செய்திகள்

சமையல் கேஸ்+ரேஷன் கார்டு அக்கவுண்ட் ஓபன் பண்ணியாச்சா வேகம் எடுக்கும் TN rs 1000 monthly assistance for women benefits

TN rs 1000 monthly assistance for women benefits

TN rs 1000 monthly assistance for women benefits

சமையல் கேஸ்+ரேஷன் கார்டு அக்கவுண்ட் ஓபன் பண்ணியாச்சா வேகம் எடுக்கும் ரூபாய் 1,000/- உரிமைத்தொகை திட்டம்..!

மகளிருக்கான 1,000/- ரூபாய் உரிமை தொகை திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்துள்ளது.

இந்தக் கூட்டம் குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளன பெண்களுக்கு 1,000/- ரூபாய் அறிவிப்பு குறித்து கடன மார்ச் 20ஆம் தேதி நிதி அமைச்சர் அறிவித்தார்.

மகளிர் உரிமைத்தொகை மாதம் 1,000/- ரூபாய் அறிஞர் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும்.

தமிழ்நாட்டில் தகுதியான ஏழை எளிய குடும்பத் தலைவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் 2 கோடிக்கு மேல் குடும்ப அட்டைகள் இருக்கும் போது தமிழக அரசு வெறும் 7000 கோடி ரூபாய் மட்டுமே இதற்கு ஒதுக்கீடு செய்திருப்பதால்.

அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் கிடைக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது.

இதற்கு தமிழக சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன் இப்பொழுது ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

யார் யாருக்கு பலன் அதில் ஏற்கனவே மாதம் 1,000/- உதவித்தொகை பெற்று வரும் வயதான பெண்கள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், இதில் மறுபடியும் பயன் அடைய மாட்டார்கள்.

வருமான வரி செலுத்தும் பெண்கள் பயனடைய மாட்டார்கள், மத்திய மற்றும் மாநில அரசு பணியில் இருக்கும் பெண்களும் இதில் பயன் அடைய மாட்டார்கள்.

ஆனால் கண்டிப்பாக ஏழை எளிய வறுமை கோட்டிற்கு கீழ் மற்றும் வீடுகள் இல்லாத நடுத்தர குடும்பப் பெண்கள் நிச்சயம் ரூபாய் 1,000/- உரிமைத் தொகையை பெறுவார்கள் என கூறியிருக்கிறார்

திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஏற்படும் விளைவுகள்

எனினும் பல்வேறு விதமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் தினம்தோறும்,இந்த திட்டம் குறித்து கசிந்து வருவதால் தமிழ்நாட்டில் மக்கள் மிகுந்த மன குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இந்த திட்டம் செயல்படுமா செயல்படாமல் போகுமா ஒருவேளை இந்த திட்டம் செயல் படுத்தப்பட்டால் திடீரென்று தமிழகத்தில் உணவு தானியங்களின் விலை பல மடங்கு உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.

குறிப்பாக நாம் தமிழர் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள்.

திமுக அரசின் இந்த திட்டத்தை கடுமையாக விமர்சித்து வருகிறது, ஏனென்றால் திமுக அரசு மகளிருக்கு இலவச பயணச்சீட்டு திட்டத்தை கொண்டு வந்த பிறகு தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலை என்பது கடுமையாக உயர்ந்து விட்டது.

அட்டை அடிப்படையில் வழங்கப்படும் உணவு பொருட்கள்

PHH என்ற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும்,35 கிலோ அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ 1000 உரிமைத் தொகை கிடைக்கும் என்கிறார்கள்.

புதுமைப்பெண் திட்டத்தில் பயன் அடையும் கல்லூரி பெண்களின் தாயர்களும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும் என்கிறார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ரேஷன் அட்டையில் மாற்றம் எதுவும் செய்யத் தேவையில்லை என்றும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்தப்படும் என்றும்.

60 வயதிற்கு மேற்பட்டோர் வாங்கும் முதியோர் உதவி தொகையிலும் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி பல்வேறு விதமான தகவல்கள் குறிப்பாக சமூக வலைத்தளங்களிலும் அதி தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் இதுவரை அரசிடம் இருந்து.

இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது உண்மையான விஷயம்.

Tomato Price Continues to Rise in The Country

Joining our WhatsApp group

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

இ-பாஸ்போர்ட் அறிவிப்பு வந்தாச்சு

TN rs 1000 scheme ration card list details

தலை முடி உதிர்வதை 7 நாட்களில் தடுப்பது எப்படி

Tamil Nadu ITI Colleges courses list

What is your reaction?

Excited
2
Happy
5
In Love
3
Not Sure
0
Silly
1