
TN rs 1000 scheme eligible women list
யார் யாருக்கெல்லாம் ரூ 1000 கிடைக்காது வருமான வரியா விரைவில் வருகிறது தமிழக அரசின் புதிய திட்டம் என்ன..!
பெண்களுக்கு ரூ 1,000/- உரிமைத் தொகை குறித்து சில தகவல்கள் அரசின் வட்டாரத்தில் கசிந்துள்ளது.
அத்துடன் எப்போது பெண்களுக்கு 1,000/- ரூபாய் வழங்கப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை 1,000/- ரூபாய் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்காக ரூபாய் 7,000/- கோடி ஒதுக்கப்பட்டுள்ளது ஒரு ஆண்டிற்கு.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், நடைபாதையில் வணிகம் செய்திட பெண்கள், மீனவ பெண்கள், கட்டுமான தொழில் புரியும் பெண்கள்.
சிறிய கடைகள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் சொர்ப்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்கள்.
வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் பணிபுரியக்கூடிய பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதிய பெண்மணிகள் திட்டத்தில் இந்த பயன்பெறப் போகிறார்கள்.
அரசு அறிவித்துள்ள முக்கிய அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாத சம்பளம் வாங்கும் நபர்களுக்கு, இந்த பணம் கிடைக்காது.
ஒவ்வொரு குடும்பத் தலைவியின் வங்கி கணக்கில் ரூபாய் 1,000/- பணம் கிடைக்கும் வகையில் அரசு ஒரு கோடி பெண்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எனவே இந்த பணம் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிக்கு சென்றடையும் வகையில் விதிமுறைகளும் வகுக்கப்படுகிறது.
அதனால்தான் நேற்று முன்தினம் இதற்கான ஆலோசனை கூட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் நடத்தி இருந்தார்.
ரேஷன் கார்டுகள் அடிப்படையில் குடும்பத் தலைவிகள் தேர்வு செய்வது அதில் அவர்களது ஆண்டு வருமானத்தை ஒப்பிட்டு பார்ப்பது.
வயது வரம்பு நிர்ணயிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நிபந்தனைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
புதிய நெறிமுறைகள் என்ன
அந்த நெறிமுறைகள் வந்த பிறகுதான் ரூ. 1000/- பெறுவதற்கான விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது அந்த மனுக்களை பரிசீலனை செய்து தகுதியான மகளிர் ரூ. 1000/- பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
மொத்தத்தில் தகுதியானவர்கள் யார் என்பதை வைத்து ரேஷன் கார்டை அடிப்படையாக வைத்து பணம் வழங்கப்படும் என தெரிகிறது.
குடும்பத் தலைவிகளின் வயதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது,அதாவது 30 வயதிற்கு மேற்பட்ட குடும்ப தலைவிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என தெரிகிறது.
அதேபோல் வருமான வரி செலுத்தாதவர்கள் என்ற கண்டிஷன் முக்கியமாக இடம் பெறும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் சொந்த நிலம் இருக்கிறதா என்பதிலும் கணக்கில் கொல்லப்படுமாம்.
வரும் செப்டம்பர் 15 இல் உரிமைத்தொகை கொடுக்க முதல்வர் முடிவு செய்துள்ளார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளதால் வழிகாட்டு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஏழை, எளிய, வறுமை கோட்டிற்கு, கீழ் இருக்கும் பெண்கள் நிச்சயம் இதில் பயன்பெற வேண்டும் என அரசு உறுதியாக இருக்கிறது.
அதனால் மிக சரியான நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என முதலமைச்சர் கண்டிப்புடன் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளதால் இதற்கான பணிகள் மறைமுகமாக மிக வேகமாக நடந்து வருகிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
இ-பாஸ்போர்ட் அறிவிப்பு வந்தாச்சு
TN rs 1000 scheme ration card list details