
TN rs 1000 scheme application verification process starting
கலைஞர் மகளிர் ரூபாய் 1000/- உரிமைத் தொகை உங்களுடைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா.
சரிபார்ப்பு பணிகள் இன்று தொடக்கம்,எப்பொழுது தகுதி வாய்ந்த பட்டியல் வெளியிடப்படுகிறது..!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான 2ம் கட்ட முகம் தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் விண்ணப்பம் சரிபார்க்கும் பணி தமிழ்நாடு முழுவதும் தொடங்குகிறது.
அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15 முதல் காஞ்சிபுரத்தில் மிகப் பிரமாண்டமான விழாவில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது என திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கடந்த மாதம் இதனை பெற தகுதி உடைய பெண்கள் யார் தகுதியற்றவர்கள் யார் என அறிவித்து முகாம்களை தொடங்கியது.
வெள்ளிக்கிழமை முதல் கட்ட முகாம்கள் நிறைவடைந்த நிலையில் சுமார் 80 லட்சத்திற்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் நேற்று 14 ஆயிரத்துக்கு அதிகமான இடங்களில் இரண்டாம் கட்ட முகம் தொடங்கியுள்ளது.
நகர்ப்புறங்களை மையமாக வைத்து இந்த முகாம்கள் ஏற்படும் செய்யப்பட்டுள்ளது,இந்த முகாம்களில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் பயோமெட்ரிக் அல்லது ஒருமுறை கடவுச்சொல் (OTP) தரவை ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்புக்காக வழங்க நான் இதன் மூலம் ஒப்புக்கொள்கிறேன்.
பெண்கள் சமர்ப்பிக்க வேண்டிய தகவல்கள்
எனது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கு மேல் இல்லை,எனது குடும்ப உறுப்பினர்கள் எவரும் ஆண்டு வருமான ரூபாய் 2.5 லட்சத்திற்கு மேல் ஈட்டி வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் இல்லை.
எனது குடும்பத்தில் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ஈட்டி தொழில்வரி செலுத்துபவர் யாருமில்லை.
எனது குடும்பத்தில் மத்திய மாநில அரசு ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள், மற்றும் ஓய்வூதியதாரர்கள் யாரும் இல்லை.
எனது குடும்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தவிர யாரும் இல்லை.
எனது குடும்பத்தில் யாரும் சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கவில்லை.
எனது குடும்பத்தில் ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி GST செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் யாரும் இல்லை.
எனது குடும்பத்தில் முதியோர் ஓய்வூதியம் (OAP),விதவை ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் ஓய்வூதியம், போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதிய மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை.
எனது குடும்ப உறுப்பினர்களுக்கு கூட்டாக 5 ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கர் மேல் புஞ்சை நிலம் இல்லை.
விண்ணப்பத்தில் என்னால் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை.
தவறான தகவல்களை கொடுத்து கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெற்றது கண்டறியப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் அறிவேன்.
எனது 11 உறுதிமொழிகள் வழங்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
இந்த உறுதிமொழிகளின் அடிப்படையில் விண்ணப்ப படிவங்களின் சரியான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கும் பணிகள் இன்று தொடங்குகிறது.
அடுத்த கட்டமாக தகுதி வாய்ந்த பெண்களின் பட்டியல் அடுத்த மாதம் 10ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என திமுக சார்பாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
MI INDEPENDENCE DAY FESTIVAL BEST OFFERS
Ather 450S Electric Scooter Specifications Price