செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கு இல்லாத பெண்களுக்கு முக்கிய அறிவிப்பை..!tn rs 1000 rupees scheme new update

tn rs 1000 rupees scheme new update

tn rs 1000 rupees scheme new update

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கு இல்லாத பெண்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு..!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக சென்னையில் நாளை முதல் வீடுகளுக்கு சென்று டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும் வங்கி கணக்கில்லாத பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து.

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார் திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் 1,000/- ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திமுக அரசு அமைந்த நிலையில் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதாக இரண்டு ஆண்டுகள் முதல் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று தொடங்கப்படுகிறது இந்த திட்டத்தில் பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது.

இந்த திட்டத்தில் பயன்பெற வருடத்திற்கு ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சொந்த வீடு, நிலம் இருக்கக் கூடாது, கார், ஆட்டோ, போன்ற வாகனங்கள் சொந்தமாக இருக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

இதை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டிக்கிறார்கள் ஆரம்பத்தில் எல்லா குடும்ப அட்டைகளுக்கும் ரூபாய் 1,000/- என தெரிவித்துவிட்டு தற்போது இதில் நிபந்தனைகள் வைப்பதா.

அப்படி பார்த்தால் இந்த திட்டத்தில் குறைந்த அளவில் பெண்கள் பயனடைவார்கள் என்ற விமர்சனம் இருக்கிறது.

இந்த நிலையில் பயனாளிகளை தேர்வு செய்யும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன அதில் விண்ணப்பதாரரின் பெயர், திருமண நிலை, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை, வாடகை வீடா அல்லது சொந்த வீடா உள்ளிட்ட 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தில் பயனடைய 18 வயதிற்கு மேல் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

இந்த நிலையில் வரும் 20ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பயனாளிகளுக்கு வீடுதோறும் ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன்களை விண்ணப்பங்களையும் வழங்குவார்கள் அந்த விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து.

டோக்கனில் உள்ள தேதியில் நேரத்தில் ரேஷன் கடையில் ஒப்படைக்க வேண்டும்.

அவற்றை மாவட்ட ஆட்சியர்கள் குழு ஆய்வு செய்து பயனாளிகளை கண்டறியும்.

இந்த திட்டத்திற்கு கைவிரல் ரேகை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவிக்கையில் சென்னையில் நாளை முதல் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான டோக்கன் விண்ணப்பம் வழங்கப்படும்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டப் பணியில் 3,400 ஊழியர்கள் ஈடுபட்டபட்டுள்ளார்கள்.

விண்ணப்பம் டோக்கன் உள்ளிட்டவற்றை வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குவார்கள் இரண்டு கட்டமாக மொத்தம் 1428 ரேஷன் கடை மூலம் டோக்கன்கள் வழங்கப்படும்.

நியாய விலை கடைகள் முன்பு டோக்கன் குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வழங்கப்படும்.

அதுபோல் வங்கி கணக்கில்லாத பெண்களுக்கு கூட்டுறவு வங்கி மூலம் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மகளிர் உதவித்தொகை தொடர்பான பொதுமக்கள் எந்த குழப்பமும் அடைய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

Foods that prevent heart disease in tamil

TN provides loan assistance to start business

How to download e PAN card in tamil 2023

இந்தியாவின் சிறந்த 10 இன்சூரன்ஸ் நிறுவனங்கள்..!

Post office best scheme details in tamil

What is your reaction?

Excited
1
Happy
0
In Love
1
Not Sure
0
Silly
0