
tn rs 1000 rupees scheme need 6 documents
ரூபாய் 1000 மகளிர் உரிமைத் தொகை பெற இந்த 4 சான்றிதழ்கள் மற்றும் 2 பேப்பர் இருந்தால் போதும்..!
ரூ 1,000/-மகளிர் உரிமைத் தொகை பெற உங்கள் கையில் இருக்க வேண்டிய 6 முக்கியமான சான்றிதழ்கள் குறித்து இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான ரூபாய் 1,000/- மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் மிகப் பிரமாண்டமாக தமிழகத்தில் தொடங்கப்படும்.
இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன் பெறலாம் என்பது குறித்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்துள்ளது.
அதன்படி ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் மேல் இருக்கும் மகளிர்கள் அரசு ஊழியர்கள், பெண் எம்எல்ஏக்கள், சொந்த வீடு, நிலம், வாகனம், இருப்பார்.
வருமானவரி செலுத்தும் பெண்கள் 3,600 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தும் பெண்கள் உள்ளிட்டோர் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் இல்லை என அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த திட்டத்தில் பயனாளிகளை அரசே தேர்வு செய்கிறது இதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களையும் விண்ணப்பங்களையும் கொடுக்கும் பணிகள் சென்னையில் தொடங்கியுள்ளது.
அதன்படி டோக்கனியில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் அந்த நேரத்தில் பெண்கள் மகளிர் உதவித்தொகை முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.
டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் செல்லும் பெண்கள் என்ன மாதிரியான ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து அரசு சில வழிமுறைகளை கொடுத்துள்ளது.
பயனாளிகள் வரும்போது டோக்கன்களையும், விண்ணப்பத்தையும், கொண்டு வந்தால் போதும் வருமான சான்றிதழ், மின் அட்டை, உள்ளிட்ட வேறு எதையும் கொண்டு வர தேவையில்லை.
டோக்கன் விண்ணப்பங்கள் மட்டுமில்லாமல் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது வங்கி பாஸ்பத்தகம் ஆகிய 4 அடிப்படை ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும்.
எனவே இந்த 4 ஆவணங்கள் டோக்கன் விண்ணப்பம் ஆகிய 6 தாள்களுடன் பயனாளிகள் வந்தால் போதும் ஆதார் எண், வங்கி கணக்கு எண், இல்லாவிட்டால் அதைப் பெற்று தர அரசு நடவடிக்கை எடுக்கிறது.
எனவே தகுதி உடைய பெண்கள் ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கு ரூபாய் 1,000/-வழங்கும்.
ஏற்கனவே இலவச பேருந்து பயணம் மூலம் பெண்களுக்கு மாதம் தோறும் குறைந்தபட்சம் ரூபாய் 1,000/- சேமிக்கப்படுகிறது என்கிறார்கள்.
அந்த வகையில் மாதம் தோறும் ரூபாய் 1,000/- உரிமை தொகை என்பது நிச்சயம் அந்தப் பெண்களின் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரம் மேம்படும் என்பது திமுக அரசின் தொலைநோக்கு திட்டமாக இருக்கிறது.
வரும் ஜூலை 24ஆம் தேதி அன்று தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தர்மபுரியில் இந்த திட்டத்தை முதன் முதலில் நேரடியாக தொடங்கி வைக்கிறார்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
What is really happening in Manipur
How to message on WhatsApp without saving number