
TN Women Rs 1000 scheme details new update
2 கேஸ் சிலிண்டர் இருக்கிறதா? புதிய ரேஷன் கார்டு+மகளிருக்கான ரூபாய் 1000 தொகை தமிழக அரசு மறைமுகமாக புதிய திட்டத்தை செயல்படுத்துகிறது..!.
பெண்களுக்கான உரிமை தொகை வழங்குவதற்கான திட்டப்பணிகள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உள்ளது என இது குறித்து திமுகவின் முக்கிய புள்ளி ஒன்று மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
மகளிர்க்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்தநாள் தினமான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ரேஷன் அட்டையில் மாற்றம் எதுவும் செய்யத் தேவையில்லை என்று தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன்.
அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு திடீரென்று ஆயிரக்கணக்கான நபர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணப்பிக்க துவங்கி விட்டார்கள்.
ஆனால் ஒரே நேரத்தில் இப்படி பல்லாயிரம் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்ததால் தமிழக அரசுக்கு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதைப்பற்றி மறைமுகமாக தமிழக அரசு ஒரு சர்வே எடுத்துள்ளது ஒரே வீட்டில் வசிப்பவர் தாய் தந்தை பெயரில் புதிய கார்டு, மகன் மருமகள் பெயரில் இன்னொரு கார்டு கேட்டு விண்ணப்பித்து வருவதாக தெரிகிறது.
இதனால் உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை மாதம் தோறும் பல ஆயிரத்தை கடக்கிறது ஒவ்வொரு மாவட்டத்திலும்.
விண்ணப்பித்த அனைவருக்கும் புதிய கார்டு கொடுப்பது தற்போது சிக்கலாகியுள்ளது,புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பங்களின் தகுதியான கார்டுகளை தேர்ந்தெடுக்க.
விண்ணப்பத்துடன் இணைத்து இருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பதை எல்லாம் அதிகாரிகள் முதலில் ஆய்வு செய்கிறார்கள்.
அதன்பிறகு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் முகவரிக்கு நேரடியாகவே சென்று வீட்டை ஆய்வு செய்கிறார்கள்.
இரண்டு சிலிண்டர்கள் இருக்கிறதா
அந்த வீட்டில் கிட்சன் ஒன்று உள்ளதா அல்லது இரண்டு உள்ளதா அடுப்பு ஒரு அடுப்பா? இரண்டு அடுப்பா? யார் பெயரில் இருக்கிறது.
ஒரு கேஸ் சிலிண்டரா அல்லது இரண்டு கேஸ் சிலிண்டரா அது யார் பெயரில் உள்ளது என்பதை எல்லாம் நேரில் சென்று பார்க்க துவங்கியுள்ளார்கள்.
இந்த ஆய்வு பணி முடியவே எப்படியும் மூன்று மாதம் ஆகும் என்கிறார்கள் பிறகு விண்ணப்பதாரர்களுக்கு புதிய ரேஷன் கார்டு கிடைக்கும் என்கிறார்கள்.
அமைச்சர் வெளியிட்ட உத்தரவு என்ன
இந்த நிலையில் 1000/- ரூபாய் உரிமைத் தொகை குறித்து மற்றொரு தகவல் கசிந்துள்ளது.
நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளதால் இதற்கான பணிகள் தற்போது மறைமுகமாக வேகம் எடுத்து வருகிறதாம்.
மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கு இன்னும் 2 மாதம் காலமே உள்ளதால் பணிகள் துரிதமாக உள்ளதாம்.
இவைகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளாராம்,இதையடுத்து குடும்ப அட்டைகள் அடிப்படையில் தகுதி வாய்ந்த மகளிர் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
ஒருவேளை இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் திமுக அரசின் இன்னொரு சாதனையாக இருக்கும் என பேசப்படுகிறது.
முதல்வர் தலைமையில் ஆலோசனை
இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது ஆலோசனை நடத்துகிறார்.
நீதித்துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை, உள்ளிட்ட துறைகளில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நடைமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 15ஆம் தேதி தமிழக முழுவதும் மிகப் பெரிய அளவில் பிரமாண்டமாக இந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கனவில் உள்ளாராம்.
வாரிசு சான்று வாங்க தேவையான ஆவணங்கள்
How to Patta Name Transfer Online in tamil
அசல் சொத்து பத்திரம் தொலைந்து விட்டால்