
TNPSC group 4 and vao exam full details
TNPSC குரூப்-4 தேர்வு எழுத திட்டமிடும் நபர்களின் கவனத்திற்கு A&Z முழு தகவல்கள் இதோ..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) 2022ம் வருடம் நடத்தவிருக்கும் குரூப்-4 தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் தேர்வு தொடர்பான.
சில முக்கியமான விவரங்களை முழுவதும் தெரிந்து கொள்வது அவசியமாகும் அதனை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தில் அரசு வேலைக்கு தொடர்பான எந்த ஒரு தேர்வுகளும் நடைபெறவில்லை இப்பொழுது.
2022ஆம் ஆண்டு காலியாக இருக்கும் அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில துறைகளில் ஏற்படும் காலிபணியிடங்களுக்கான போட்டி தேர்வு குறித்த முழு அட்டவணையை அதற்கு முந்தைய ஆண்டில் வெளியிடுவது வழக்கமான நிகழ்வாக இருக்கிறது தமிழ்நாட்டில்.
அதன்படி வரவிருக்கும் 2022 ஆம் ஆண்டிற்கான (TNPSC) தேர்வு கால அட்டவணை கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டது.
அந்த அட்டவணையின் படி குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதத்தில் வெளியாகும், அறிவிப்புகள் வெளியான 40 நாட்கள் கழித்து தேர்வு நடத்தப்படும்.
குரூப்-4 தேர்வு எழுத காத்திருக்கும் நபர்கள் சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.
அந்தவகையில் இந்த குரூப் 4 தேர்வில் கலந்து கொள்வதற்கு கட்டாயம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், இந்த தேர்வுக்கு பல லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டியிடுவார்கள்.
மேலும் எழுத்துத் தேர்வை மட்டும் அடிப்படையாகக் கொண்டே இருப்பதால் இதற்கு கடும் போட்டி தமிழகத்தில் நிலவுகிறது.
இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அவர்கள் சொந்த ஊரில் பணி அமர்த்தப்படுவார்கள் என்பது இந்தத் தேர்வில் கூடுதல் சிறப்பாக இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் குரூப்-4 தேர்வை பல லட்சக்கணக்கான இளைஞர்கள் எழுதும் நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மறுபடியும் தமிழ்நாட்டில் போட்டித்தேர்வு நடத்தப்படுவதால் இதற்கான போட்டி கடுமையாக அதிகரித்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குரூப்-4 மூலம் என்னென்ன பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது தகுதி தேர்வுக்கு எப்படி தயார்யாகுது குறித்து முழு விபரங்களையும் காணலாம்.
பதவி பற்றிய முழு விவரங்கள்
கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer _
தட்டச்சர் (Typist)
இளநிலை உதவியாளர் (Junior Assistant )
சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)
நில அளவர் (Field Surviva )
வரைவாளர் (Draftsman )
வரித்தண்டலர் (Bill Collector )
கல்வித்தகுதி பற்றிய முழு விவரங்கள்
தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தாளர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்பக் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலையில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் கூடவே அதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதன்மையாக இருக்கிறது இந்த தேர்வுகளுக்கு.
வயது வரம்பு
பொதுவாக வயது வரம்பு 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும்.
பிரிவுக்கு ஏற்றபடி அரசு வயதுவரம்பில் பல்வேறு தளர்வுகளை வழங்கியுள்ளது, அதனைப் பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்வது அவசியம்.
மொழிப்பாடம்
குரூப் 4 தேர்வில் முதல் 100 வினாக்கள் தமிழ் மொழி பாடத்தில் இருந்து கட்டாயம் கேட்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வில் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
இந்த மதிப்பெண்கள் இறுதி மதிப்பீடு கணக்கிடுதலில் சேர்த்துக்கொள்ளப்படும்.
இந்த மதிப்பெண்கள் குறையும் பட்சத்தில் அடுத்த தாழ்வுகள் மதிப்பீடு செய்யப்படாது என அரசு இப்பொழுது புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்தப் பாடப் பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்கள், தமிழ் தொண்டும், ஆகிய தலைப்புகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
பொது அறிவு
இப்பிரிவில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும்
இதில் 75 பொது அறிவு வினாக்கள் 25 திறனறி தேர்வு அடங்கும்.
பொதுஅறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான பாடங்கள் பற்றிய விவரங்கள்
தமிழ்மொழி பாடப்பிரிவில் 10ம் வகுப்பு பாடத்தில்யிருந்து கேள்விகள் கேட்கப்படும் இதில் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, தொடர்ந்து 6 முதல் 10-ஆம் வகுப்பு தமிழ் பாடப் பாடத்தில்யிருந்து கேள்விகள் கேட்கப்படலாம்.
கூடுதலாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு தமிழ் புத்தகங்களையும் நீங்கள் படித்துக் கொள்வது நல்லதாக உங்களுக்கு அமையும், இந்த அடிப்படையில் தேர்வுக்கு நீங்கள் தயார்ரானால் சுமார் 90 முதல் 95 மதிப்பெண்கள் எடுக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
தொடர்ந்து பொது அறிவு பகுதியிலும், பெரும்பாலான 6 முதல் 10ம் வகுப்பு வரையில் உள்ள பள்ளி பாடப் புத்தகங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
உலக மற்றும் நாட்டுநடப்புகளையும் நீங்கள் கட்டாயம் அறிந்து வைத்துக் கொள்வது உங்களுடைய மதிப்பெண்களை அதிகரிப்பதற்கு வழிவகை செய்யும்.
நடப்பு நிகழ்வுகளை பொருத்தவரை தேர்வு அறிவிப்பிற்கு முந்தைய கணக்கில் 1 வருடம் வரையில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் கனகச்சிதமாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
Indian household average wealth is just
கணிதப் பாடங்களை பொறுத்த அளவு 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள படங்களிலிருந்து உள்ள கணக்குகளை தினமும் 2 முதல் 2 மணி நேரம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.