
TNPSC group 4 exam date in 2022 in tamil nadu
TNPSC குரூப் 4VAO 5255 காலிப்பணியிடங்கள் கல்வித்தகுதி பதிவுகள் முழுவிவரம் வெளியிடப்படுகிறது.
குரூப் 4VAO தேர்வு குறித்த அறிவிப்பு இந்த மாத மத்தியில் வெளியாகும் என்று தமிழ்நாடு தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மேலும் அறிவிப்பு வெளியாகி 75 நாட்களுக்குள் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டரை வருடங்களாக அரசுத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது.
அது மட்டுமில்லாமல் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இளைஞர்கள் இந்த அரசு பணியிடங்களில் சேருவதற்கு படித்து வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருப்பதால் காலிப்பணியிடங்கள் அதிகமாக இருக்கிறது, அதற்கு ஏற்ப மாணவர்களின் எண்ணிக்கையும் இருக்கிறது.
இந்த தேர்வு குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
TNPSC குரூப் 4VAO தேர்வு
அதற்கான அறிவிப்பு இந்த மாத மத்தியில் வெளியிடப்படும் என தமிழ்நாடு தேர்வாணையம் அறிவித்துள்ளது, குரூப் 2 2A குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதில் வருகின்ற மே மாதம் 21ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறும் என்றும் ஜூன் மாதத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தற்போது 4VAO தேர்வு குறித்து அறிவிப்பை எதிர்பார்த்து இருக்கிறார்கள், குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று TNPSC தேர்வாணையத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
இந்த குரூப் 4 தேர்வு கிராம நிர்வாக அலுவலர், வரைவாளர், நில அலுவலர், வரித்தண்டலர், இளநிலை உதவியாளர், பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வுக்கு குறைந்தபட்சம் விண்ணப்பிக்கும் நபர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
குரூப் தேர்வில் ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தமிழ் மொழி தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டும்.
அப்பொழுதுதான் மேலும் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே மற்ற பாடப்பகுதி வினாத்தாள்கள் திருத்தப்படும் என தமிழ்நாடு அரசு அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விரைவில் அறிவிப்பு வெளியாகும்
இந்த மாதம் குரூப்-4 தேர்வு கால அட்டவணை வெளியாகும் என்று TNPSC தேர்வாணையத் தலைவர் ஊடகங்கள் வாயிலாக அறிவித்துள்ளார்.
இந்தத் தேர்வின் பாடத்திட்டம் தயார் செய்யும் பணி இன்னும் சில நாட்களில் முடிவடைந்து விடும்.
அதன் பின்னர் பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
தேர்வாளர்கள் நிரந்தர கணக்கு பதிவு மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள் எடுத்து வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்கள் கட்டாயம் இனைத்திருக்க வேண்டும்.
முன்னதாக நிரந்தர கணக்கு வைத்திருக்கும் தேர்வாளர்கள் தங்களுடைய ஆதார் விவரங்களை பிப்ரவரி மாதம் 28ஆம் தேதிக்குள் இணைத்து இருக்க வேண்டும் எனவும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆனால் இதற்கான கால அவகாசம் இப்பொழுது ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சொட்டை விழுந்த இடத்தில் முடி வேகமாக வளர வேண்டுமா..!
தேர்வில் முறைகேடுகளை தவிர்ப்பதற்கு இந்த ஆதார் அட்டை விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு தேர்வாணையம் அறிவித்துள்ளது.
TNPSC announcement Aadhar update has been extended
கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக இருப்பதால் இனி வரும் காலங்களில் அரசு பணியில் காலியாக இருக்கும் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.