
TNPSC announcement Aadhar update has been extended
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2,2A க்கான தேர்வுக்கான அறிவிப்பு கடந்த வாரம் தமிழகத்தில் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து தற்போது TNPSCயின் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் விவரங்களை இணைப்பதற்கு கால அவகாசம் இப்பொழுது மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது.
ஆதார் இணைப்பு கட்டாயம்
தமிழகம் முழுவதும் அரசு பணியிடங்களுக்கு TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் நிரப்பப்படுகிறது.
அத்துடன் இந்த ஆண்டுக்கான தேர்வுக்கான கால அட்டவணையை அன்மையில் தேர்வாணையம் வெளியிட்டது.
இதில் குரூப்-2,2Aக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்றும் குரூப் 4 க்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குரூப் 2 க்கான அறிவிப்பை கடந்த வாரம் TNPSC தலைவர் அறிவித்தார்.
இந்த வருடத்திற்கான குரூப்-2,2A தேர்வு வருகின்ற மே மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க வருகின்ற மார்ச் 23-ஆம் தேதிக்குள் பதிவு செய்து முடித்திருக்க வேண்டும்.
இதனால் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்களை தீவிரமாக இதற்கு தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு.
மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு
தமிழகத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் பொறியியல் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வெளியில் வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் கலைக்கல்லூரி, டிப்ளமோ, நர்சிங், வழக்கறிஞர், என பல்வேறு துறைகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வெளியில் வருகிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை இது ஒருபுறமிருக்க கடந்த 2 வருடத்திற்கு முன்பு.
தமிழே தெரியாத வட இந்தியா மாணவர்கள் மற்றும் கேரளா மாணவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு எழுதியது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தமிழ் மொழி தெரியாத வட இந்திய இளைஞர்கள் தமிழக அரசு துறையில் பணியில் அமர்த்தப்பட்ட.
மதுரையில் ஒரே வழித்தடத்தில் இரண்டு ரயில்கள் செல்வதற்கு அனுமதி அளித்தது.
இதற்கு இதெல்லாம் மொழி புரியாத ஒரே காரணத்தினால் நடைபெற்றது, இதற்காக சென்னை உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக தமிழக அரசுக்கு எதிராக எழுப்பியது.
இப்பொழுது ஆட்சி மாற்றம் நடைபெற்று விட்டு திமுக அரசு இதற்கு சரியான ஒரு தீர்வை கொடுத்துள்ளது.
அதாவது தமிழக அரசு துறைகளில் இருக்கும் காலி பணியிடங்களில் தமிழக மாணவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தமிழ் மொழிக்கு தனியாக ஒரு தாள் தேர்வு இருக்கும், அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அடுத்தடுத்த தாள் திருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
முந்திரி பழம் நன்மைகள் என்ன..!
இந்தத் தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்ப்பதற்கு தேர்வாணையம் புதிய வழிமுறை ஒன்றை கொண்டுவந்துள்ளது.
அதாவது TNPSC நிரந்தர பதிவு எண் வைத்திருப்பவர்கள் கட்டாயம் தங்களின் ஆதார் குறித்த விவரங்களை.
பிப்ரவரி மாதம் 28ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது, ஆனால் இதற்கு கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
Gramathu Nethili karuvadu kulambu seivathu eppadi
அதன்படி ஆதார் எண்ணை இணைக்க வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, என்று TNPSC தேர்வாணையம் இப்பொழுது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆனால் இதில் குரூப் 2 2A தேர்வுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் வருகின்ற மார்ச் 23-ஆம் தேதிக்குள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.