
TN rs 1000 scheme new rules and regulations
பெண்களுக்கு மாதம் தோறும் 1,000/- உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை முக்கிய முடிவுரை அறிவிக்கிறார்.
இந்த திட்டம் தொடர்பாக நாளை முக்கிய அறிவிப்பு பொதுவெளியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கு மாதம் 1,000/- உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் இன்னும் தமிழகத்தில் நடைமுறைக்கு வராமல் இருக்கிறது.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கல்களால்.
இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் இருந்தது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்த திட்ட முக்கியமாக இருந்தது.
இந்த திட்டம் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது,என்பதை என்னால் தலை நிமிர்ந்து கூற முடியும்.
கட்டணமில்லாத பேருந்து பயணம் மூலம் 266 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளார்கள்.
குடும்பத் தலைவிக்கு 1,000/- ரூபாய் உரிமை தொகை செப்டம்பர் மாதத்தில் இருந்து வழங்கப்படும்,இதற்காக ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 63 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை தற்போது 30 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டை நோக்கி 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளோம் மாநில உள்நாட்டு உற்பத்தி 6.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
துறை வாரியாக என்னால் சாதனைகளை அடிக்க முடியும் இன்னும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவோம் எங்களுக்கு எதிராக வதந்தி பரப்ப நினைத்தவர்கள் தோல்வி அடைந்துள்ளார்கள்.
நாங்கள் தேர்தலை மட்டும் வெல்லவில்லை மக்கள் மனதையும் வென்றுள்ளோம் நாம் செய்வது ஒரு இனத்தின் கொள்கையின் அடிப்படையில் கோட்பாடு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய மாற்றங்கள் மாற்றப்பட்டுள்ளது
இந்த உரிமை தொகை ஏழ்மையான குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே கொடுக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டது,அதற்காக பட்டியல் எடுக்கும் பணி தற்போது மறைமுகமாக நடந்து வருகிறது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்கள் தமிழ்நாட்டில் 2.15 கோடி குடும்ப அட்டைகள் உள்ளது.
இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுக்க இயலாத சூழ்நிலை இருக்கிறது இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும்.
அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்து நபர்கள், சொந்த வீடு வைத்திருப்பவர்கள், ஆகியோருக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படாது என்று அரசு தரப்பட்டார்கள் தெரிவிக்கிறது.
இந்த திட்டம் குறித்து சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார் ஆலோசனை தொடர்ச்சியாக மகளிர் உரிமைத்தொகை திட்ட அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த திட்டத்திற்காக பயணிகள் இன்னும் முழுமையாக தேர்வு செய்யப்படவில்லை பயணிகள் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்பாக.
நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக முதல் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முக்கியமான முடிவுகள் பொதுவெளியில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்