
TN rs 1000 women scheme new update news
கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1,000/- ரூபாய் பெறுவதற்கு டோக்கன் கொடுக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000/- ரூபாய் கொடுக்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் தொடங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதற்கான பல்வேறு விதிகள் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது.
இந்த ரேஷன் கடைகளில் 3-4 கடைகளுக்கு ஒரு முகாம் என்று 250 முகாம்கள் முதல் கட்டமாக அமைக்கப்படும் அதன் பிறகு இரண்டு மூன்று கட்டங்களில் மற்ற ரேஷன் கடைகளுக்கு முகாம்கள் அமைக்கப்படும்.
இந்த முகாம்களில் தினமும் 80 முதல் 100 டோக்கன்கள் வழங்கப்படும்,இந்த டோக்கன்கள் வாங்கிய நபர்கள் மட்டுமே விண்ணப்பங்கள் அளிக்கப்படும் சென்னையில் மொத்தம் 1,417 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது.
மொத்தம் 17.18 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளார்கள் இவர்களில் பெரும்பாலும் 10 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முதல் கட்டமாக 12 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட உள்ளன பலர் விண்ணப்பிக்க வாய்ப்புகள் உள்ளதால் கூடுதல் விண்ணப்பங்களை அச்சு அடிக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 21 வயதை கடந்த பெண்கள் பணம் கொடுக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால்.
உங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம் ஒரே ரேஷன் கார்டில் 2-3 பெண்கள் 21 வயதிற்கு மேல் உள்ளார்கள் அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம்.
இவர்கள் எல்லோருக்கும் திருமணம் நடந்திருந்தால் அவர்களும் தனி ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே தனித்தனியாக பணம் கொடுக்கப்படும்.
ஒரே ரேஷன் கார்டில் பணம் தரப்படாது ஒரு ரேஷன் கார்டுக்கு ஒருவருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும்.
குடும்பத் தலைவிகளுக்கு என்ன நிபந்தனை
இந்த திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியான குடும்ப தலைவிகள் யார் யார் குடும்பத் தலைவிகள் என்ற தகுதி பெறுவார்கள் யார் என்ற விவரத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக கருதப்படுவார் ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் விண்ணப்பிக்கலாம்.
குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.
குடும்ப அட்டையில் ஆண் குடும்ப தலைவராக குறிப்பிட்டிருந்தாலும் அந்த குடும்பத் தலைவரின் மனைவி குடும்ப தலைவியாக கருதப்படுவார்.
திருமணம் ஆகாத தனித்த பெண்கள் கைம்பெண்கள் திருநங்கைகள் தனிமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களுக்கும் குடும்ப தலைவிகளாக கருதப்படுவார்.
அதேபோல் திருமணம் ஆகாத பெண்கள் கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்.
இந்த திட்டம் குறித்து தினம் தோறும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு வகையான தகவல்கள் வெளியாகி மக்களை குழப்பி வருகிறது.
இந்த திட்டம் செயல்படுத்தினால் மட்டுமே யார் யாருக்கு பணம் கிடைக்கும் என்பது குறித்து முழுமையாக தெரியவரும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to download e PAN card in tamil 2023