்வெட்டு புகார்கள் இணையதளம் மூலம் வந்த நிலையில்.
மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு மின்சாரம் தடைபட்டது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் மின்தடை ஏற்பட்டது, பல இடங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியிருக்கும் நிலையில்.
திடீர் மின்தடையால் மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டார்கள், இதுதொடர்பான மின்வாரியத்திற்கு புகார்கள் மற்றும் தொலைபேசி வாயிலாக அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது.
அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் பலர் திமுக அரசை விமர்சித்து பதிவுகளை வெளியிட தொடங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில் திடீர் மின்தடை குறித்து தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது சமூக வலைதளங்களில் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் நேற்று இரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750MW திடீர் என்று தடைப்பட்டது.
இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின் பற்றாக்குறையை சமாளிக்க, நமது மின்சார வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக போர்க்கால அடிப்படையில் அதிகரித்து.
தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் நகர்ப் புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது, ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சரி செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.
தென் மாவட்டங்கள் முழுவதும் தவிப்பு
தூத்துக்குடிநகர் பகுதி மற்றும் வாகைகுளம், தெய்வசெயல்புரம், சாத்தான்குளம், உடன்குடி, ஆத்தூ,ர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் பல இடங்களில் மின்வெட்டு தொடர்ந்து இருந்தது.
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு ஏற்பட்டு.
இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள், இப்பொழுது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால்.
நோயாளிகள், குழந்தைகள், பெரியவர்கள், பள்ளி சிறுவர்கள், என அனைத்து தரப்பினரும் மின் விசிறி இயக்க முடியாமல் தவித்தார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஊரிலும் மின்வெட்டு
அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு நகர்ப்புறங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும்.
கிராமப்பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஒரு சில இடங்களில் இரவு 10 மணிக்கும் மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, நள்ளிரவு ஒரு மணிக்கு மேலாகியும் மின்சாரம் வராததால், மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளானார்கள்.
தென் மாவட்ட விவசாயிகள் தவிப்பு
சீர்காழி சுற்றுவட்ட பகுதிகளான வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம், திருமுல்லைவாசல், திருவெண்காடு, உள்ளிட்ட பகுதிகளில் மாலையிலிருந்து தொடர் மின்வெட்டு ஏற்பட்டது.
குளிர்சாதன பெட்டி, மின் விசிறி, இயங்காத காரணத்தால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வெளியில் வந்து அமர்ந்தார்கள்.
சீர்காழி சுற்றுவட்ட பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால் இருள் சூழ்ந்தது, விவசாயிகளும், மாணவர்களும், கடுமையான சிரமத்திற்கு பாதிக்கப்பட்டார்கள்.
தொடர்ந்து தமிழகம் தவிப்பு
தமிழகம் முழுவதும் திடீரென்று அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக மக்கள் புழுக்கத்தில் தவித்தார்கள்.
தேர்வு நேரங்களில் படிக்கும் மாணவர்கள் மின்சாரம் இல்லாமல் கடுமையாக சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக பெற்றோர்கள் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார்கள்.
இயற்கையாகவே உடல் எடை குறைக்க வீட்டு வைத்தியம் என்ன..!
பகல் நேரங்களில் அக்னி வெயில் போல அடிக்கும் அனலடிக்கும் வெப்பத்தில் தவிக்கும் மக்களுக்கு திடீர் மின் வெட்டு கடும் சிரமத்தை தருகிறது.
அதேபோல மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும், ஏற்படும் பிரச்சினையால் பெரியவர்கள், குழந்தைகள், பாதிக்கப்படுகிறார்கள்.
what are the side effects of using earphones
அதுமட்டுமில்லாமல் விவசாயிகள் இந்த மின்வெட்டு பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
என சமூக வலைதளங்களில் மின்வெட்டு குறித்து இரவு முழுவதும் தொடர்ந்து பதிவேற்றங்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றது.