செய்திகள்

ரூ 1000 உரிமைத் தொகை இப்படித்தான் கிடைக்குமா? TN rs 1000 Monthly women scheme new update

TN rs 1000 Monthly women scheme new update

TN rs 1000 Monthly women scheme new update

ரூ 1000 உரிமைத் தொகை இப்படித்தான் கிடைக்குமா? உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா?

தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெறும் சிறப்பு முகாம் நீங்கள் கலந்து கொண்டீர்களா..!

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஒரு அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பல்வேறு விதமான செய்திகள் அவ்வப்போது தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

பெண்களுக்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை குறித்து கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி நிதி அமைச்சர் அறிவித்தார்.

மகளிர் உரிமைத்தொகை மாதம் 1000 ரூபாய் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

தமிழகத்தில் 2 கோடி குடும்ப அட்டைகள் இருக்கிறது ஆனால் தமிழகத்தில் 1 கோடி மகளிருக்கு மாதம் 1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கு தகுதியான பயனாளிகள் தேர்வுகள் முழுவீச்சில் மறைமுகமாக நடந்து வருகிறது.

இந்த உரிமை தொகையை அரசு எதன் மூலம் எப்படி கொடுக்க போகிறது என்ற கேள்வி தமிழக மக்கள் இடத்தில் பல நாட்களாக இருக்கிறது.

நேரடியாகவே வங்கிக் கணக்கிற்கு உரிமை தொகை சென்று விடுமா என்று பலர் பல்வேறு விதமான கேள்விகளை சமூக வலைத்தளங்களில் அரசிடம் கேட்டு வருகிறார்கள்.

அதாவது மகளிர் சுய உதவி குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்கி இருப்பவர்கள்.

அந்த கடனை தவணை முறையில் செலுத்தி வருகிறார்கள் உரிமை தொகையை அந்த வங்கி கணக்கில் செலுத்தினால் கடனுக்கான தவணையாக பிடித்தம் செய்து விடுவார்கள்.

பல வங்கிகள் குறைந்தபட்ச இருப்பை (மினிமம் பேலன்ஸ்) கட்டாயமாக்கி இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த உரிமை தொகையை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தினால் அரசின் திட்டம் மக்களை நேரடியாக சென்றடையாது இதனால் பிரபலமடையாது.

இதுவே பெண்களின் கைகளில் அந்த உரிமைத் தொகை நேரடியாக கொடுத்தால் திமுகவுக்கு ஆதரவாக மாறுவார்கள் என்று அந்தக் கட்சியின் முக்கிய வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முக்கிய முடிவு

இப்படிப்பட்ட சூழலில் தமிழக அரசு முக்கியமாக ஒரு அதிரடி முடிவை மேற்கொண்டு வருகிறது.

குடும்பத்தில் வங்கி கணக்கு இல்லாத பட்சத்தில் குடும்பத் தலைவி பெயரில் அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக நேற்றைய தினம் சேலம் மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

செல்லக்குட்டிகாடு, சாமியப்பன் நகர், நிலவரப்படி, நாட்டமங்கலம், காட்டூர், அரசமரத்த காட்டூர், தம்பநாயக்கன்பட்டி, பகுதிகளில் அஞ்சல் கணக்கு தொடங்க முகம் நடந்துள்ளது.

தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களில் ஆங்காங்கே இது போன்ற சிறப்பு முகாம்கள் இனிவரும் நாட்களில் நடத்தப்படும் என தெரிகிறது.

உங்கள் குடும்பத்தில் வங்கி கணக்கு குடும்ப தலைவிக்கு இல்லையெனில் நீங்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு இலவசமாக அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம்.

தமிழக அரசு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் சிறப்பு முகாம்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

ஆதார் பான் கார்டு இணைப்பு நிலையை

ஒரு ரேஷன் கடையில் இருந்து மற்றொரு ரேஷன் கடைக்கு மாறுவது எப்படி

டிக்கெட்டை ரத்து செய்யும் பொழுது முழு பணத்தை பெறுவது எப்படி

யூடியூபில் வருகிறது புதிய மாற்றம்

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

What is your reaction?

Excited
2
Happy
3
In Love
2
Not Sure
2
Silly
2